ஹோம் /நியூஸ் /வணிகம் /

மீண்டும் சூடு பிடிக்கும் சில்லறை வணிகம்.. புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் வணிக நிறுவனங்கள்.!

மீண்டும் சூடு பிடிக்கும் சில்லறை வணிகம்.. புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் வணிக நிறுவனங்கள்.!

வணிகம்

வணிகம்

Indian Retail Industry | வணிக வளாகங்கள் மற்றும் பெரிய வணிக நிறுவனங்கள் சில்லறை வர்த்தகத்தில் வாடிக்கையாளரின் ஈடுபாட்டை இன்னும் அதிகரிப்பதற்கு வேண்டிய முக்கியத்துவத்தை அறிந்து, வாடிக்கையாளர்களை ஈர்க்கும் புதிய புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 4 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வணிகத்தின் போக்கு மாறி வருகிறது. வீட்டில் இருந்தபடியே ஆர்டர் செய்தால் போதும், எல்லா பொருட்களுமே வீட்டுக்கு டெலிவரி செய்யப்படும் அளவுக்கு ஆன்லைன் வணிகம் முன்னேறியுள்ளது. இருப்பினும், கடைகளுக்கும், வணிக வளாகங்களுக்கும் குறைவில்லை. மக்களை ஈர்க்க, தக்கவைக்க பல உத்திகளை வணிக நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. ஆன்லைன், வணிக வளாகங்கள், செயின் ஸ்டோர்ஸ், என்று சிறிய கடைகள், பெட்டிக் கடைகள் எல்லாம் அழிந்து வரும் நிலையில் உள்ளன. இந்த போக்கு எவ்வாறு மாற இருக்கிறது?

வாடிக்கையாளரின் வசதிக்கேற்பவும், விருப்பத்திற்கு ஏற்பவும் அவர்கள் விரும்பும் அனைத்து விதமான வீட்டு உபயோக பொருட்கள், உடைகள், குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டு பொருட்கள், எலெக்ட்ரானிக் சாதனங்கள் ஆகியவற்றை சில்லறை வணிக பொருட்களை ஒரே இடத்தில் குவித்து அவர்கள் விரும்பிய  எதை வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ள வணிக வளாகங்கள் எனும் கட்டமைப்பை ஏற்படுத்தி வணிக நிறுவனங்கள் தங்களது நிறுவன பொருட்களை விளம்பரபடுத்தியும் விற்பனையை அதிகரிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு உள்ளனர்.

ஆனால் 2020 ஆம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் காரணமாக ஏற்படுத்தப்பட்ட முழு லாக்டவுனால் அதிகம் பாதித்த துறைகளில் சில்லறை வணிகம் மிக முக்கியமான ஒன்றாக இருந்தது.

சிறு வியாபாரிகள் முதல் பெரிய பெரிய வணிக நிறுவனங்கள் வரை அனைவரும் மிக பெரும் நஷ்டத்தை சந்தித்தனர். நேரடியாகவே பார்த்து பார்த்து பொருள்கள் வாங்கி பழக்கப்பட்ட மக்கள் முதன்முறையாக முற்றிலும் ஆன்லைன் முறையில் அனைத்தையும் வாங்க துவங்கினர். அதன் விளைவாக பலர் ஆன்லைன் முறையில் உள்ள சாதகங்களை கண்டறிந்து கொண்டு நேரடியாக கடைக்கு சென்று வாங்குவதற்கு பதிலாக அனைத்தையும் டிஜிட்டல் மயமாகவும், ஆன்லைன் வழியாகவும் வாங்கிக் கொள்ள ஆரம்பித்தனர். இதனால் இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் சில்லறை வர்த்தகம் அதள பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது.

முதலில் இதில் பெரிய அக்கறை காட்டாத பெரிய கார்பரேட் நிறுவனங்கள் தங்கள் விற்பனை முறையை முற்றிலும் ஆன்லைன் முறையில் மாற்றி பொருட்களை விற்பனை செய்ய துவங்கின. ஆனால் என்னதான் ஆன்லைன் வழியாக வியாபாரம் நடந்தாலும், நேரடியாக வாடிக்கையாளர்கள் கடைகளுக்கு வந்து தங்களுக்கு வேண்டிய பொருட்களை பார்த்து அனுபவித்து வாங்குவதில் உள்ள பயன்களையும் அதில் கிடைக்கும் வாடிக்கையாளரின் மன திருப்தியையும் அந்நிறுவனங்கள் தற்போது தான் உணர துவங்கி உள்ளனர்.

