Home /News /business /

ஆகஸ்ட் 14 முதல் இந்த பொருட்களை ஏற்றுமதி செய்ய தடை... மத்திய அரசு அறிவிப்பு!

ஆகஸ்ட் 14 முதல் இந்த பொருட்களை ஏற்றுமதி செய்ய தடை... மத்திய அரசு அறிவிப்பு!

ரவை

ரவை

கோதுமையிலிருந்து தயாரிக்கப்படக்கூடிய மாவு மற்றும் ரவை உள்ளிட்ட உணவுப்பொருட்களை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு ஆகஸ்ட் 14ம் தேதி முதல் தடை விதித்துள்ளது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரஷ்யா - உக்ரைன் போர் உச்சத்தில் இருந்த போது, இந்தியாவில் கோதுமைக்கு கடும் தட்டுப்பாடு நிலவியது. இதனால் கோதுமையின் விலை கிடுகிடுவென உயர ஆரம்பித்தது. உள்நாட்டில் விலையேற்றத்தை தடுக்கும் விதமாக கடந்த மே மாதம் இந்தியாவில் கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது. கோதுமை மாவு, ரவை, மைதா உள்ளிட்ட உணவுப் பொருட்களின் ஏற்றுமதிக்கும் புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன.

கோதுமை மற்றும் மாவு ஏற்றுமதிக்கு தடை விதித்ததைப் போலவே, தற்போது கோதுமையில் இருந்து தயாரிக்கப்படும் மைதா (சுத்திகரிக்கப்பட்ட கோதுமை மாவு), ரவை மற்றும் கலப்படமில்லாத முழு கோதுமை மாவு ஏற்றுமதிக்கு தடை விதிப்பதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது. இந்த தடை ஆகஸ்ட் 14 முதல் அமலுக்கு வர உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஏற்கனவே பெறப்பட்ட ஆர்டர்களுக்காக ஆகஸ்ட் 8 முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை மைதா, ரவை போன்றவற்றை ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதிக்காக முன்பே கப்பலில் ஏற்றப்பட்ட சரக்குகள் மற்றும் ஏற்கனவே சுங்கத்துறை வசம் ஏற்றுமதிக்காக ஒப்படைக்கப்பட்டுள்ள சரக்குகள் மட்டுமே பதிவு தேதியின் அடிப்படையில் அனுமதி அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.



மத்திய அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், IMC ஆல் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து ஏற்றுமதி பொருட்களும், டெல்லி, மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தாவில் உள்ள ஏற்றுமதி ஆய்வுக் குழு அல்லது அதன் EIA களின் தரச் சான்றிதழை வழங்குவதற்கு பிறகே ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read : தொடர்ந்து 5 ஆண்டுகள் ஒரு நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு கிராஜுய்டி தொகை.. முழு விபரம்!

ரஷ்யா - உக்ரைன் போரால் கோதுமை இறக்குமதி ஒருபுறமும், கொளுத்திய கோடை வெயிலால் உள்நாட்டு உற்பத்தி மறுபுறமும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் இந்தியாவில் கோதுமையின் விலை வரலாறு காணாத அளவிற்கு உச்சம் தொட்டது. இதனால் மத்திய அரசு கோதுமை மாவுக்கான ஏற்றுமதி கொள்கையை கடந்த மாதம் மாற்றியமைத்து, கோதுமை சார்ந்த சில பொருட்களை ஏற்றுமதி செய்ய வணிகர்கள் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டது.



ஏற்கனவே உள்ள கொள்கையின் படி, கோதுமை மாவை ஏற்றுமதி செய்வது, கோதுமை ஏற்றுமதி தொடர்பான இடைநிலைக் குழுவின் பரிந்துரைக்கு உட்பட்டது. இருப்பினும், புதிய கொள்கையின் கீழ், மேற்கூறிய அனைத்து பொருட்களின் ஏற்றுமதியும் பரிந்துரைகளுக்கு உட்பட்டதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
2021 - 2022ம் நிதியாண்டில் மட்டும் இந்தியாவில் இருருந்து 18 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கோதுமை மாவு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by:Vijay R
First published:

அடுத்த செய்தி