Home /News /business /

FD : இன்னும் 2 நாட்களில் இந்த பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்தால் கை மேலே பலன் !

FD : இன்னும் 2 நாட்களில் இந்த பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்தால் கை மேலே பலன் !

பிக்சட் டெபாசிட்

பிக்சட் டெபாசிட்

FD Senior Citizen : மூத்த குடிமக்களுக்கு 50 அடிப்படைப் புள்ளிகள் கூடுதல் சலுகையை இத்தகைய திட்டங்கள் வழங்குகின்றன.

    பிக்சட் டெபாசிட் திட்டம் என்பது ரிஸ்க் இல்லாத முதலீடு திட்டங்களில் முதலிடத்தில் இருக்கிறது. இப்படி இருக்கையில் பலரும் இதில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். அவர்களை கவர, பிரபல வங்கிகளும் அவ்வப்போது பல சலுகைகளை வாரி வழங்கி வருகி்றது. அந்த வகையில் சமீபத்தில் மூத்த குடிமக்களுக்கு மற்ற பிக்சட் டெபாசிட்டை காட்டிலும் அதிக வட்டி வழங்கும் எஃப்டி திட்டத்தை எஸ்பிஐ வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பேங்க் ஆஃப் பரோடா , எச்டிஎப்சி வங்கிகள் அறிமுகப்படுத்தின. இதில் பேங்க் ஆஃப் பரோடா மற்றும் எச்டிஎப்சி வங்கிகள் சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டத்தை மார்ச் 31ம் தேதியுடன் நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அதாவது, பேங்க் ஆஃப் பரோடா மற்றும் எச்டிஎப்சி வங்கிகள் வழங்கும் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்வதற்கான கடைசி தேதி மார்ச் 31, 2022 என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இந்த திட்டத்தில் இதுவரை முதலீடு செய்யாதவர்கள் இந்த 2 நாட்களில் இதில் முதலீடு செய்தால் லாபத்தை அள்ளலாம். அப்படி என்ன சலுகை இதில் வழங்கப்படுகின்றன? என்ற கேள்விக்கு பதில் இதோ. மூத்த குடிமக்களுக்கு 50 அடிப்படைப் புள்ளிகள் கூடுதல் சலுகையை இத்தகைய திட்டங்கள் வழங்குகின்றன.

    இதையும் படிங்க.. மார்ச் 31க்குள் இதை செய்து விடுங்கள்.. Sukanya Samriddhi Yojana, PPF, NPS திட்டங்களின் முக்கிய அப்டேட்!

    அதாவது மார்ச் 31க்குள் இந்த திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு மட்டுமே கூடுதல் வட்டி பலன் கிடைக்கும். எச்டிஎப்சி வங்கியை பொறுத்தவரையில் ‘HDFC Bank Senior Citizen Care FD’ என்ற திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு 0.25 சதவீதம் கூடுதல் வட்டி வழங்குகின்றன. இதன் முதிர்ச்சி காலம் 5 முதல் 10 ஆண்டுகள் . இந்த திட்டத்தில் மூத்தகுடிமக்களுக்கு 0.75 சதவீதம் கூடுதல் வட்டி லாபம் கிடைக்கும். அதாவது 0.25 சதவீதம் கூடுதல் வட்டியானது, ஏற்கனவே மூத்த குடிமக்களுக்கு FD திட்டங்களில் வழங்கப்படும் 0.50 சதவீதம் கூடுதல் வட்டியுடன் கூடுதலாக இணைக்கப்படும்.

    read more.,. PPF அக்கவுண்ட் தொடங்க இந்த விவரங்கள் ரொம்ப முக்கியம்! நோட் பண்ணிக்கோங்க

    பேங்க் ஆஃப் பரோடாவில் மூத்த குடிமக்களுக்கு பிக்சட் டெபாசிட் திட்டங்களில் கூடுதலாக 0.50 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. 5 முதல் 7 ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையும் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்தால் பிக்சட் டெபாசிட் திட்டத்துக்கு 6.25 சதவீத வட்டி பெறலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Fixed Deposit, HDFC, Savings

    அடுத்த செய்தி