நவம்பர் மாத தொழிற்சாலை உற்பத்தி வளர்ச்சி 0.5% ஆகச் சரிவு!

அக்டோபர் மாதம் தொழிற்சாலை உற்பத்தி வளர்ச்சி அதிகபட்சமாக 8.4 சதவீதமாக இருந்தது.

news18
Updated: January 11, 2019, 9:24 PM IST
நவம்பர் மாத தொழிற்சாலை உற்பத்தி வளர்ச்சி 0.5% ஆகச் சரிவு!
தொழிற்சாலை உற்பத்தி வளர்ச்சி
news18
Updated: January 11, 2019, 9:24 PM IST
2018 நவம்பர் மாத தொழிற்சாலை உற்பத்தி 0.5 சதவீதமாகச் சரிந்துள்ளது என மத்திய புள்ளியியல் துறை வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. 2017 ஜூலை மாதத்திற்குப் பிறகு தொழிற்சாலை உற்பத்தியில் இது மிகப் பெரிய சரிவு எனக் கூறப்படுகிறது.

நவம்பர் மாதம் தொழிற்சாலை உற்பத்தி மீதான வளர்ச்சி 4.1 சதவீதமாக இருக்கும் என வல்லுனர்கள் எதிர்பார்த்தனர். அக்டோபர் மாதம் தொழிற்சாலை உற்பத்தி வளர்ச்சி அதிகபட்சமாக 8.4 சதவீதமாக இருந்தது.

மெட்டல், மோட்டார் வாகனங்கள் உள்ளிட்ட துறைகளின் உற்பத்தி குறைந்ததே இந்தச் சரிவுக்கான காரணம் என ஐசிஐசிஐ வங்கியின் சர்வதேச சந்தை குழு தலைவர் பி பிரசன்னா தெரிவித்துள்ளார்.

நவம்பர் மாதம் சுரங்கம் மற்றும் மின்சாரத் துறை உற்பத்தி 2.7 மற்றும் 5.1 சதவீதமாக உள்ளது. ஜூலை - செப்டம்பர் காலாண்டில் எதிர்பார்த்த 7.1 சதவீதத்தை விட ஜிடிபி வளர்ச்சி மிக மோசமாகச் சரிந்துள்ளது என்றும் தரவுகள் கூறுகின்றன.

இதே நிலை தொடர்ந்தால் நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி 7 சதவீதமாகச் சரியும் எனப் பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க: ஆதார் அட்டையின் சேவை கட்டணம் உயர்வு
First published: January 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...