அடுத்து ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள முழுமையான நிதிநிலை அறிக்கை பல்வேறு தரப்பிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நெருங்குகிறது என்பதால் நடுத்தர மக்களை பாதிக்காத, புதிய வரிகைகள் இல்லாத, சலுகைகைகள் நிறைந்த பட்ஜெட்டாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக நடுத்தர வர்க்கத்தை பாதிக்காத, அதே நேரம் சலுகைகள் வாரி வழங்கும் பட்ஜெட்டாகவே இருக்கும் என்றும் கூறப்படுகிறது. 2023-24 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டம் வரும் 31 ஆம் தேதி புதிய நாடாளுமன்றத்தில் தொடங்க உள்ளது. நிதிநிலை அறிக்கை தயாரிக்கும் பணியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிகாரிகளோடு தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் வீட்டுக்கடன் பெற்றவர்களுக்கு இந்த பட்ஜெட்டில் வரிச்சலுகை அறிவிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய ரிசர்வ் வங்கி கடந்த 2022 ஆம் ஆண்டு வட்டிகளுக்கான ரெப்போ விகிதத்தை ஐந்து முறை உயர்த்தியுள்ளது. ஆண்டு முடியம் தருவாயிலும் கூட ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டது. இதனால் தனிநபர் வங்கி கடன் முதல் வீட்டுக் கடன்கள் வரையிலான வங்கிக் கடன்களுக்கான வட்டியும் அதிகரித்தது. தனிநபர் கடன், வாகனக் கடன் உள்ளிட்ட குறுகிய கால கடன்கள் வட்டி உயர்வால் பெரிய அளவில் பாதிக்கப்படாது. ஆனால் வீட்டுக்கடன் நீண்ட காலக் கடன் என்பதால் அடிக்கடி வட்டி உயர்வு கொஞ்சம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்நிலையில் வரும் பட்ஜெட்டில் வீட்டுக் கடன் பெற்றவர்களுக்கு சிறிய அளவிலான வரிச்சலுகை அறிவிப்பு இடம்பெறலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது வங்கிக் கடன் மூலம் வாங்கிய வீட்டிலேயே வசிப்பவர்களுக்கான சலுகை வரம்பு உயர்த்தப்படலாம் எனத் தெரிகிறது.அதென்ன வரிச்சலுகை வரம்பு? பொதுவாக வங்கி வீட்டுக்கடன் வாங்கிய சொத்தை, வாடகைக்கு விட்டு வணிக ரீதியாக பயன்படுத்தாமல், அதில் தாங்களே குடியிருப்பவர்களுக்கும், வீட்டை காலியாவே வைத்திருப்பவர்களுக்கும் அந்தட சொத்தில் இருந்து வருவாய் கிடைக்காது என்பதால் அவர்களுக்கான வட்டியில் சில சலுகைகள் வழங்கப்படும்.
வருமான வரி விதிகளின் படி, வீட்டுக் கடன் அசல் செலுத்துதல் பிரிவு 80C-ன் கீழ் ஒரு நிதியாண்டில் வரியை கழிக்க அனுமதிக அளிக்கப்படுகிறது. அந்த சலுகைக்கான உச்ச வரம் தற்போது ஆண்டுக்கு இரண்டு லட்சம் ரூபாயக இருக்கிறது. அந்த உச்ச வரம்பை 3.5 முதல் நான்கு லட்சம் ரூபாயாக அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அப்படி இந்த சலுகை அறிவிக்கப்பட்டால் வீடடுக்கடன் பெற்றவர்கள் நிம்மதியடைவார்கள். இப்படி பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது 2023- பட்ஜெட்
செய்தியாளர் : ரொசாரியோ ராய்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Business, Income tax, Union Budget 2023