எனவே வாடிக்கையாளர்களை நேரடியாக சில்லறை விற்பனையில் பொருட்களை வாங்குவதற்கு ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டும், புதிய கடைகள் மற்றும் வணிக வளாகங்களை அமைத்தும் வாடிக்கையாளரை கவர்வதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதைப் பற்றி பேசிய ஓமக்ஸ் லிமிடெட்-ன் இயக்குனர், அனுபவ சில்லறை விற்பனை எனப்படும் நேரடி வணிகம் முறையில் வணிக வளாகங்கள் மூலம் தங்களுக்கு தேவையான அனைத்தையும் வாங்குவது பலவித வாடிக்கையாளர்களுக்கு மிகவும் விருப்பமானதாக இன்றும் இருந்து வருகிறது. அனுபவ சில்லறை வணிகத்தை ஊக்குவிக்கவும், விற்பனையை மேம்படுத்தவும் நாங்கள் பலவித சில்லறை வணிக முறைகளை புதியதாக ஆராய்ந்து வருகிறோம்.

அது இன்றைய நவீன வாடிக்கையாளர்களின் மனநிலைக்கு ஏற்றதாகவும் அவர்கள் முழு அளவில் திருப்தி அடையவும் பல புதிய திட்டங்களை வகுத்து அவற்றை பரிசோதித்து வருகிறோம். மேலும் நாங்கள் அறிமுகபடுத்தும் புதிய திட்டங்கள் மற்றும் வசதிகள் வாடிக்கையாளர்களுக்கு பிடித்தமானதாக இருக்கும் வகையில் பலவித முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இவை அனைத்தையும் தாண்டி இன்றைய நிலையில் அதிக அளவிலான போட்டிகள் நிறைந்த இந்த சில்லறை வர்த்தகத்தில் எங்கள் இடத்தை தக்க வைத்துக் கொள்வதிலும் மிகுந்த சிரத்தையோடு செயல்பட்டு வருகிறோம் என்று கூறியுள்ளார்.

Also Read : டெபிட், கிரெடிட் கார்டுகள் மீதான சிறப்பு சலுகைகள் என்னென்ன?

முன்பெல்லாம் சாதாரண பெட்டிக்கடைகளிலும், அங்கங்கு தோன்றியிருக்கும் உள்ளூர் கடைகளிலும் மட்டுமே பொருட்களை வாங்க விரும்பிய மக்களை வணிக வளாகங்கள் எனும் புதுவித கட்டமைப்பை ஏற்படுத்தி அங்கு சென்று வருவதை ஒரு ஆடம்பரமான நிலை என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி வைத்துள்ளது இந்த அனுபவ சில்லரை விற்பனை முறை.. உண்மையில் இது நன்றாக வேலை செய்துள்ளது என்று தான் கூற வேண்டும்.  பெரிய பெரிய நகரங்களில் வசிக்கும் மக்கள் பலரும் அவ்வபோது இந்த வணிக வளாகங்களுக்கு சென்று வருவதை பொழுது போக்காக கொண்டுள்ளனர்.

மேலும் அவ்வாறு வாங்கும் பொருட்கள் ஆன்லைன் முறையில் வாங்கும் பொருட்களை விட தரமானதாகவும் இருக்கும் என்ற நம்பிக்கையை கொண்டுள்ளனர். சிலர் விண்டோ ஷாப்பிங் என அழைக்கப்படும், எந்த பொருட்களையும் வாங்காமல் வெறுமனே சுற்றிவிட்டு, அந்த பொருட்களை பார்த்துவிட்டு வருவதே ஒரு பொழுதுபோக்காகவும் வைத்துள்ளனர். அந்த அளவிற்கு இந்த அனுபவ சில்லறை விற்பனை மக்களிடையே ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்போது அந்த விற்பனை முறை நன்றாக சூடு பிடித்தும் உள்ளது.

டிரேஹான் ஐரிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் “அபிஷேக் டிரஹான்” இதைப் பற்றி கூறுகையில், “சில்லறை வணிகத்துறை தற்போது மிகப் பெரும் ஒரு மாறுதலை அடைந்து வருகிறது. சிறிய கல்லை வைத்து ஆரம்பிக்கப்பட்ட இந்த சில்லறை அனுபவ விற்பனை முறை, தற்போது மிகப்பெரும் வணிக வளாகங்களாக உயர்ந்து மக்களுக்கு அவர்கள் இதுவரை பார்த்திடாத அதே சமயத்தில் அவர்கள் விரும்ப கூடிய அனுபவத்தை அளித்து வருகிறது. ஏற்கனவே ஆன்லைன் வர்த்தகத்தோடு போட்டி போட்டுக் கொண்டு வரும் நிலையில், இந்த சில்லறை வர்த்தகத்தை ஊக்குவிப்பதற்காக மக்களை கவரவும், இந்த வணிக வளாகங்கள் புதிய புதிய வசதிகளையும், மக்கள் குடும்பமாக வந்து செல்வதற்கு ஏற்ப புதிய கேளிக்கை அம்சங்களையும் அறிமுகப்படுத்த வேண்டும்.

