• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • மருத்துவமனை சிகிச்சைக்கு முந்தைய மற்றும் பிந்தைய கால செலவுகளை சுகாதார காப்பீட்டு திட்டங்கள் ஏற்குமா?

மருத்துவமனை சிகிச்சைக்கு முந்தைய மற்றும் பிந்தைய கால செலவுகளை சுகாதார காப்பீட்டு திட்டங்கள் ஏற்குமா?

மாதிரி படம்

மாதிரி படம்

தற்போது மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிவதால், பலர் மருத்துவ ஆலோசனைகள் மற்றும் நோய் கண்டறியும் சோதனைகளுக்கான செலவுகளால் ஏற்படும் நிதி தாக்கங்களை பற்றி கவல்கொண்டு வருகின்றனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கொரோனா வைரஸ் தொற்றுநோய் இரண்டாவது அலையின் பிடியில் இந்தியா சிக்கியதால் தற்போது வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. முதல் அலை தாக்கத்தை போலவே, இந்தமுறையும் மகாராஷ்டிரா மற்றும் அதன் தலைநகர் மும்பை ஆகிய இரண்டு பகுதிகளும் மிக மோசமான பாதிப்புக்கு ஆளாகியுள்ளது. மேலும் தற்போது மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிவதால், பலர் மருத்துவ ஆலோசனைகள் மற்றும் நோய் கண்டறியும் சோதனைகளுக்கான செலவுகளால் ஏற்படும் நிதி தாக்கங்களை பற்றி கவல்கொண்டு வருகின்றனர்.

ஏனெனில் ஏற்கனவே நிதி ரீதியாக பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போதைய வைரஸ் பாதிப்பு நிதி சிக்கல்களை இன்னும் அதிகரித்துள்ளது என்று சொல்லலாம். இதய நோய், சர்க்கரை நோய் போன்ற நீண்ட கால வியாதிகளை போலவே, கொரோனா பாதிப்பும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதை தாண்டி பல குறிப்பிடத்தக்க செலவுகளை உள்ளடக்கியிருக்கிறது. COVID-19 நோயாளிகளுக்கு 14 நாள் சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட காலத்திற்கு பிறகும் மருத்துவ பராமரிப்பு தேவைப்படும் நிலை அதிகம் உள்ளன. இது போன்ற செலவுகள் சமாளிப்பது பலருக்கு கடினமாகவே உள்ளது.

பொதுவாக ஒரு வழக்கமான நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரின் மருத்துவமனை சிகிச்சை செலவுகளை ஈடுசெய்ய சுகாதார காப்பீட்டுக் கொள்கை (Health Insurance) உதவுகிறது. ஆனால் மருத்துவமனையில் சேர்ப்பதற்கு முன்பும், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதற்கு பின்பும் உண்டாகும் செலவுகளை பாலிசிகள் மூலம் கோரலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?. இருப்பினும் இந்த பாலிசிகளில் சில கட்டுப்பாடுகள் உள்ளன. அதனால் உங்களால் எல்லா செலவுகளையும் கிளைம் செய்ய முடியாது. இருப்பினும் மருத்துவமனை சிகிச்சை தவிர இதர சிகிச்சை மற்றும் சோதனை செலவுகளை பணம் செலுத்தாமல் பாலிசி மூலம் ஈடு செய்யலாம். எப்படி என்பதை குறித்து இந்த பதிவில் காண்போம்.

மருத்துவமனையில் சேருவதற்கு முன்பு செய்யப்படும் RT-PCR சோதனைக்கான செலவை சுகாதார காப்பீட்டுக் கொள்கை செலுத்துமா?

கட்டாயம் செலுத்தும். ஒரு சுகாதார காப்பீட்டுக் கொள்கையானது, ஒருவர் தொற்றுநோயினால் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு முன்பு, அது தொடர்பாக எடுத்துக்கொள்ளும் நோய் கண்டறியும் சோதனைகளுக்கான செலவு மசோதாவையும் உள்ளடக்கியுள்ளது. இது குறித்து காப்பீட்டு வாங்குபவர்களுக்கான சுயாதீன தளமான பெஷாக்.ஆர்ஜின் நிறுவனர் மகாவீர் சோப்ரா கூறியதாவது, "ஆர்.டி.-பி.சி.ஆர் போன்ற மருத்துவ பரிசோதனைகள் மற்றும் விசாரணைகள் உட்பட, ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு முன்பு மேற்கொள்ளும் அனைத்து அனுமதிக்கக்கூடிய செலவுகளும் post-hospitalisation செலவுகளின் ஒரு பகுதியாக உள்ளன" என்று கூறியுள்ளார்.

பொதுவாக ஒருவரின் உடலில் கொரோனா வைரஸின் தடயங்களைக் கண்டறிய ஆர்டி-பி.சி.ஆர் சோதனை பயன்படுத்தப்படுகிறது. இதன் விலை ரூ.1,200 வரை இருக்கும். COVID-19 சிகிச்சைக்காக நீங்கள் மருத்துவமனையில் சேரும் சூழ்நிலை ஏற்படும்போது, அதற்கு முன்னதாக எடுத்துக்கொண்ட RT-PCR சோதனை, இரத்த பரிசோதனைகள் மற்றும் CT ஸ்கேன் செலவுகள் காப்பீட்டாளரால் ஏற்றுக்கொள்ளப்படும். ஆனால் நிபந்தனை என்னவென்றால், இந்த பரிசோதைகளை நீங்கள் நேரடியாக மருத்துவமனையில் செய்திருக்க வேண்டும்.

