Home /News /business /

முதலீடு அல்லது காப்பீடு... எதிர்கால வாழக்கைக்கு சிறந்தது எது?

முதலீடு அல்லது காப்பீடு... எதிர்கால வாழக்கைக்கு சிறந்தது எது?

முதலீடு அல்லது காப்பீடு

முதலீடு அல்லது காப்பீடு

இரண்டிற்கும் உள்ள பலன்களை தெரிந்துகொண்டு எதிர்கால வாழ்விற்குத் தேவையானதைச் சரியாகத் தேர்வு செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    தீவிர கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு தற்போதைய காலகட்டத்தில் இன்சூரன்ஸ் மற்றும் முதலீடு என்பது நம் வாழ்க்கையின் ஒரு அங்கமாகி விட்டது. சம்பாதிப்பதில் ஒரு பகுதியை தன்னுடைய மற்றும் தன் குடும்ப எதிர்காலத்திற்காகச் சேமிப்பதில் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இவை ஒரு புத்திசாலித்தனமான நடவடிக்கையாக இருந்தாலும், இன்சூரன்ஸ் மற்றும் முதலீடு என்பது ஒரே பொருளைக் குறிக்கும் என்று பலர் தவறாக நினைக்கின்றனர். முதலீடுகளும் காப்பீடும் ஒருவருடைய நிதி பாதுகாப்பின் முக்கிய 2 தூண்கள். நல்ல முதலீடுகள் எதிர்கால வாழ்க்கையைச் சிறப்பாக வாழ நமக்கு உதவும் அதே வேளையில், காப்பீடுகள் என்பது ஒரு நபர் அல்லது குடும்பத்தை சில வகையான இழப்பிலிருந்து பாதுகாக்கும் நோக்கத்துடன் ஒருவர் நிதியைக் கொடுத்து வாங்கும் சேவையாகும்.

    ஃபினான்ஸ் பிரண்டான ஃபிஸ்டம் நிறுவனத்தின் தலைவர் நிரவ் கர்கேரா கூறுகையில், இரண்டிலும் சிறந்ததைக் கொண்டிருப்பது முக்கியம் என்றாலும், ஒருவரது வரையறுக்கப்பட்ட நிதி திறன் இரண்டில் ஒன்றுக்கு முன்னுரிமை அளிக்கத் தூண்டும். என்றாலும் பகுத்தறிவு மற்றும் பரிசீலனைகள் மூலம் இரண்டில் எது சிறந்தது என முடிவெடுப்பதை எளிதாக்க முடியும்.

    முதலீடு மற்றும் காப்பீடு இரண்டும் வழங்கும் பயன்கள்:

    இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்வதற்கு முதல் படி இரண்டும் அளிக்கும் முக்கிய பலன்களைப் புரிந்து கொள்வது முக்கியம் என்கிறார் கர்கேரா. ஒரு முதலீடு என்பது பொதுவாக பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட நிதி நோக்கத்திற்காக எதிர்காலத்தில் வாங்கும் சக்தியை வழங்க முற்படுகிறது. அதுவே காப்பீடு என்று வரும் போது, டேர்ம் இன்ஷூரன்ஸ் என்ற பியூர் லைஃப் கவர் ப்ராடக்ட், ஒருவர் இறந்தால் குறிப்பிட்ட நபரின் நெருக்கமான குடும்ப உறுப்பினர்களுக்கான நிதி பங்களிப்பைத் திறம்பட மாற்றியமைக்கிறது. மேலும் ஹெல்த் இன்சூரன்ஸ் என்பது மருத்துவச் செலவுகளுடன் தொடர்புடைய நிதிச் சுமையைக் குறைக்க உதவுகிறது.

    Also Read : PM kisan : இன்னும் 4 நாட்களே உள்ளன.. ரூ. 2000 பெற கட்டாயம் இதை செய்துவிடுங்கள்!

    அடுத்து ஒரு தனிநபரின் வாழ்க்கை இயக்கவியலின் சூழலை அடிப்படையாகக் கொண்டு நோக்கங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். உதாரணமாக, நிதி சார்ந்தவர்கள் இல்லாத ஒருவர், அகால மரணம் ஏற்பட்டால் வருமான மாற்றீட்டை உறுதி செய்ய வேண்டிய அவசியமில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் எதிர்பாராத மருத்துவச் செலவுகள் ஏற்படும் பட்சத்தில் நிதி தலையீட்டிற்காகச் சுகாதாரக் காப்பீட்டிற்கு முற்றிலும் முன்னுரிமை அளித்து, நிதிப் பாதுகாப்பிற்காக முதலீடு செய்ய முற்பட வேண்டும் என்கிறார்கள். குறிப்பிட்ட நபரைச் சார்ந்து இருக்கும் குடும்பத்தில் எடுக்கப்படும் டேர்ம் இன்ஷூரன்ஸ் என்பது போதுமான ஆயுள் காப்பீட்டுடன் குடும்பத்திற்கான உடல்நலக் காப்பீட்டிற்கும் முன்னுரிமை அளிக்கிறது. குடும்பத்தின் நிதி பாதுகாப்பிற்காக முதலீடு செய்வது அர்த்தமுள்ளதாக இருக்கிறது என்கிறார் நிரவ் கர்கேரா.

    மறுபுறம் ஏற்கனவே போதுமான அளவில் காப்பீடு செய்யப்பட்ட ஒருவருக்கு, முதலீடு செய்யப் பரிந்துரைக்க முன்னுரிமை அளிக்கப்படுகிறது. எனவே முதலீடா அல்லது காப்பீடா என்று வரும் போது பதில் எளிமையானது. இப்போது உங்களுக்கு என்ன தேவை மற்றும் எதிர்காலத்தில் உங்களுக்கு என்ன தேவை என்பதைப் பொறுத்து நீங்கள் தீர்மானிக்கலாம். முதலீடுகள் உங்கள் தற்போதைய மற்றும் எதிர்காலத்தைக் கவனித்துக் கொள்ளும் அதே வேளையில், நீண்ட காலத்திற்கு உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் காப்பீடு கவனித்துக் கொள்ளும் என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.
    Published by:Janvi
    First published:

    Tags: Insurance, Investment

    அடுத்த செய்தி