• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • Facebook Loan: சிறு, குறு தொழில்களுக்கு லோன் கொடுக்கும் பேஸ்புக் - வட்டி எவ்வளவு தெரியுமா?

Facebook Loan: சிறு, குறு தொழில்களுக்கு லோன் கொடுக்கும் பேஸ்புக் - வட்டி எவ்வளவு தெரியுமா?

பேஸ்புக் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் அஜித் மோகன்

பேஸ்புக் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் அஜித் மோகன்

பேஸ்புக் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் அஜித் மோகன், இந்த திட்டம் குறித்து அறிவித்துள்ளார்.

  • Share this:
ஆகஸ்ட் 20ம் தேதி முதல் சிறு, குறு நிறுவனங்களுக்கு தொழில்கடன்கள் கொடுக்கப்படும் என பேஸ்புக் தெரிவித்துள்ளது.

சமூகவலைதள ஜாம்பவான் பேஸ்புக் நிறுவனம் லோன் துறையிலும் முதலீடு செய்ய முடிவெடுத்துள்ளது. ஆகஸ்ட் 20 ஆம் தேதி முதல் தொடங்கப்படும் இந்த திட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 5 லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் வரை கடன் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் முதல் கட்டமாக நாடு முழுவதும் உள்ள 200 நகரங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பேஸ்புக் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் அஜித் மோகன், இந்த திட்டம் குறித்து அறிவித்துள்ளார். கொலாட்ரல் தேவைப்படாது எனக் கூறியுள்ள பேஸ்புக், 17 முதல் 20 விழுக்காடு வட்டியில் கடன் கொடுக்கப்படும் என கூறியுள்ளது. தொழில் முனைவோர் பெண்களாக இருந்தால் 0.2 % வட்டி குறைவாக வழங்கப்படும் எனவும் கூறியுள்ளது. இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள லோன் திட்டம் குறித்து பேசிய அஜித் மோகன், கொரோனா காரணமாக இந்தியா முழுவதும் சிறு குறு நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

அவர்களுக்கு தேவைப்படும் நிதியை மூலதனமாக கொடுக்க பேஸ்புக் திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ள அவர், இந்த திட்டத்தை உலகளவில் கடந்த ஆண்டு முதல் பேஸ்புக் செயல்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

இதற்காக பேஸ்புக் 100 மில்லியன் அமெரிக்க டாலரை ஒதுக்கி, இந்தியா உள்ளிட்ட 30 நாடுகளில் செயல்படுத்தி வருகிறது. டெல்லி, குர்கான், மும்பை, ஹைதராபாத் மற்றும் பெங்களுரு ஆகிய நகரங்களில் கொரோனா வைரஸ் லாக்டவுனால் பாதிக்கப்பட்ட 3 ஆயிரம் சிறு குறு நிறுவனங்களுக்கு 4 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் வழங்கியுள்ளது.

Also read... Paytm App மூலம் மின்சார கட்டணம் செலுத்தினால் கேஷ்பேக் உறுதி - ஆனால் ஒரு கண்டிஷன்!

தற்போது Indifi நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள பேஸ்புக், கடன் வழங்குவது மற்றும் வசூலிப்பதை அந்த நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது. இது குறித்து பேசிய அஜித் மோகன், கொரோனா வைரஸ் பாதிப்புக்குப் பிறகு சிறு குறு நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

பல நிறுவனங்கள் முதலீட்டுக்கு பணமில்லாமல் மூடப்படுவதாகவும், இதனை கருத்தில் கொண்டு லோன் வழங்குவதில் பேஸ்புக் களமிறங்கியிருப்பதாகவும் கூறியுள்ளார். இந்த திட்டம் சிறு குறு நிறுவனங்களை நடத்துபவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழலில் சிறு குறு நிறுவனங்கள் வேகமாக முன்னேறி வருவதாக தெரிவித்துள்ளார். அவர்களின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்யும்போது, அந்த நிறுவனங்கள் உலக மார்க்கெட்டில் பங்களிப்பு செய்யும் அளவுக்கான வளர்ச்சியை எட்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், சரிந்துள்ள பொருளாதாரம் வேகமாக பழைய நிலைக்கு திரும்புவதற்கு பேஸ்புக்கின் லோன் திட்டம் சிறு உதவியாக இருக்கும் என்று நம்புவதாகவும் அஜித் மோகன் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

First published: