பயன்படுத்தாத வேலட்டுகளுக்கு கட்டணம் - மொபிக் விக், பேடிஎம், ப்ரீ ரீச்சார்ஜ் அக்கவுண்டுகளை ஆக்டிவேட் செய்வது எப்படி

மாதிரி படம்

Paytm, MobiKwik, Free Recharge உள்ளிட்ட இ- வேலட்டுகளை பலரும் பணப்பரிவர்த்தனைக்காக பயன்படுத்தி வருகின்றனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
பணப்பரிவர்த்தனைக்காக பயன்படுத்தும் ஆன்லைன் இ-வேலட் (e-Wallet) அக்கவுண்டுகள் ஆண்டுக் கணக்கில் பயன்படுத்தாமல் இருந்தால், பராமரிப்பு கட்டணங்கள் விதிக்கப்படும் என சில நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

Paytm, MobiKwik, Free Recharge உள்ளிட்ட இ- வேலட்டுகளை பலரும் பணப்பரிவர்த்தனைக்காக பயன்படுத்தி வருகின்றனர். பலர் இந்த வேலட்டுகளில் அக்கவுண்ட் ஓபன் செய்து வைத்திருந்தாலும் பயன்படுத்துவதில்லை. இந்நிலையில், மொபிக்விக் (MobiKwik)இ-வேலட், பயன்படுத்தாமல் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் அக்கவுண்டை ரீ-ஆக்டிவேட் செய்யுமாறு மெசேஜ் அனுப்பி வருகிறது. ஒரு ஆண்டுக்கும் மேலாக அக்கவுண்டை பயன்படுத்தாமல் இருக்கும் வாடிக்கையாளர்கள் பராமரிப்பு கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் அந்த நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால், பேடிஎம் மற்றும் பிரி ரீச்சார்ஜ் நிறுவனங்கள் அத்தகைய அறிவுப்புகளை வெளியிடவில்லை.

இன் ஆக்டிவ் வேலட் என்றால் என்ன?

ரிசர்வ் வங்கியின் வழிக்காட்டு முறைகள் படி, ஓராண்டில் ஒருமுறை கூட பணப்பரிவர்த்தை செய்யப்படாத அக்கவுண்டுகள், இன் ஆக்டிவ் அக்கவுண்டுகள் என கூறப்படுகிறது. ஒருவேளை நீங்கள் இன் ஆக்டிவாக இருந்தால், குறிப்பிட்ட நிறுவனம் உங்களுக்கு மெசேஜ் மூலம் மீண்டும் ஆக்டிவேட் செய்ய அறிவுறுத்தும். வழக்கமாக பயன்படுத்துபவர்கள் என்றால் உங்களுக்கு எந்த கவலையும் இல்லை. ஒரு முறை உங்கள் அக்கவுண்ட் இன் ஆக்டிவ் என்று குறிப்பிடப்பட்டுவிட்டால், தேவைப்படும்பட்சத்தில் நீங்கள் முறைப்படி அதனை மீண்டும் ஆக்டிவேட் செய்ய நேரிடும்.

மொபிக் விக் பராமரிப்பு கட்டணம்

மொபிக் விக் இ-வேலட் இணையத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் பராமரிப்பு கட்டணமாக அந்த நிறுவனம் 100 ரூபாய் முதல் 140 ரூபாய் வசூலிக்கும் என தெரிவித்துள்ளது. இந்த கட்டணம் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே வசூலிக்கப்படும். பயன்பாட்டில் இல்லாத அக்கவுண்டை மீண்டும் ஆக்டிவேட் செய்ய வேண்டும் என மெசேஜ் அனுப்பிய 7 நாட்களுக்குள் வாடிக்கையாளர் தங்களது மொபிக் விக் அக்கவுண்டை ஆக்டிவேட் செய்யாவிட்டால், அந்த இ-வேலட் அக்கவுண்டில் இருந்து பராமரிப்பு கட்டணம் நேரடியாக வசூலிக்கப்படும் என மொபிக் விக் நிறுவனம் கூறியுள்ளது.