இது குறித்து பஜாஜ் அலையன்ஸ் பொது காப்பீட்டின் தலைமை சுகாதார உரிமைகோரல்களின் அதிகாரி பாஸ்கர் நேருர்கர் கூறுகையில், "COVID-19 பாசிட்டிவ் நிகழ்வுகளில், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் ஒரு நேர்மறையான முடிவைக் கொடுக்கும் RT-PCR இன் செலவு, காப்பீட்டு திட்டத்தில் ஈடுசெய்யப்படும்" என்று கூறியுள்ளார். ஒருவேளை சோதனை முடிவுகள் நெகட்டிவாக வந்தால், உங்கள் சுகாதார காப்பீட்டுக் திட்டம் OPD (வெளி-நோயாளித் துறை) கட்டணங்களை திருப்பிச் செலுத்தும் கொள்கைகளை கொண்டிருக்கும் பட்சத்தில் இதுபோன்ற கண்டறியும் சோதனைகளுக்கான செலவுகளை நீங்கள் கிளைம் செய்ய முடியும். ஒருவேளை உங்கள் காப்பீட்டு திட்டம் OPD செலவுகளை ஏற்காத பட்சத்தில் இந்த செலவுகளை நீங்களே ஏற்க வேண்டி இருக்கும்.

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு ஏற்படும் செலவுகளை பாலிசிகள் ஏற்குமா?

பெரும்பாலான சுகாதார காப்பீட்டுத் திட்டங்கள் மருத்துவமனையிலிருந்து நீங்கள் வெளியேறிய பிறகு ஏற்படும் செலவினங்களை ஏற்கும். இது குறித்து நெருர்கர் கூறியதாவது, " டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு மருத்துவர்களால் அறிவுறுத்தப்படும் சோதனைகள் மற்றும் 60 நாட்களுக்குப் பிறகு மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்படுவது ஆகியவற்றிற்கான செலவுகளை கொள்கை விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் படி ஹெல்த் பாலிசிஸ் ஏற்கும்" என்று கூறினார்.

உண்மையில், உங்கள் உடல்நலத்தை பராமரிப்பதற்கு நீங்கள் வீட்டிலேயே உதவியைப் பெற வேண்டுமானால் அதற்கான செலவுகளும் பாலிசியில் அடங்கும். அதே போல் முதுகெலும்பு அறுவை சிகிச்சை விஷயத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு பிசியோதெரபி செஷன் மேற்கொள்ளப்படும். இந்த செலவுகள் உங்கள் காப்பீட்டு வரம்புகளில் அடங்கும். சில பிரீமியம் தயாரிப்புகள் இந்த கவரேஜை 90 நாட்களுக்கு நீட்டிக்கின்றன. இருப்பினும், நிலையான கொரோனா கவாச் கொள்கைகளைப் பொறுத்தவரை, ஒருவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின்னர் 30 நாட்கள் வரை அவரின் மருத்துவ செலவுகள் ஈடுசெய்யப்படும்.

உரிமைகோரலை தாக்கல் செய்ய ஒருவர் என்ன ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்?

மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு செய்யும் செலவுகளுக்கு உரிமைகோர நீங்க சமர்ப்பிக்க வேண்டிய முக்கிய ஆவணம் உங்கள் நோய் கண்டறியும் சோதனை ரசீதுகள் தான். எனவே நீங்கள் எடுத்துக்கொண்ட அனைத்து சோதனைகளுக்கான எல்லா பில்கள் மற்றும் ரசீதுகளையும் பாதுகாப்பாக வைத்திருக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இன்னும் சிறப்பாக, பில்களை மின்னஞ்சல் அனுப்ப நோய் கண்டறியும் மையங்களிடம் கேட்கலாம் அல்லது பயன்பாட்டின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஏனெனில் மன அழுத்தத்தின் போது, ரசீதுகளை கையில் வைத்திருப்பதை விட இந்த ஆவணங்களை டிஜிட்டல் முறையில் அணுகுவது எளிதாக இருக்கும்.

Also read... SBI, HDFC வங்கிகளில் மீண்டும் வட்டி உயர்வு - சலுகையை ரத்து செய்த வங்கிகள்!

அதுவே மருத்துவமனைக்கு பிந்தைய செலவினங்களுக்கு உரிமைகோர, உங்களின் டிஸ்சார்ஜ் சம்மரி முக்கியமான ஆவணமாக இருக்கும். ஏனெனில் அதில் மருந்துகள் மற்றும் பாலோஅப்ஸ் போன்ற விவரங்கள் இடம்பெற்றிருக்கும். இது திருப்பிச் செலுத்தும் கோரிக்கையாக தாக்கல் செய்ய வேண்டியிருக்கும். அதாவது, டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு ஏற்பட்ட செலவுகளுக்கு முதலில் பணம் செலுத்த வேண்டும். உங்கள் காப்பீட்டு நிறுவனம் பின்னர் அந்த செலவுகளை திருப்பிச் செலுத்தும்.

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 60 முதல் 90 நாள் காலகட்டத்தில் உங்கள் பாலோஅப் மற்றும் மருந்து செலவுகளை கணக்கில் எடுத்துக்கொண்டு தனித்தனியாக தாக்கல் செய்யலாம். இது மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய செலவுகளை ஈடுசெய்யும் மசோதாவை போல, பணமில்லா உரிமைகோரலாக இருக்காது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால் இரண்டிற்கும் உரிமை கோர உங்கள் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். பொதுவாக, காப்பீட்டாளர்கள் இந்த உரிமைகோரலைத் தொடங்கவும், ஆவணங்களை சமர்ப்பிக்கவும் 7 முதல் 15 நாட்கள் அவகாசத்தை வழங்குகிறார்கள்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: