சம்பளம் பெறும் பணியாளர்கள் இந்தியாவில் வரி செலுத்துவதில் மிகப்பெரிய பங்களிப்பாளர்களாக உள்ளனர். இதன்மூலம், ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தில் அதிக பங்களிப்பாளராக விளங்குகின்றனர். 2022 ஆம் ஆண்டின் மொத்த வருமான வரிக் கணக்கின்படி, 50 சதவீத வரிக் கணக்குகள் ஐடிஆர் 1 மூலம் சம்பளம் பெறும் நபர்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பிப்ரவரி 1 ஆம் தேதி நிதியமைச்சரால் மத்திய பட்ஜெட் 2023 அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக, சம்பளம் பெறும் ஊழியர்கள் வரி விலக்குகள் மற்றும் ஸ்லாப் விகிதங்களின் அதிகரிப்பு குறித்து சில முக்கிய அறிவிப்புகளை எதிர்பார்க்கின்றனர்.
2023 மத்திய பட்ஜெட்டில் இருந்து சம்பளம் பெறும் ஊழியர்களின் முக்கிய எதிர்பார்ப்புகள் உடல்நலப் பாதுகாப்பு, ஓய்வுக்காலம், மகப்பேறு, ஓய்வுக்குப் பிந்தைய பலன்கள், வரிகளில் தளர்வுகள், கடன்களைப் பெறும்போது கூடுதல் சலுகைகள் மற்றும் நிலையான விலக்கு அதிகரிப்பு ஆகியவற்றில் நீண்ட கால பலன்கள் போன்றவை ஆகும். இது குறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.
புதுப்பிக்கப்பட்ட HRA விதிகள்:
வீட்டு வாடகை கொடுப்பனவை (HRA) கணக்கிடுவதற்கு மெட்ரோ நகரங்களின் வரையறையில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று சம்பளம் பெறும் ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர். தற்போது டெல்லி, கொல்கத்தா, சென்னை மற்றும் மும்பை ஆகிய நான்கு நகரங்கள் மட்டுமே மெட்ரோ நகரங்களின் பிரிவின் கீழ் வருகின்றன, மேலும் இந்த நகரங்களில் உள்ள ஊழியர்கள் HRA விலக்கு மூலம் பயனடைகிறார்கள். ஐ.டி துறையில் சுமார் 1.5 மில்லியன் மக்கள் பணிபுரியும் பெங்களூரு போன்ற பிற நகரங்களில் வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளது; அதன் மூலம் HRA விலக்கு சலுகையைப் பெற வேண்டும்.
வரி அடுக்குகளில் திருத்தம்:
தற்போது, வரி செலுத்துவோர் வரிகளை தாக்கல் செய்யும் போது இரண்டு வரி முறைகளில் ஒன்றைத் தேர்வு செய்யலாம், இதன் மூலம் அவர்களின் வருமானம் ரூ. 2.5 லட்சம் வரை வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ. 5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு எந்த வரியும் பொருந்தாது. இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில், அடிப்படை வரி விலக்கு ரூ.2.5 லட்சத்தில் இருந்து குறைந்தபட்சம் ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும் என, வரி செலுத்தும் ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
வீடு வாங்குபவர்களுக்கு வரி விலக்கு:
மலிவு விலை வீடுகளை அதிகரிக்க, மத்திய பட்ஜெட் 2023ல் இருந்து, சம்பளம் வாங்கும் வீடு வாங்குபவர்கள் அரசாங்கம் கூடுதல் சலுகைகளை வழங்கும் என எதிர்பார்க்கின்றனர். தற்போது, வருமான வரிச் சட்டத்தின் 24பி பிரிவு, வீடு வாங்குபவர்கள் வீட்டுக் கடனுக்கான வருடாந்திர வட்டிக்கு ரூ.2 லட்சம் வரை வரி விலக்கு கோர அனுமதிக்கிறது. இந்த ஆண்டு பட்ஜெட்டில், வரம்பு 5 லட்சமாக உயர்த்தப்படும் என வரி செலுத்துவோர் எதிர்பார்க்கின்றனர். மேலும், வீடு வாங்குபவர்கள் வீட்டுக் கடனில் செலுத்தப்பட்ட அசல் தொகைக்கு பிரிவு 80C இன் கீழ் ரூ. 1.5 லட்சம் வரை விலக்கு கோரலாம் மற்றும் வரம்பு ரூ.3 லட்சமாக அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கின்றனர்.
Also Read : 3900 ஊழியர்களை அதிரடியாக நீக்கிய IBM.. தொடரும் பணி நீக்கத்தால் பதறும் பணியாளர்கள்!
தனிநபர் கடனில் விலக்கு:
கல்விக் கடன் மற்றும் தனிநபர் கடன் ஆகியவை நாட்டின் கடன் சந்தையில் 35 சதவீதத்தைக் கொண்டிருக்கும் போது, வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80E கல்விக் கடன்களுக்கான வட்டிக்கு மட்டும் விலக்கு வரம்பை வழங்குகிறது மற்றும் தனிநபர் கடன் வாங்குபவர்களுக்கு விலக்கு அளிக்கப்படவில்லை. இந்த ஆண்டு, தனிநபர் கடன் பெறும் சம்பளம் பெறும் ஊழியர்களும் சில தளர்வுகளை எதிர்பார்க்கிறார்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Budget Session, Union Budget 2023