• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • ரெக்கரிங் டெபாசிட்டின் வட்டி விகிதங்களை பாதிக்கும் காரணங்கள் என்ன?

ரெக்கரிங் டெபாசிட்டின் வட்டி விகிதங்களை பாதிக்கும் காரணங்கள் என்ன?


ரெக்கரிங் டெபாசிட்

ரெக்கரிங் டெபாசிட்

Recurring Deposit : RD மூலம் சேமிக்க முடிவு செய்தால், முடிவெடுப்பதற்கு முன் வட்டி விகிதத்தை பாதிக்கும் அனைத்து காரணிகளையும் நன்றாக தெரிந்து கொள்வது முக்கியம். உங்களுக்கு தெளிவின்மை என்னும் பட்சத்தில், நிபுணர் ஆலோசனையை பெறலாம்.

  • Share this:
    இந்தியாவில் பலருக்கும் சேமிப்பின் அவசியமும், முக்கியத்துவமும் தெரிந்துள்ளது. எனவே சேமிக்க விரும்புவோருக்கு ஏற்றவாறு பல திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. அவற்றில், மிகவும் பிரபலமான மற்றும் பலரும் விரும்பக்கூடிய திட்டம், ரெக்கரிங் டெபாசிட் (RD) எனப்படும் தொடர்ச்சியான வைப்புத்தொகை ஆகும்.

    மாதாந்திர சம்பளம் பெறுபவர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் இந்தத் திட்டத்தைத் தேர்ந்தெடுத்து சேமிக்கலாம். ரெக்கரிங் டெபாசிட் என்பது பணச்சந்தையில் கிடைக்கும் எளிமையான, எளிதாக சேமிக்கக் கூடிய மற்றும் வசதியான முதலீட்டு விருப்பமாகும். நீங்கள் ஏற்கனவே சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வங்கியிலேயே நீங்கள் RD கணக்கைத் தொடங்கலாம்.

    சேமிப்பின் பின்னணியில் நிதி திட்டமிடல் என்று வரும்போது, தொடர்ச்சியான வைப்பு (RD) ஒரு பாதுகாப்பான மற்றும் நம்பகமான தேர்வு ஆகும். தொடர்ச்சியான வைப்புத்தொகைகள் மற்றும் வட்டி விகிதங்கள் மூலம் கிடைக்கும் வருமானம் தற்போதைய பணம் மற்றும் முதலீட்டு சந்தை நிலைமைகளைப் பொறுத்து மாறும். நிதி திட்டமிடல் என்று வரும் போது, உங்கள் RD சேமிப்பு நீண்ட கால முதலீடாக மாறும். எனவே, உங்களுக்கு எவ்வளவு வட்டி கிடைக்கும், வட்டி விகிதம் மாறுமா, என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். RD வட்டி விகிதம் ஏன் மாறுகிறது என்பது என்பதைப் பற்றி தெரிந்து

    ALSO READ |  நிகர சொத்து மதிப்பு (NAV) என்றால் என்ன? எப்படி கணக்கிடப்படுகிறது? முழு விவரங்கள் இங்கே!

    RD-ல் நீங்கள் குறுகிய, நடுத்தர அல்லது நீண்ட காலத்திற்கு சேமிக்க முடியும். பல வங்கிகள், பல்வேறு தொடர்ச்சியான வைப்புநிதி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இந்தத் திட்டங்கள் மூலம், நீங்கள் எந்த நோக்கத்திற்காகச் சேமிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து பல விருப்பங்கள் உள்ளன.

    வங்கிகள் மூத்த குடிமக்களுக்கு RD-ல் சேமிப்புக்கு அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன. வயதைப் பொறுத்து, சேமிப்பாளர்களுக்கு வட்டி விகிதம் மாறுபடும். தொடர்ச்சியான வைப்பு நிதிகளின் வட்டி விகிதங்கள் திட்டத்திற்குத் திட்டத்திற்கு மாறுபடும். FDகளுடன் ஒப்பிடும்போது, ​​RD-களுக்கு மாதாந்திர அடிப்படையில் முதலீடு செய்து, பொருந்தக்கூடிய விகிதங்களில் வட்டியைப் பெறுவதற்கான விருப்பமும் உள்ளது.

    ALSO READ |  ஃபிக்சட் டெபாசிட் போல மியூச்சுவல் ஃபண்ட்கள் ஏன் நிலையான வட்டி விகிதத்தை வழங்குவதில்லை? காரணம் இதோ!

    RD-ன் மீது கடன் மற்றும் ஓவர் டிராஃப்ட் வசதிகள் பெறக்கூடிய வசதிகளும் உள்ளன. ரெக்கரிங் டெப்பாசிட்டின் வட்டி விகிதத்தை பாதிக்கும் கால அளவு, சேமிக்கும் நபரின் வயது, திட்டம் போன்ற காரணிகள் உள்ளன. இதை பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.

    RD-ன் கால அளவு:

    வட்டி விகிதத்தை நிர்ணயிப்பதில் உங்கள் RD-ன் கால அளவு ஒரு முக்கிய காரணியாகும். நடுத்தர கால சேமிப்பில் அதிக வட்டி விகிதங்கள் பெறலாம். சில வங்கிகள் 10 ஆண்டுகள் வரை ரெக்கரிங் டெப்பாசிட்களுக்கு அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன. ஆனால் சில வங்கிகள் 1 ஆண்டு மற்றும் 10 ஆண்டு சேமிப்புகளுக்கு ஒரே வட்டி விகிதத்தை வழங்குவதால் வட்டி விகிதம் குறைவாக இருக்கும்.