Also Read : தங்கம் வாங்கப் போகிறீர்களா.? - டிஜிட்டல் தங்கம் முதலீடு பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.!

மேலும் இது போன்ற வணிக வளாகங்களை நோக்கி மக்களை படையெடுக்க செய்வதற்காக அவர்களை ஊக்கப்படுத்துவதற்காகவும், மகிழ்விப்பதற்காகவும் நாங்கள் பலவித நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். அந்த வகையில் உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள், இசைக்கச்சேரி, விளையாட்டுக்கள் மற்றும் மேலும் பல குழந்தைகள் சம்பந்தப்பட்ட கேளிக்கை நிகழ்ச்சிகளையும் அறிமுகப்படுத்தி வருகிறோம்.. இதன் மூலம் சுற்று வட்டாரத்தில் உள்ள மக்களையும், நேரடியாக வந்து பொருட்கள் வாங்குவதில் விருப்பமுள்ள மக்களையும் அதிக அளவில் கவர்ந்திழுக்க முடியும் என்று நம்புகிறோம்” என தெரிவித்துள்ளார்.

சி பி ஆர் எ வெளியிட்ட மற்றொரு அறிக்கையில், இந்த 2022 ஆம் ஆண்டில் வணிக வளாகங்களுக்காக மட்டுமே பல்வேறு குத்தகைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த வணிக வளாகங்கள் சென்றாண்டை விட கிட்டத்தட்ட 30 சதவீதம் அதிக வருவாயை இந்த நிதியாண்டில் பெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வணிக வளாகங்களில் உள்ள ஷோரூம்கள், தனித்துவமான ஒரு வடிவமைப்புடனும், புதிய அம்சங்களுடனும் வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் அமைத்து அவர்களுக்கு புதியதொரு அனுபவத்தை கொடுக்கும் என நம்புகின்றனர்.

Also Read : உஷார்.. ஹேக்கர்ஸ் இப்படித்தான் உங்கள் பேங்க் அக்கவுண்டில் இருந்து பணத்தை திருடுகிறார்கள்.!

லூலூ குழுமத்தின் வணிக வளாகங்களின் இயக்குனரான சிபு பிலிப்ஸ் இதைப்பற்றி தனது கருத்தை பகிர்ந்து உள்ளார். “நாங்கள் புதிய மாற்றங்களை வரவேற்கிறோம். அந்த வகையில் இப்போது சில்லறை வணிகத்தில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் புரட்சி அல்லது மாற்றம் எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். எதுவாக இருந்தாலும் இந்த மாற்றமானது வாடிக்கையாளரை அதிக அளவு நேரடி வர்த்தகத்தில் ஈடுபட வைப்பதும், அதேசமயம் அவர்களுக்கு புதுவிதமான அனுபவத்தை கொடுப்பதுமாக அமையப் போகிறது.திரைப்படங்களும், குறும்படங்களும் பிரபலமாக உள்ள இந்த காலத்திலும், நாவல்களை விரும்புபவர்கள் இருக்க தான் செய்கிறார்கள். அது போலவே என்னதான் ஆன்லைன் வசதிகள் பெருக்கி விட்டாலும், இன்னமும் பொருட்களை நேரடியாக தொட்டு, தடவி, அதனை ஆத்மார்த்தமாக அனுபவித்து வாங்க விரும்பும் மக்கள் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள். எனவே இந்த அனுபவ சில்லறை விற்பனையானது சில்லறை வர்த்தகத்தில் புதியதொரு புரட்சியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இதுபோக வணிக வளாகங்கள் பலவும் வாடிக்கையாளர்களை கவர்வதற்காகவும், புதுவித அனுபவத்தை கொடுப்பதற்காகவும் VR எனப்படும் “virtual reality” தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியும் VR கண்ணாடிகள், VR ஜன்னல்கள், VR திரைகள் ஆகியவற்றை வணிக வளாகங்களில் புகுத்தியும் வாடிக்கையாளர்களுக்கு புதுவித அனுபவத்தை கொடுத்து வருகின்றனர். உண்மையில் இது வேலை செய்கிறது என்றே சொல்ல வேண்டும். பல மக்கள் இவற்றை நேரடியாக பார்த்து ரசிப்பதற்காக வணிக வளாகங்களின் நோக்கி படை எடுக்க துவங்கியுள்ளனர்.

Published by:Selvi M
First published:

Tags: Business, India, Shopping malls