Reliance Jio-Facebook deal : ₹43,574 கோடி ரூபாய்க்கு ரிலையன்ஸ் ஜியோவின் 9.99% பங்குகளை வாங்கியது ஃபேஸ்புக்..!
Reliance Jio-Facebook deal : ₹43,574 கோடி ரூபாய்க்கு ரிலையன்ஸ் ஜியோவின் 9.99% பங்குகளை வாங்கியது ஃபேஸ்புக்..!
ரிலையன்ஸ் ஜியோ
இந்தியர்கள் அனைவருக்குமான பயனாகவும், டிஜிட்டல் துறையில் வேகம்பெற்று வளர்வதற்கு ரிலையன்ஸைச் சேர்ந்த நாங்கள் அனைவரும் ஃபேஸ்புக்கை, நீண்ட கால பங்குதாரராக வரவேற்பதில் பெருமை கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார் முகேஷ் அம்பானி.
ரிலையன்ஸ் குழுமத்தின், தொலைதொடர்புப் பிரிவான ரிலையன்ஸ் ஜியோ, 9.99% பங்குகளை அமெரிக்க சமூகவலைதள பெருநிறுவனமான ஃபேஸ்புக்குக்கு $5.7 billion., அதாவது 43,574 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது. இதன்மூலம், ஜியோ தளங்களின் மிகப்பெரிய மைனாரிட்டி பங்குதாரராக உருவெடுத்துள்ளது ஃபேஸ்புக். இதன்மூலம் வேகமாக வளர்ந்து வரும் இந்திய சந்தையில் இன்னும் அழுத்தமாக கால் பதிக்கவிருக்கிறது ஃபேஸ்புக்.
ஃபேஸ்புக் உடனான இந்த பங்கீட்டைக் குறித்து நிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி பேசுகையில், “2016-இல் ரிலையன்ஸ் ஜியோவைத் தொடங்கியபோது, இந்திய டிஜிட்டல் சர்வோதயாவைக் கொண்டுவரும் கனவுடன் அதைத் தொடங்கினோம். ஒவ்வொரு இந்தியரின் வாழ்க்கைத் தரத்துடன், இந்தியாவின் டிஜிட்டல் திறனும் சேர்ந்தே வளரும்போது, இந்தியா சர்வதேச நாடுகளின் முன்னால் டிஜிட்டல் வளர்ச்சியும் பெற்ற நாடாக மிளிரும் என்பதே கனவாக இருந்தது. இந்தியர்கள் அனைவருக்குமான பயனாகவும், டிஜிட்டல் துறையில் வேகம்பெற்று வளர்வதற்கு ரிலையன்ஸைச் சேர்ந்த நாங்கள் அனைவரும் ஃபேஸ்புக்கை, நீண்ட கால பங்குதாரராக வரவேற்பதில் பெருமை கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “ஜியோவுக்கும் ஃபேஸ்புக்கும் இடையிலான கூட்டுவிளைவானது, பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்துடனான, இரண்டு குறிக்கோள்கள்., அதாவது, வாழ்வின் எளிமை, மற்றும் வணிகத்தில் எளிமை என்பதை உணர்த்த உதவிகரமாக இருக்கும். கொரோனாவுக்குப் பிறகும், இந்தியா பொருளாதார பிரச்சனைகளில் இருந்து மீண்டெழுந்து புத்துயிர் பெறும் என நான் நம்புகிறேன். இந்த மாறுதலுக்கு, இந்த பங்கீட்டு உறவும் ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.
தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இதுகுறித்து தெரிவித்துள்ள ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க், “இந்த முயற்சி, வளர்ந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரத்தில் மக்களுக்கும், வணிகங்களுக்கும் புது வழிகளைத் திறக்கும். உதாரணமாக, ஜியோவின் சிறு முன்னெடுப்பான ஜியோ மார்ட், வாட்ஸ்-அப்பின் திறனுடன் சேரும்போது, வணிகத்துடனான தொடர்போ, பொருட்களை வாங்குவதோ சிரமமற்ற ஒரு மொபைல் அனுபவமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
ஜியோ தொலைதொடர்பு தளங்கள், ரிலையன்ஸ் சில்லறை வர்த்தகம் மற்றும் வாட்ஸ்-அப் ஆகியவை, இந்திய வாடிக்கையாளர்கள் பலரின் தேவையை நிறைவேற்ற சிறு வர்த்தகர்களைத் தயார்படுத்தி, அவர்களுக்கும் பலனளிக்கிறது. இந்த சிறு வணிகர்களின் மூலமாக, தங்கள் இருப்பிடங்களுக்கு அருகிலேயே தயாரிப்புகளையும், சேவைகளையும் ஜியோ வாடிக்கையாளர்களால் வாட்ஸ்-அப் மூலமாக பெறமுடிகிறதா என்பதை நிறுவனங்கள் மிகக்கவனமாக மேற்பார்வையிடும்” என்று தெரிவித்திருக்கிறது ரிலையன்ஸ் ஜியோ.
Published by:Gunavathy
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.