என்ன தான் இ - பேங்கிங் , மொபைல் பேங்கிங் , UPI பண பரிமாற்றம் என்று இருந்தாலும் சில அத்தியாவசிய பணிகளுக்கு வங்கிகளுக்கு தான் செல்ல வேண்டும். பண பரிமாற்றத்தில் சிக்கல், வங்கி தகவல்களில் மாற்றம், பணம் போட என சில வங்கி சேவைகள் பெறுவதற்காக வங்கிகளுக்கு நேரடியாக செல்ல வேண்டி இருக்கும்.
அப்படி வங்கிகளுக்கு போக வேண்டும் என்று நினைத்து ஒரு சில நாட்கள் கிளம்பி போவோம். அங்கே பார்த்தால் வங்கி மூடியிருக்கும். வங்கி விடுமுறை தினங்கள் குறித்து தெரியாமல் இருக்கும் பட்சத்தில் இப்படி வீண் அலைச்சல் ஏற்படும்.
2023 ஆம் ஆண்டின் முதல் மாதமான ஜனவரி முடிவடையவுள்ள நிலையில், அடுத்த மாதமான பிப்ரவரி மாதத்தில் எத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்கிற தகவல் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதனால் பிப்ரவரி மாதத்தில் வங்கிகளில் வேலை இருந்தால் இந்த தேதிகளை விட்டுவிட்டு மற்ற நாட்களில் செல்லுங்கள் மக்களே... !
பிப்ரவரி 2023 வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல்:
பிப்ரவரி 5, 2023 ஞாயிற்றுக்கிழமை - (இந்தியா முழுவதும்)
பிப்ரவரி 11, 2023 இரண்டாவது சனிக்கிழமை - (இந்தியா முழுவதும்)
பிப்ரவரி 12, 2023 ஞாயிற்றுக்கிழமை - (இந்தியா முழுவதும்)
பிப்ரவரி 15, 2023 லுய்-நகை-நி - (ஹைதராபாத்தில் மட்டும் விடுமுறை )
பிப்ரவரி 18, 2023 மகாசிவராத்திரி - (அகமதாபாத், பேலாப்பூர், பெங்களூரு, ஹைதராபாத், கான்பூர், லக்னோ, மும்பை, நாக்பூர், ராய்ப்பூர், ராஞ்சி, சிம்லா, திருவனந்தபுரம் ஆகிய சில நகரங்களில் மட்டும் விடுமுறை )
பிப்ரவரி 19, 2023 ஞாயிற்றுக்கிழமை - (இந்தியா முழுவதும்)
பிப்ரவரி 20, 2023 மிசோரம் மாநில நாள் - ( ஐஸ்வாலில் மட்டும் )
பிப்ரவரி 21, 2023 லோசர் - (காங்டாக்கில் மட்டும் )
பிப்ரவரி 25, 2023 மூன்றாவது சனிக்கிழமை - (இந்தியா முழுவதும்)
பிப்ரவரி 26, 2023 ஞாயிற்றுக்கிழமை - (இந்தியா முழுவதும்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bank holiday, Business, Holiday, Tamil News