Home /News /business /

பிரபல வங்கியில் பிக்சட் டெபாசிட் திட்டத்தை தொடங்கியவர்கள் கவனத்திற்கு! வட்டியில் முக்கிய மாற்றம்

பிரபல வங்கியில் பிக்சட் டெபாசிட் திட்டத்தை தொடங்கியவர்கள் கவனத்திற்கு! வட்டியில் முக்கிய மாற்றம்

பிக்சட் டெபாசிட்

பிக்சட் டெபாசிட்

Axis Bank | ஆக்ஸிஸ் வங்கியில் 2 கோடி ரூபாய்க்கு கீழான பிக்சட் டெபாசிட்டுகளில் 7 முதல் 14 நாட்கள் வரையிலான பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு 2.50% வட்டி

    மிகப் பெரிய தனியார் வங்கியாக உருவெடுத்து இருக்கும் ஆக்ஸிஸ் பேங்கில் பிக்சட் டெபாசிட் திட்டத்தை தொடங்கி இருப்பவர்கள் கவனத்திற்கு.. வங்கி நிர்வாகம் பிக்சட் டெபாசிட் முதலீட்டாளர்களுக்கு ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.

    முதலீட்டாளர்களிடம் ரிஸ்க் இல்லாத முதலீடாக இருக்கும் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் கடந்த சில வாரங்களாக முன்னனி வங்கிகள் போட்டிப்போட்டு கொண்டு சலுகைகளை வாரி வழங்குகின்றன. அதாவது வட்டி விகிதத்தை அதிகமாக உயர்த்தி வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றன.

    read more.. EPFO : உங்கள் பிஎஃப் கணக்கில் புதிய பேங்க் அக்கவுண்ட்டை சேர்க்க வேண்டுமா? இதை செய்யுங்கள்!

    சமீபத்தில் எஸ்பிஐ வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, எச்டிஎப்சி வங்கி, கனரா வங்கி ஆகியவை ஒரு சில நாள் இடைவெளியில் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் வட்டியை உயர்த்தி வாடிக்கையாளர்களை குஷிப்படுத்தின. அந்த வகையில் தற்போது ஆக்ஸிஸ் வங்கியும்  லிஸ்டில் இணைந்துள்ளது, இந்த அறிவிப்பில் சந்தோஷமடைய போகிறவர்கள் மூத்த குடிமக்கள் தான்.அதாவது பொது வாடிக்கையாளர்களை காட்டிலும் சீனியர் சிட்டிசன்களுக்கு கூடுதலாக 0.50% வட்டி வழங்கப்படுகிறது.

    மாதங்கள் ஆண்டுகள் வரை தொடங்கும் இந்த திட்டத்தில் முதலீட்டாளர்கள் நல்ல வருவாய் பெற வேண்டும் என்ற நோக்கத்திலேயே பெரும்பாலும் முதலீடு செய்வார்கள். அவர்களுக்கு அவ்வப்போது வட்டி விகிதங்களை மாற்றுவது மேலும் முதலீடுகளை அதிகரிக்க செய்யும் என்பது வங்கிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.அந்த வகையில் தற்போது ஆக்ஸிஸ் வங்கி பிக்சட் டெபாசிட் திட்டத்தில் மாற்றியுள்ள வட்டி விகிதங்களை பற்றி முழுமையாக பார்க்கலாம். இந்த புதிய வட்டி விகிதங்கள் நேற்று (மார்ச் 17) முதல் அமலுக்கு வந்துள்ளன.

    read more. FD rates: நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு வட்டி.. பிக்சட் டெபாசிட் திட்டத்தில் இத்தனை பயன்களா?


    ஆக்ஸிஸ் வங்கியில் 2 கோடி ரூபாய்க்கு கீழான பிக்சட் டெபாசிட்டுகளில் 7 முதல் 14 நாட்கள் வரையிலான பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு 2.50% வட்டி, 15 முதல் 29 நாட்கள் வரையிலான பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு 2.50% வட்டி, 30 முதல் 45 நாட்கள் வரையிலான பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு 3% வட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 3% வட்டி 46 முதல் 60 நாட்கள், 61 முதல் 3 மாதங்களுக்குள்ளான திட்டங்களுக்கும் பொருந்தும்.

    1 ஆண்டுக்குள் - 1 ஆண்டு 5 நாள் வரை : 5.1%

    1 ஆண்டு 5 நாள் - 1 ஆண்டு 11 நாட்கள் : 5.15%

    1 ஆண்டு 11 நாள் - 1 ஆண்டு 25 நாட்கள் : 5.25%

    2 ஆண்டுகள் - 30 மாதங்கள் : 5.4%

    30 மாதம் - 3 ஆண்டுகள் : 5.4%

    3 ஆண்டுகள் - 5 ஆண்டு : 5.4%

    5 ஆண்டுகள் - 10 ஆண்டுகள் : 5.75%

    இந்த வட்டி மாற்றத்தில் பொது வாடிக்கையாளர்களை விட சீனியர் சிட்டிசன்களுக்கு 0.50% கூடுதலாக வட்டி வழங்கப்படுகிறது



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Bank accounts, Bank Loan, Fixed Deposit, Savings

    அடுத்த செய்தி