Home /News /business /

FASTag : டோல்கேட்டில் இனி அதிக நேரம் காத்திருக்க அவசியமில்லை.. பேடிஎம் ஃபாஸ்ட் டேக் பெற விண்ணப்பியுங்கள்!

FASTag : டோல்கேட்டில் இனி அதிக நேரம் காத்திருக்க அவசியமில்லை.. பேடிஎம் ஃபாஸ்ட் டேக் பெற விண்ணப்பியுங்கள்!

ஃபாஸ்ட்டேக்

ஃபாஸ்ட்டேக்

FASTag apply: பேடிஎம் சார்பில் ஃபாஸ்ட் டேக் பெற்றுக் கொள்ளும் சேவை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

    சுங்கச்சாவடிகளில் தானியங்கி முறையில் வாகனங்களுக்கான சுங்கக் கட்டண வசூல் செய்யப்படும் ஃபாஸ்ட் டேக் சேவையை வழங்கும் நிறுவனங்களில் பேடிஎம் நிறுவனமும் ஒன்று. நாடு முழுவதிலும் இதுவரையிலும் 1.24 கோடி வாடிக்கையாளர்களுக்கு பேடிஎம் மூலமாக ஃபாஸ்ட் டேக் வழங்கப்பட்டுள்ளது. இது நாட்டின் மொத்த ஃபாஸ்ட் டேக் பயனாளர்களில் 30 சதவீதம் ஆகும்.

    பேடிஎம் மூலமாக ஃபாஸ்ட் டேக் பயன்படுத்துபவர்களுக்கு, அவர்களது பேடிஎம் வாலட்டில் இருந்து பணம் பிடித்தம் செய்யப்படும். ஃபாஸ்ட் டேக் சேவைக்கு பணம் செலுத்த பயனாளர்கள் தனியாக ரீசார்ஜ் செய்யவோ, வாலட் டவுன்லோடு செய்யவோ தேவையில்லை என்று பேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    பேடிஎம் மூலமாக ஃபாஸ்ட் டேக் சேவையை பெறுவதற்கு, ஆவணங்களை சரிபார்க்கும் நடவடிக்கை குறைவாகும். உடனடி ஆக்டிவேஷன் மற்றும் வாடிக்கையாளர் சேவை போன்ற வசதிகள் உங்களுக்கு கிடைக்கப்பெறும். பேடிஎம் மூலமாக ஃபாஸ்ட் டேக் சேவையை பெற்ற பிறகு, சுங்கச்சாவடிகளில் நீங்கள் செலுத்தும் கட்டணம் குறித்த பரிவர்த்தனைகளை பேடிஎம் ஆப் மூலமாக பார்த்துக் கொள்ளலாம்.

    இதையும் படிங்க.. LIC பாலிசியுடன் உங்கள் பான் கார்டை இணைப்பது எவ்வளவு முக்கியம் தெரியுமா?

    வாகன உரிமையாளர்களுக்கு உதவும் விதமாக, பெரும்பாலான சுங்கச்சாவடிகள் அருகே பேடிஎம் சார்பில் ஃபாஸ்ட் டேக் பெற்றுக் கொள்ளும் சேவை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு முறையும் நீங்கள் சுங்கச்சாவடிகளை கடந்து செல்லும்போது, உங்கள் பேடிஎம் வாலட்டில் இருந்து தானாகவே பணம் கழிக்கப்படும்.

    இதையும் படிங்க.. எவ்வளவு முயற்சித்தாலும் பான் – ஆதார் கார்டுகளை இணைக்க முடியவில்லையா? அதற்கு காரணம் இதுதான்!

    பேடிஎம் ஆப் மூலமாக ஃபாஸ்ட் டேக் சேவையை பெறுவது எப்படி

    * உங்கள் மொபைல் ஃபோனில் பேடிஎம் ஆப் டவுன்லோடு செய்யவும். ஆண்டிராய்டு ஃபோன் பயன்படுத்துபவர்கள் இதனை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.
    * ஆப்பிள் ஐஓஎஸ் ஃபோன் பயன்படுத்துபவர்கள் ஆப் ஸ்டோர் மூலமாக அதை பெற்றுக் கொள்ள வேண்டும்.
    * பேடிஎம் ஆப்பில் லாகின் செய்யவும்
    * மெயின் மெனுவில் உள்ள ஃபாஸ்ட் டேக் ஐகானை கிளிக் செய்யவும் அல்லது மோர் பட்டன் மீது கிளிக் செய்து, அங்கு ஃபாஸ்ட் டேக் சேவையை தேர்வு செய்யவும்.
    * இப்போது கார் அல்லது ஜீப் அல்லது வேனுக்காக ஃபாஸ்ட் டேக் வாங்குவதற்கான ஆப்சனை கிளிக் செய்யவும்.
    * உங்கள் வாகன பதிவு எண் நிரப்பி, வாகனப் பதிவுச் சான்றிதழ் நகலை அப்லோடு செய்யவும்.
    * உங்களுக்கு டெலிவரி செய்ய வேண்டிய முகவரியை குறிப்பிட்டு, ‘பை’ என்பதில் கிளிக் செய்யவும்.
    * இப்போது பணம் செலுத்தும் முறையை தேர்வு செய்யவும்.
    * ஆர்டர் என்பதை கன்ஃபார்ம் செய்யவும்.
    * ஃபாஸ்ட் டேக் கோடு கொண்ட ஸ்டிக்கரை உங்கள் வாகனங்களில் ஒட்டி, இப்போது வெகு விரைவான பயணத்தை நீங்கள் மேற்கொள்ளலாம்.

    பேடிஎம் பேமெண்ட் வங்கி சேவை மூலமாக டிஜிட்டல் பேமெண்ட் மற்றும் வங்கிச் சேவைகளை நீங்கள் அனுபவிக்க முடியும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Fastag, Toll gate

    அடுத்த செய்தி