பல்வேறு துறைகளில் பொதுமக்களுக்கான டிஜிட்டல் தளங்களை உருவாக்குவதில் இந்தியா மற்ற நாடுகளை விட முன்னணியில் இருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பாக வரவேற்பும் விமர்சனங்களும் பல்வேறு தரப்பில் எழுந்துள்ளன. இந்நிலையில் பட்ஜெட் மற்றும் இந்திய பொருளாதாரம் தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நெட்வொர்க் 18 செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.
நெட்வொர்க் 18 நிறுவனத்தின் தலைமை செய்தி ஆசிரியர் ராகுல் போஸ் எழுப்பிய கேள்விகளுக்கு நிர்மலா சீதாராமன் அளித்த பதிலின் விபரம்-
முன்பை தற்போது டிஜிட்டல் தளங்களின் பயன்பாடுகள் அதிகரித்து விட்டன. வேறுபட்ட பயன்பாட்டிற்காக நாம் பல தளங்களை பயன்படுத்தி வருகிறோம். இந்த அனைத்து டிஜிட்டல் தளங்களும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்ளும் வகையில் இணைப்பு ஏற்படுத்தப்படும்.
இன்னும் அடுத்த 15-20 ஆண்டுகளில் டிஜிட்டல் தளங்கள் இன்னும் உலக அளவில் விரிவடையும். அப்போது, நீங்கள் பயன்படுத்தும் ஓர் டிஜிட்டல் தளத்தின் மூலம், இன்னும் சிறப்பாக உலகின் இன்னொரு மூலைலயில் இருக்கும் டிஜிட்டல் தளத்துடன் தொடர்பு கொள்ள முடியும்.
பொதுமக்களுக்கான டிஜிட்டல் தளங்களை வடிவமைப்பத்தில் இந்தியா தனித்துவம் கொண்டதாக இருக்கிறது. உலக அளவில் இந்த துறையில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இந்திய தொழில் நுட்பத்தை இந்த துறையில் பின்தள்ளும் அளவுக்கு யாரும் வளரவில்லை.
பொதுமக்களுக்கான டிஜிட்டல் பயன்பாட்டு துறையில் மற்ற நாடுகளை விட இந்தியா முன்னணியிலும், முன்னோடியாகவும் விளங்குகிறது.
கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டிருந்த சமயத்தில், ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்துவதில் பல சிக்கல்கள் இருந்தன. ஆனால் அந்த நேரத்தில் இந்தியா முழுவதும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு விரிவடைந்திருந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர் தனது பட்ஜெட் உரையின்போது வேளாண்மை, கல்வி, நிதி உள்ளிட்ட துறைகளில் டிஜிட்டல் தளங்களை இன்னும் சிறப்பாக உருவாக்குவதற்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கும் என்று கூறியிருந்தார். இது பணப் பரிவர்த்தனை, பயன்பாடு, புதியனவற்றை கண்டுபிடித்தல், வேலை வாய்ப்பு, தொழில் தொடங்குதல் உள்ளிட்டவற்றை அடங்கியதாக இருக்கும் என்றும் கூறியிருந்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.