பராமரிப்பு கட்டணம் ரூ.100 செலுத்த வேண்டியிருக்கும்போது, உங்கள் மொபிக் விக் அக்கவுண்டில் 50 ரூபாய் மட்டுமே உள்ளது என்றால், அந்த கட்டணத்தை மட்டும் வசூலித்துக்கொள்ளும். உரிய தொகை இருந்தால் முழுமையாக எடுத்துக்கொள்ளும். பணம் இல்லாமல் இருந்தால், மைனஸ் தொகை எதுவும் வசூலிக்கப்படாது என அந்த நிறுவனம் கூறியுள்ளது. இந்த கட்டணம் வசூலிப்பு அனைத்தும், அக்கவுண்டை பயன்படுத்தாமல் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே. ஒருவேளை உங்களிடம் பராமரிப்பு கட்டணம் வசூலிக்கப்பட்டிருந்தால், அந்த பணத்தை மொபிக் விக் வேலட்டை மீண்டும் ஆக்டிவேட் செய்து பயன்படுத்தும்போது மீண்டும் பெற்றுக்கொள்ளலாம்.

e - Wallet-ஐ ஆக்டிவேட் செய்வது எப்படி?

உங்களின் Freecharge e-wallet - ஐ மீண்டும் ஆக்டிவேட் செய்கிறீர்கள் என்றால், அந்த செயலி மூலம் உங்களின் பான் எண்ணையும், பதிவு செய்த மொபைல் எண்ணையும் மீண்டும் பதிவிட்டு ஆக்டிவேட் செய்து கொள்ளலாம். மொபிக் விக் இ-வேலட் (MobiKwik e-wallet)-ஐ மீண்டும் ஆக்டிவேட் செய்ய விரும்புபவர்கள், அந்த செயலியின் வாடிக்கையாளரை தொடர்பு கொண்டு, அவர்கள் கூறும் வழிகாட்டுதலை பின்பற்றி ஆக்டிவேட் செய்யலாம்.

Also read... Gold Rate: அதிரடியாக குறையும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை... மாலை நிலவரம் என்ன?

அதேசமயம் உங்கள் இ-வேலட் பயன்பாட்டில் இல்லாதபோதும் ரீச்சார்ஜ், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு கட்டணம் மற்றும் ஆன்லைட் பேங்கிங் ஆகியவற்றை தொடர்ந்து செய்யலாம். இ-வேலட் பணப்பரிவர்த்தை செய்வதற்கு கண்டிப்பாக உங்களின் இ-வேலட் அக்கவுண்டை மீண்டும் ஆக்டிவேட் செய்திருக்க வேண்டும். மேலும், காஷ்பேக் ஆஃபர், கிரெடிட் கார்டு டிரான்ஸ்பர் உள்ளிட்டவைகளையும், இ-வேலட் அக்கவுண்ட் ஆக்டிவேட்டில் இல்லையென்றாலும் மேற்கொள்ளலாம். இதன்மூலம் கிடைக்கும் பணம் உங்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுவிடும்.

e-Wallet -அக்கவுண்டை நிரந்தரமாக மூடுவது எப்படி

உங்கள் மொபைல் போனில் இருந்து இ-வேலட் செயலியை டெலிட் செய்துவிட்டால், இ-வேலட் அக்கவுண்ட் முழுமையாக மூடப்பட்டுவிட்டதாக அர்த்தம் கிடையாது. Free Recharge, Paytm, MobiKwik ஆகிய இ-வேலட்டுகளில் இருந்து நிரந்தரமாக வெளியேற நினைத்தால், அந்த நிறுவனத்திற்கு முறையாக இமெயில் மூலம் அல்லது வாடிக்கையாளரை தொடர்பு கொண்டு, உங்களின் கணக்கை மூட வேண்டும். அவர்களின் வழிகாட்டுதல்படி செய்தால் மட்டுமே உங்களின் கணக்கு நிரந்தரமாக மூடப்படும்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: