Home /News /business /

வெங்காய ஏற்றுமதி அனுமதியால் சின்ன வெங்காயம் விலை உயர்வு..விவசாயிகள் மகிழ்ச்சி..

வெங்காய ஏற்றுமதி அனுமதியால் சின்ன வெங்காயம் விலை உயர்வு..விவசாயிகள் மகிழ்ச்சி..

சின்ன வெங்காயம் விலை உயர்வு

சின்ன வெங்காயம் விலை உயர்வு

Onion Price | 15 தினங்கள் முன்பு வரை 8  ரூபாய் முதல் 10 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ சின்ன வெங்காயம் இப்பொழுது இருமடங்காக உயர்ந்துள்ளது.

    வெளிநாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்ய அனுமதியால்  சென்ற மாதம் வரை 8 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை விற்பனையான சின்னவெங்காயம் விலை ஏற்றம் அடைந்து 25 ரூபாயிலிருந்து 30 ரூபாய் வரை விற்பனையானது .

    திண்டுக்கலில் வெங்காயத்திற்கு என திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று தினங்களில்  தனி சந்தையே நடைபெறும் . திண்டுக்கல் மாவட்டத்தை சுற்றியுள்ள வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், தாராபுரம், திருப்பூர், தேனி ,கம்பம் உள்ளிட்ட பல ஊர்களில் இருந்து விவசாயிகள் விளைவித்த வெங்காயத்தை இந்த சந்தைக்கு கொண்டு வருவார்கள். இந்த சந்தைக்கு வரக்கூடிய வெங்காயங்களை தமிழகம் மட்டுமன்றி கேரளா வெளிமாநில மாவட்ட வியாபாரிகள் விற்பனைக்கு வாங்கிச் செல்வர்கள்.

    சில மாதங்களாக தமிழகத்தில் வெங்காய வரத்து அதிகரித்து காணப்படுவதால் வெங்காயத்தின் விலை வீழ்ச்சி அடைந்து காணப்பட்டது. 15 தினங்கள் முன்பு வரை தமிழகம் மட்டுமன்றி வெளி மாநிலங்களான மைசூர், ஆந்திரா  போன்ற மாவட்டங்களில் இருந்தும் கிட்டத்தட்ட 500 டன் அளவில் வரத்து இருந்ததால் சின்ன வெங்காயத்தின் விலை கடும் வீழ்ச்சி அடைந்து 8 ரூபாய் முதல் 10 ரூபாய்க்கு விற்பனையானது.

    Read More : சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு.. 1050 ரூபாயை கடந்ததால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி


    இந்நிலையில் 4 மாத காலமாக ஏற்றுமதியை நிறுத்தி வைத்திருந்த அரசு  தற்போது வெளி  நாடுகளான மலேசியா, இந்தோனேசியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு வெங்காய ஏற்றுமதிக்கு அனுமதி அளித்துள்ளது. இதனால் 15 தினங்கள் முன்பு வரை 8  ரூபாய் முதல் 10 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ சின்ன வெங்காயம் இப்பொழுது 25 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்பனை ஆகிறது.

    இந்த விலையேற்றத்தால் விவசாயிகள் சற்று மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். ஏற்றுமதி அனுமதியை தொடர்ந்து நீட்டித்தால் மேலும் சின்ன வெங்காயத்தின் விலை ஏற்றம் அடைய வாய்ப்புகள் உள்ளது என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Dindigul, Onion Price

    அடுத்த செய்தி