எப்போதும் நல்ல கிரெடிட் ஸ்கோர் வைத்திருப்பது உங்களது சுமூகமான நிதி வாழ்க்கைக்கு உதவும். கிரெடிட் ஸ்கோர் என்பது உங்கள் கடன் தகுதி அடிப்படையில் கடன் வழங்குபவருக்கு, உங்கள் கடன் வரலாற்றை பற்றி கூறுகிறது.
உங்களுடைய கடன் தகுதியானது கடனளிப்பவருக்கு, கடன் வாங்கிய பின் திருப்பி செலுத்துவதற்கான உங்கள் திறனை பற்றி கூறுகிறது. குறிப்பாக கிரெடிட் கார்டுகள், அடமானங்கள், கார் கடன்கள் மற்றும் பிற நிதி தயாரிப்புகள் உள்ளிட்டவற்றில் நல்ல கிரெடிட் ஸ்கோர் மிகவும் உறுதுணையாக உள்ளது. கடனை உரிய நேரத்தில் திருப்பி செலுத்தாததால் மட்டுமே ஒருவரது கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படும் என்பதில்லை. மாறாக பொதுவாக கவனிக்கப்படாத சில சிறிய பிழைகள் மற்றும் முரண்பாடுகளால் கூட கிரெடிட் ஸ்கோர் பாதிக்கும். சில பிழைகள் அற்பமானதாக தோன்றலாம் ஆனால் எதிர்காலத்தில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்த கூடும்.
அடையாள பிழைகள் (Identity errors):
கிரெடிட் ரிப்போர்ட்களில் ஏற்படும் மிகவும் பொதுவான பிழைகளில் எழுத்து பிழைகள் அல்லது எழுத்துப்பிழை பெயர்கள் உட்பட ஒருவரின் விவரங்களில் இருக்கும் தவறான க்ரெடென்ஷியல்ஸ் மற்றும் தவறான தொலைபேசி எண்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கியது. அதே போல ஒத்த பெயர்களால் நிகழும் தவறுகள் காரணமாக ஒருவரின் அடையாளம் மற்றொரு வாடிக்கையாளருடன் குழப்பமடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எதிர்காலத்தில் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்க இது போன்ற பிழைகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும். புதிய இடத்திற்கு மாறும்போது உங்கள் பெயர், முகவரி போன்றவற்றைப் பற்றிய உங்கள் தகவலை அப்டேட் செய்வது அவசியம்.
Read More : savings account : வங்கியில் தொடங்குவதற்கு முன்பு இதை அவசியம் தெரிஞ்சுக்கோங்க!
அக்கவுண்ட் தொடர்பான பிழைகள்:
உங்கள் அக்கவுண்ட் ஸ்டேட்டஸ் பற்றி தவறாக ரிப்போர்ட் செய்யப்பட்டால் அது உங்கள் கிரெடிட் ஸ்கோரைக் கடுமையாக குறைக்கலாம். எனவே இது போன்ற தவறுகள் மீது உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். கீழே குறிப்பிடுவது போல நிகழும் சில சூழ்நிலைகளால் உங்களது கிரெடிட் ஸ்கோர் மிக கடுமையாக பாதிக்கப்படலாம்.
* மூடப்பட்ட அக்கவுண்ட்கள் நிதி நிறுவனங்களின் டேட்டா-பேஸில் அப்டேட் செய்யப்படாத போது, தொடர்ந்து அது ஓபனில் இருப்பதாகவே தெரிவிக்கப்படுகிறது.
* சில நேரங்களில் வருமான வரி, கடன் அல்லது கிரெடிட் கார்டு போன்றவற்றில் தாமதமாக பணம் செலுத்துவதாக தவறுதலாக குறிப்பிடப்படுகிறது.
* ஒரே கடன் ஒன்றுக்கு மேற்பட்ட முறை பட்டியலிடப்படுவது (சில நேரங்களில் வெவ்வேறு பெயர்களுடன்).
கிரெடிட் ஸ்கோரை எவ்வாறு மேம்படுத்துவது?
பணம் செலுத்தும் போது நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்த உதவும். EMI-க்கள் மற்றும் கிரெடிட் கார்டு நிலுவைத் தொகைகளை சரியான நேரத்தில் செலுத்துவது மிகவும் முக்கியம். கிரெடிட் கார்டு பில்களை செலுத்தும் போது மக்கள் பெரும்பாலும் குறைந்தபட்ச நிலுவைத் தொகையை மட்டுமே செலுத்த நினைக்கிறார்கள். இது நீண்ட காலத்திற்கு ஒருவரின் கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும். எனவே செலுத்த வேண்டிய தேதிக்குள் முழு நிலுவை தொகையையும் செலுத்த முயற்சிக்க வேண்டும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.