ஹோம் /நியூஸ் /வணிகம் /

இந்தியாவிற்கு வரும் அந்நிய நேரடி முதலீடு சரிவு... மொரிஷீயஸை பின்னுக்குத் தள்ளிய சிங்கப்பூர்!

இந்தியாவிற்கு வரும் அந்நிய நேரடி முதலீடு சரிவு... மொரிஷீயஸை பின்னுக்குத் தள்ளிய சிங்கப்பூர்!

அன்னிய நேரடி முதலீடு

அன்னிய நேரடி முதலீடு

இதுவரை இந்தியாவில் அதிக முதலீடுகளைச் செய்யும் நாடாக மொரீஷியஸ் இருந்தது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

    வெளிநாடுகளிலிருந்து இந்தியாவில் செய்யப்படும் அந்நிய நேரடி முதலீடு கடந்த 6 வருடங்களில் முதல் முறையாக 2018-2019 நிதியாண்டில் சரிந்துள்ளது.

    அந்நிய நேரடி முதலீடு சரிவால், இரண்டாவது முறையாக பதவிக்கு வரும் நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு பொருளாதார கொள்கைகள் வகுப்பது சவால்கள் மிகுந்ததாக இருக்கும் என கூறப்படுகிறது.

    இந்திய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், வெளிநாடுகளிலிருந்து இந்தியாவில் செய்யப்படும் அந்நிய நேரடி முதலீடு 2018-2019 நிதியாண்டில் 1 சதவீதம் (3100 கோடி ரூபாய்) சரிந்து 3 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    வெளிநாடுகளிலிருந்து இந்தியாவில் செய்யும் முதலீடுகள் மூலமாகக் கிடைக்கும் ஆதாயத்திற்கு ஏப்ரல் 1-ம் தேதி முதல் வரி விதித்திருப்பதே சரிவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

    முக்கியமாக டெலிகாம் மற்றும் ஃபார்மா துறையில் தான் அந்நிய நேரடி முதலீடு அதிகளவில் சரிந்துள்ளது. சென்ற நிதியாண்டில் டெலிகம்யுனிகேஷன்ஸ் துறையில் வெளிநாட்டு முதலீடு 57 சதவீதம் குறைந்து 1 லட்சத்து 88 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. ஃபார்மா துறையில் அந்நிய முதலீடு 74 சதவீதம் சரிந்து 1859 கோடி ரூபாயாக உள்ளது.

    இதுவரை இந்தியாவில் அதிக முதலீடுகளைச் செய்யும் நாடாக மொரீஷியஸ் இருந்தது. ஆனால் இந்த முறை மொரீஷியஸை பின்னுக்குத் தள்ளி சிங்கப்பூர் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

    2017-2018 நிதியாண்டுடன் ஒப்பிடும் போது 2018-2019 நிதியாண்டில் இந்தியாவில் மொரீஷியஸ் செய்யும் முதலீடு 2 சதவீதம் சரிந்துள்ளது. மறுபக்கம் சிங்கப்பூர் செய்யும் முதலீடு 2 சதவீதம் அதிகரித்துள்ளது.

    மேலும் பார்க்க:

    Published by:Tamilarasu J
    First published:

    Tags: FDI, GDP, Indian economy, Investment