Home /News /business /

மார்க் ஜூக்கர்பெர்க்கின் பழைய பதிவுகளைத் தெரியாமல் அழித்த ஃபேஸ்புக்!

மார்க் ஜூக்கர்பெர்க்கின் பழைய பதிவுகளைத் தெரியாமல் அழித்த ஃபேஸ்புக்!

மார்க் ஜூக்கர்பெர்க்

மார்க் ஜூக்கர்பெர்க்

2007 மற்றும் 2008-ம் ஆண்டு மார்க் ஜூக்கர்பெர்க் ஃபேஸ்புக்கில் செய்த பதிவுகள் அழிக்கப்பட்டுவிட்டது.

  • News18
  • Last Updated :
    ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கின் பழைய பதிவுகள் தவறுதலாக அழிக்கப்பட்டுள்ளன.

    ஜூக்கர்பெக்கின் பழைய பதிவுகள் நீக்கப்பட்டது குறித்து செய்தியாளர்களுக்குத் தெரிவித்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், “2007 மற்றும் 2008-ம் ஆண்டு மார்க் ஜூக்கர்பெர்க் ஃபேஸ்புக்கில் செய்த பதிவுகள் தவறுதலாக அழிக்கப்பட்டுவிட்டன.

    நிறையப் பதிவுகள் அழிக்கப்பட்டுவிட்டதால், அந்த தகவல்களை எந்த அளவிற்கு மீண்டும் மீட்க முடியும் என்று தெரியவில்லை. எனவே அதை அப்படியே நாங்கள் விட்டுவிட்டோம்.

    ஆனால் அவர் செய்த பதிவுகள் குறித்த விவரங்கள் அவருடைய பிளாக் மற்றும் நியூஸ்ரூமில் உள்ளன.

    சில வருடங்களுக்கு முன்பும் இதே போன்று மார்க் ஜூக்கர்பெர்கின் ஃபேஸ்புக் பதிவுகள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அழிந்ததும் குறிப்பிடத்தக்கது.

    தற்போது ஏற்பட்டுள்ள இந்த நிகழ்வால் முன்பு ஜூக்கர்பெர்க் அளித்த வாக்குறுதிகள், அறிக்கை குறித்த விவரங்கள் இல்லாதது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் பார்க்க:
    Published by:Tamilarasu J
    First published:

    Tags: Facebook, Mark zuckerberg

    அடுத்த செய்தி