நலிவடைந்த விவசாயிகளின் ஆண்டு வருமானத்தை உயர்த்தும் வகையில் மத்திய அரசால் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (PM-KISAN) திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தவணை முறையில் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் PM-KISAN திட்டம் துவக்கப்பட்ட போது சுமார் 1 கோடி விவசாயிகளின் பேங்க் அக்கவுண்ட்களில் நேரடியாக தலா ரூ.2,000 செலுத்தி இந்த திட்டத்தை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி. வேளாண் கடன் தள்ளுபடியை விட நலிவுற்ற விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் இந்த திட்டத்தில் நிதி செலவிடுவது சிறப்பான முடிவு என்று பொருளாதார வல்லுநர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
தகுதி வாய்ந்த விவசாயிகள் இத்திட்டத்தில் சேர்ந்தால் அவர்களுக்கு ஒரு நிதி ஆண்டில் 3 தவணைகளில் ரூ.6000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் சேரும் விவசாயிகளின் பேங்க் அக்கவுண்டில் PM KISAN தவணை நிதி தலா ரூ.2,000 வீதம் செலுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாய குடும்பங்களுக்கும் தலா ரூ.2,000 வீதம் மூன்று சம தவணைகளில் ஆண்டுக்கு ரூ.6,000 வருமான ஆதாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை PM-KISAN திட்டத்தின் கீழ் 10 தவணைகளில் விவசாயிகளுக்கு நிதி வழங்கப்பட்டு உள்ளது. ஆண்டு தொடக்கத்தில் அதாவது கடந்த ஜனவரி மாதம் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM KISAN) யோஜனாவின் 10-வது தவணையை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.
இதனிடையே பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM KISAN) யோஜனா திட்டத்தின் கீழ் விவசாய பயனாளிகள் தங்கள் எதிர்கால தவணைகளை உறுதி செய்ய ஒரு முக்கியமான செயல்முறையை முடிக்க வேண்டும். எதிர்காலத்தில் செலுத்தப்படும் தவணை முறை நிதியை பெற விவசாயிகள் eKYC செயல்முறையை (eKYC process) இந்த மாத இறுதிக்குள் (மார்ச் 31, 2022) முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இல்லை என்றால் அவர்களால் PM-KISAN மூலம் வழங்கப்பட உள்ள 11-வது தவணையைப் பெற முடியாது.
eKYC செயல்முறையை சில எளிய வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் முடிக்கலாம்..
* முதலில் PM-Kisan-ன் அதிகாரப்பூர்வ வெப்சைட்டான pmkisan.gov.in என்ற வெப்சைட்டிற்கு சென்று login செய்ய வேண்டும்
* பின்னர் ஹோம்பேஜில் தோன்றும் 'e-KYC' ஆப்ஷனை கிளிக் செய்து கொள்ள வேண்டும்
* இப்போது ஒரு புதிய பேஜ் ஓபன் ஆகும். அதில் ஆதார் கார்டு நம்பர், கேப்ட்சா கோட் ஆகியவற்றை என்டர் செய்து search-ஐ கிளிக் செய்ய வேண்டும்
* பின் ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பரை என்டர் செய்யுமாறு கேட்கப்படும்
* மொபைல் நம்பரை என்டர் செய்த பிறகு, 'Get OTP' என்பதை கிளிக் செய்ய வேண்டும்
* குறிப்பிட்ட field-ல் மொபைல் நம்பருக்கு வந்துள்ள OTP-ஐ என்டர் செய்ய வேண்டும்
Also Read : மாதம் ரூ.3000 கொடுக்கும் மத்திய அரசின் சூப்பர் திட்டம்
இறுதியாக PM-Kisan e-KYC வெற்றிகரமாக சப்மிட் ஆனதா என்பதை கவனிக்க வேண்டும். மேலும் ஏதேனும் கேள்விகள் மற்றும் விவரங்கள் தேவைப்பட்டால், அதிகாரப்பூர்வ வெப்சைட்டான pmkisan.gov.in-ல் login சென்று பார்த்து கொள்ளலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.