    கணக்கு வகைகள் அல்லது திட்டங்கள்:

    தொடர்ச்சியான வைப்புநிதி கணக்கின் வகையைப் பொறுத்து, நீங்கள் தேர்ந்தெடுக்கும் தொட்டம்திட்டம் பொறுத்து, வட்டி விகிதம் கிடைக்கும். NRE அல்லது NRO கணக்குகளை விட சாதாரண RD கணக்குகள், அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன. ஒரு சில வங்கிகள் இந்த வெவ்வேறு கணக்குகளுக்கும் ஒரே மாதிரியான வட்டி விகிதத்தை வழங்குகின்றன.

    நீங்கள் தேர்வு செய்யும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள்:

    நீங்கள் எந்த வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் உங்கள் RD சேமிப்பை மேற்கொள்கிறீர்கள் என்பது உங்களுக்கு கிடைக்கும் முதிர்வுத் தொகையை பெரிதும் பாதிக்கும் காரணியாகும். RD மூலம் வங்கிகளில் முதலீடு செய்வது பாதுகாப்பான விருப்பமாகக் கருதப்படுகிறது. அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனத்தின் தொடர்ச்சியான வைப்புத்திட்டத்தில் தனிநபர் முதலீடு செய்யலாம். ஆனாலும், நீங்கள் முதலீடு அல்லது சேமிப்பதற்கு முன் வைப்புத்தொகையின் கடன் மதிப்பீட்டைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். மற்ற கார்ப்பரேட் நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது FAA அல்லது FAA போன்ற நல்ல கடன் மதிப்பீட்டைக் கொண்ட ஒரு நிதி நிறுவனத்தின் RD திட்டத்தில் முதலீடு செய்தால் உங்களுக்கு நல்ல வட்டி கிடைக்கும்.

    உங்கள் வயது:

    இன்று, பெரும்பாலான வங்கிகள் மூத்த குடிமக்களுக்கு தொடர்ச்சியான வைப்புத்தொகைக்கு அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன. இந்த விகிதம் வழக்கமான வட்டி விகிதத்தை விட ஆண்டுக்கு 0.5 சதவீதம் அளவுக்கு அதிகமாக காணப்படுகிறது. இருப்பினும், மூத்த குடிமக்களுக்கான வயது வரம்பு என்பது வங்கி மற்றும் நிதி நிறுவனத்தின் விதிகளின்படி மாறுபடலாம். ஒரு சில வங்கிகள் 50 வயது வரை மட்டுமே அதிகபட்ச நுழைவு வயது என்று நிர்ணயித்திருக்கும். நீங்கள் நடுத்தர வயது கொண்டவர் என்றால், உங்களுக்கான வட்டி விகிதம் கொஞ்சம் குறையும். அதே போல, ஜூனியர் ஆர்டி கணக்கையும் சில வங்கிகள் வழங்குகின்றன. இந்த வட்டி விகிதங்களும் வங்கிகள் பொறுத்து மாறுபடும்.

    வங்கிகள் நிர்ணயித்துள்ள வட்டி விகிதம்:

    வெவ்வேறு வங்கிகள், RD-க்கு வழங்கும் வட்டி விகிதங்கள் ஓரளவு மாறுபடலாம். இருப்பினும், தற்போது, ​​முன்னணி வங்கிகள் RD கணக்குகளுக்கு வழங்கும் வட்டி விகிதம் ஆண்டுக்கு 7 சதவீதத்தில் இருந்து தொடங்குகிறது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் ஆண்டுக்கு 8 சதவிகிதத்துக்கும் அதிகமான வட்டி விகிதங்களை வழங்குகின்றன.

    சலுகைகள் உள்ள திட்டங்கள்:

    தற்போது, ​​பல்வேறு வங்கிகள் தொடர்ச்சியான வைப்புத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. உதாரணமாக, கார்ப்பரேஷன் வங்கியின் கோடீஸ்வரர் என்ற RD திட்டத்தின் மூலம் திட்டத்தின் முடிவில் நீங்கள் ரூ.10 லட்சத்தைப் பெறலாம். இந்தத் திட்டத்தின் கீழ் வைப்புத்தொகைக்கான அதிகபட்ச வட்டி விகிதம் ஆண்டுக்கு 9.25 சதவீதம் ஆகும். உங்கள் வட்டி விகிதம் RD கணக்கின் திட்ட சலுகைகளைப் பொறுத்து மாறுபடும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    தற்போதைய பொருளாதாரச் சூழல்:

    தொடர்ச்சியான வைப்புத்திட்டங்களை வழங்கும் வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களின் நிதி நிலைமை மாறும்போது, ​​அவற்றின் வட்டி விகிதங்களைப் புதுப்பிக்கின்றன. ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதத்தில் மாற்றங்கள், பணவீக்கம் போன்ற காரணிகளால் இது மாறுபடும். எனவே, RD இன் வட்டி விகிதத்தை நிர்ணயிப்பதில் நடைமுறையில் உள்ள பொருளாதார நிலைமைகள் அல்லது சூழலும் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது தெளிவாகிறது.

    ALSO READ |  சேமிப்புக் கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்கு வங்கிகள் நிர்ணயித்துள்ள வரம்புகள் என்ன!

    எனவே நீங்கள் RD மூலம் சேமிக்க முடிவு செய்தால், முடிவெடுப்பதற்கு முன் வட்டி விகிதத்தை பாதிக்கும் அனைத்து காரணிகளையும் நன்றாக தெரிந்து கொள்வது முக்கியம். உங்களுக்கு தெளிவின்மை என்னும் பட்சத்தில், நிபுணர் ஆலோசனையை பெறலாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: