ஹோம் /நியூஸ் /வணிகம் /

FD-க்கான வட்டி விகிதத்தை உயர்த்திய கோடக் மஹிந்திரா வங்கி - விவரங்கள் இங்கே!

FD-க்கான வட்டி விகிதத்தை உயர்த்திய கோடக் மஹிந்திரா வங்கி - விவரங்கள் இங்கே!

கோடக் மஹிந்திரா வங்கி

கோடக் மஹிந்திரா வங்கி

RBI FD | ஆர்பிஐ ரெப்போ விகிதத்தை உயர்த்த தொடங்கிய பிறகு நாட்டில் உள்ள பெரும்பாலான வங்கிகள் தங்களுடைய FD-க்கான வட்டி விகிதங்களை தொடர்ந்து திருத்தியமைத்து வருகின்றன.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பிரைவேட் செக்டர் நிறுவனங்களில் முக்கிய வங்கியாக இருக்கும் கோடக் மஹிந்திரா, ரூ.2 கோடிக்கும் குறைவான நிரந்தர வைப்புத்தொகைக்கான (Fixed Deposit) வட்டி விகிதத்தை உயர்த்தி இருக்கிறது. Kotak Mahindra Bank-ன் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின்படி FD-க்கான புதிய வட்டி விகிதங்களை நவம்பர் 1, 2022 முதல் அமல்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ரெப்போ விகிதத்தை உயர்த்த தொடங்கிய பிறகு நாட்டில் உள்ள பெரும்பாலான வங்கிகள் தங்களுடைய FD-க்கான வட்டி விகிதங்களை தொடர்ந்து திருத்தியமைத்து வருகின்றன. இந்த நிலையில் கோடக் மஹிந்திரா வங்கியானது ஓராண்டு மெச்சூரிட்டி பீரியட் கொண்ட FD-க்களுக்கு இப்போது பொது மக்களுக்கு 6.10 %, மூத்த குடிமக்களுக்கு 6.60% வட்டியும் வழங்கப்படும் என்று அறிவித்து இருக்கிறது.

  உயர்ந்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் பொருட்டு ரிசர்வ் வங்கி முக்கிய ரெப்போ ரேட்டை அதிகரித்து வரும் நிலையில், கோடக் மஹிந்திரா வங்கி FD-க்கான வட்டி விகிதத்தை உயர்த்தி இருக்கிறது.

  Read More : அந்த முக்கியமான சேமிப்பு திட்டத்துக்கு வட்டியை உயர்த்திய ஐசிஐசிஐ வங்கி!

  FD-க்கு கோட்டக் மஹிந்திரா வங்கியின் சமீபத்திய வட்டி விகிதங்கள் இங்கே:

