முகப்பு /செய்தி /வணிகம் / ரயில் டிக்கெட் முன்பதிவை ரத்து செய்தால் ஜி.எஸ்.டி வரி..

ரயில் டிக்கெட் முன்பதிவை ரத்து செய்தால் ஜி.எஸ்.டி வரி..

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

ரயில் டிக்கெட்டுகளை ரத்து செய்தால், அதற்கான கட்டணத்துடன் கூடுதலாக 5 சதவீதம் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai [Madras], India

உறுதி செய்யப்பட்ட ரெயில்  முதல் வகுப்பு ரயில் டிக்கெட் முன்பதிவை ரத்து செய்தாலும் இனி ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நிதி அமைச்சகத்தின் வரி ஆய்வு பிரிவு  வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  “முதல் வகுப்பு அல்லது ஏசி வகுப்பு ரயில் டிக்கெட்டுகளை ரத்து செய்தால், அதற்கான கட்டணத்துடன் கூடுதலாக 5 சதவீதம் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் டிக்கெட் முன்பதிவு என்பது ஒரு ஒப்பந்தமாகும்.  அதன்படி ஐஆர்சிடிசி அல்லது இந்திய ரெயில்வே வாடிக்கையாளருக்கு சேவை வழங்குவதாக உறுதி அளிக்கிறது.  முன்பதிவை ரத்து செய்யும் போது ஜிஎஸ்டி விதிக்கப்படும். ரத்து கட்டணம் என்பது செலுத்தப்படும் தொகை ஆதலால் அதற்கு ஜிஎஸ்டி உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: கொரோனவிற்கு பின் இந்தியாவில் அதிகம் கவனம் ஈர்த்த லைஃப் இன்ஷூரன்ஸ் பிளான்!

உதாரணமாக, ரயில் டிக்கெட்டை ரத்துசெய்ய ரூ.240  கட்டணம் வசூலித்தால், அதற்கு ரூ. 12 ஜிஎஸ்டியாக செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, விமானப் பயணம் மற்றும் தங்கும் விடுதிகளின் முன்பதிவை ரத்து செய்தாலும் 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: GST, Money, Train ticket