Home /News /business /

அட இத்தனை நாள் தெரியாம போச்சே.. இந்த FD திட்டங்களில் சேமித்தால் வரிச்சலுகை கிடைக்குமாம்!

அட இத்தனை நாள் தெரியாம போச்சே.. இந்த FD திட்டங்களில் சேமித்தால் வரிச்சலுகை கிடைக்குமாம்!

பிக்சட் டெபாசிட்

பிக்சட் டெபாசிட்

FD fixed deposit : 6 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. ஐந்தாண்டுகளில் ரூ.1.5 லட்சம் என்பது ரூ.2.02 லட்சமாக அதிகரிக்கும்.

    வரி சேமிப்பு என்பது நிதியாண்டின் மார்ச் மாதத்தில் செய்யக்கூடிய தாக மட்டும் இல்லாமல், உங்களது பணத்தை சேமிப்பதாகவும்  இருக்க வேண்டும். அப்படி பணத்தை பாதுகாப்பானதாகவும் பயன்படுத்தப்படுவதாகவும் சேமிக்க வரி சேமிப்பு ஃபிக்ஸட் டெபாசிட் சிறப்பானதாக உள்ளது.

    வரியை சேமிக்க விரும்புவோர் அதிகளவில் வரி சேமிப்பு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்வது சிறந்தது.இத்திட்டங்களில் முதலீடு செய்தால் வரிச் சட்டம் பிரிவு 80சி கீழ் வரிச்சலுகை கிடைக்கிறது டாக்ஸ் சேவிங்ஸ் பிக்சட் டெபாசிட் (Tax saving fixed deposit) ஐந்து வருட டெபாசிட் காலத்துடன் வருகின்றன. இந்த காலத்திற்கு இடையில் நீங்கள் டெபாசிட் செய்து வைத்த பணத்தை எடுக்க முடியாது. மேலும் இதில் முதலீடு செய்வதால் 1.5 லட்சம் வரை வரிச் சலுகை பெற முடியும்.

    வரி சேமிப்பு ஃபிக்ஸட் டெபாசிட்டிற்கு அதிக வட்டி கொடுக்க கூடிய வங்கிகள் நிறைய உள்ளன. சில தனியார் மற்றும் அரசு சார்ந்த வங்கிகள் வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து வரி சேமிப்பு ஃபிக்ஸட் டெபாசிட்டிற்கு 6.75 சதவீதம் வரை வட்டி வழங்குகின்றன. அவற்றைப் பற்றி முதலில் அறிந்து கொள்ளுங்கள்...

    இதையும் படிங்க.. RBL வங்கியில் உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கா? அனைத்து வட்டி விகிதங்களும் மாறிடுச்சு!

    சூர்யோதய் பேங்க்:

    வரி சேமிப்பு வைப்புத் தொகைக்கு 6.75 சதவீதம் வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது. சிறு நிதி வங்கிகளில், சூர்யோதாய் சிறந்த வட்டி விகிதங்களை வழங்குகிறது. நீங்கள் முதலீடு செய்யும் ரூ.1.5 லட்சம் ஐந்தாண்டுகளில் ரூ.2.10 லட்சமாக உயரும்.

    உஜ்ஜீவன் பேங்க் :

    உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் வரி சேமிப்பு வைப்புகளுக்கு 6.40 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. ரூ.1.5 லட்சத்தை டெபாசிட் செய்தால், ரூ.2.06 லட்சமாக உயரும்.

    இதையும் படிங்க.. குடும்பத்திற்காக ஒரு நல்ல பாலிசியை தேடுகிறீர்களா? இதை கொஞ்சம் பாருங்க!

    RBL பேங்க்:

    RBL வங்கியிலும் வரி சேமிப்பு டெபாசிட்டுகளுக்கு 6.3 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. ரூ.1.5 லட்சம் டெபாசிட் செய்தால், அது 5 ஆண்டுகளில் ரூ.2.05 லட்சமாக அதிகரிக்கும்.

    Deutsche Bank, IDFC First Bank மற்றும் Yes Bank ஆகியவை வரி சேமிப்பு டெபாசிட்டுகளுக்கு 6.25 சதவீதம் வரை வட்டி வழங்குகின்றன. வெளிநாட்டு வங்கிகளில், Deutsche சிறந்த வட்டி விகிதத்தை வழங்குகிறது. இந்த வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் ரூ.1.5 லட்சமானது, ஐந்தாண்டுகளில் ரூ.2.05 லட்சமாக அதிகரிக்கும்.

    இண்டஸ் இந்த் பேங்க்:

    வரி சேமிப்பு வைப்புகளுக்கு 6 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. ஐந்தாண்டுகளில் ரூ.1.5 லட்சம் என்பது ரூ.2.02 லட்சமாக அதிகரிக்கும்.

    வரி சேமிப்பு எஃப்.டி.க்களை ஒற்றை அல்லது கூட்டு பெயர்களில் அதாவது ஜாயிண்ட் பெயர்களில் திறக்கலாம். அப்படி ஜாயிண்ட் அக்கவுண்ட் முறையில் திறந்தீர்கள் என்றால், இருவரில் முதல் உடைமையாளருக்கு மட்டுமே வரிச்சலுகை கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதேபோல் 5 ஆண்டு தபால் அலுவலக கால வைப்புத்தொகை பிரிவு 80 சி இன் கீழ் விலக்குக்கு தகுதி பெறுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Bank, Fixed Deposit, Savings

    அடுத்த செய்தி