  7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரையிலான கால அளவுள்ள FD அக்கவுண்ட்டிற்கு பொதுமக்களுக்கு 2.75% வட்டியும், சீனியர் சிட்டிசன்களுக்கு 3.25% வட்டியும் வழங்கப்படுகிறது.
  15 நாட்கள் முதல் 30 நாட்கள் வரையிலான கால அளவுள்ள FD அக்கவுண்ட்டிற்கு பொதுமக்களுக்கு 3.00% வட்டியும், சீனியர் சிட்டிசன்களுக்கு 3.55% வட்டியும் வழங்கப்படுகிறது.
  31 நாட்கள் முதல் 45 நாட்கள் வரையிலான கால அளவுள்ள FD அக்கவுண்ட்டிற்கு பொதுமக்களுக்கு 3.25% வட்டியும், சீனியர் சிட்டிசன்களுக்கு 3.75% வட்டியும் வழங்கப்படுகிறது.
  46 நாட்கள் முதல் 90 நாட்கள் வரையிலான கால அளவுள்ள FD அக்கவுண்ட்டிற்கு பொதுமக்களுக்கு 3.50% வட்டியும், சீனியர் சிட்டிசன்களுக்கு 4.00% வட்டியும் வழங்கப்படுகிறது.
  91 நாட்கள் முதல் 120 நாட்கள் வரையிலான கால அளவுள்ள FD அக்கவுண்ட்டிற்கு பொதுமக்களுக்கு 4.00% வட்டியும், சீனியர் சிட்டிசன்களுக்கு 4.50% வட்டியும் வழங்கப்படுகிறது.
  121 நாட்கள் முதல் 179 நாட்கள் வரையிலான கால அளவுள்ள FD அக்கவுண்ட்டிற்கு பொதுமக்களுக்கு 4.25% வட்டியும், சீனியர் சிட்டிசன்களுக்கு 4.75% வட்டியும் வழங்கப்படுகிறது.
  180 நாட்கள் மெச்சூரிட்டி பீரியட் கொண்ட FD அக்கவுண்ட்டிற்கு பொதுமக்களுக்கு 5.50% வட்டியும், சீனியர் சிட்டிசன்களுக்கு 6.00% வட்டியும் வழங்கப்படுகிறது.
  181 நாட்கள் முதல் 269 நாட்கள் வரையிலான கால அளவுள்ள FD அக்கவுண்ட்டிற்கு பொதுமக்களுக்கு 5.50% வட்டியும், சீனியர் சிட்டிசன்களுக்கு 6.00% வட்டியும் வழங்கப்படுகிறது.
  270 நாட்கள் மெச்சூரிட்டி பீரியட் கொண்ட FD அக்கவுண்ட்டிற்கு பொதுமக்களுக்கு 5.50% வட்டியும், சீனியர் சிட்டிசன்களுக்கு 6.00% வட்டியும் வழங்கப்படுகிறது.
  271 நாட்கள் முதல் 363 நாட்கள் வரையிலான கால அளவுள்ள FD அக்கவுண்ட்டிற்கு பொதுமக்களுக்கு 5.75% வட்டியும், சீனியர் சிட்டிசன்களுக்கு 6.25% வட்டியும் வழங்கப்படுகிறது.
  364 நாட்கள் மெச்சூரிட்டி பீரியட் கொண்ட FD அக்கவுண்ட்டிற்கு பொதுமக்களுக்கு 6.00% வட்டியும், சீனியர் சிட்டிசன்களுக்கு 6.50% வட்டியும் வழங்கப்படுகிறது.
  365 நாட்கள் முதல் 389 நாட்கள் வரையிலான கால அளவுள்ள FD அக்கவுண்ட்டிற்கு பொதுமக்களுக்கு 6.10% வட்டியும், சீனியர் சிட்டிசன்களுக்கு 6.60% வட்டியும் வழங்கப்படுகிறது.
  390 நாட்கள் அதாவது 12 மாதங்கள் 25 நாட்கள் மெச்சூரிட்டி பீரியட் கொண்ட FD அக்கவுண்ட்டிற்கு பொதுமக்களுக்கு 6.25% வட்டியும், சீனியர் சிட்டிசன்களுக்கு 6.75% வட்டியும் வழங்கப்படுகிறது.
  391 நாட்கள் முதல் 23 மாதங்களுக்கும் குறைவான மெச்சூரிட்டி பீரியட் கொண்ட FD அக்கவுண்ட்டிற்கு பொதுமக்களுக்கு 6.25% வட்டியும், சீனியர் சிட்டிசன்களுக்கு 6.75% வட்டியும் வழங்கப்படுகிறது.
  23 மாதங்கள் வரையிலான மெச்சூரிட்டி பீரியட் கொண்ட FD அக்கவுண்ட்டிற்கு பொதுமக்களுக்கு 6.30% வட்டியும், சீனியர் சிட்டிசன்களுக்கு 6.80% வட்டியும் வழங்கப்படுகிறது.
  23 மாதங்கள் 1 நாள் முதல் 2 வருடங்கள் வரையிலான மெச்சூரிட்டி பீரியட் கொண்ட FD அக்கவுண்ட்டிற்கு பொதுமக்களுக்கு 6.30% வட்டியும், சீனியர் சிட்டிசன்களுக்கு 6.80% வட்டியும் வழங்கப்படுகிறது.
  2 வருடங்கள் முதல் 3 வருடங்களுக்கும் குறைவான FD அக்கவுண்ட்டிற்கு பொதுமக்களுக்கு 6.30% வட்டியும், சீனியர் சிட்டிசன்களுக்கு 6.80% வட்டியும் வழங்கப்படுகிறது.
  3 ஆண்டுகள் மற்றும் அதற்கும் மேல் ஆனால் 4 ஆண்டுகளுக்கும் குறைவான FD அக்கவுண்ட்டிற்கு பொதுமக்களுக்கு 6.20% வட்டியும், சீனியர் சிட்டிசன்களுக்கு 6.75% வட்டியும் வழங்கப்படுகிறது.
  4 ஆண்டுகள் மற்றும் அதற்கும் மேல் ஆனால் 5 ஆண்டுகளுக்கும் குறைவான FD அக்கவுண்ட்டிற்கு பொதுமக்களுக்கு 6.20% வட்டியும், சீனியர் சிட்டிசன்களுக்கு 6.70% வட்டியும் வழங்கப்படுகிறது.
  5 ஆண்டுகள் மற்றும் அதற்கும் மேல் மற்றும் 10 ஆண்டுகளுக்கு உட்பட்ட FD அக்கவுண்ட்டிற்கு பொதுமக்களுக்கு 6.20% வட்டியும், சீனியர் சிட்டிசன்களுக்கு 6.70% வட்டியும் வழங்கப்படுகிறது.
  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Bank, Business, Savings