வல்லுநர்கள் கணித்த அளவுக்கு இந்தியப் பொருளாதாரம் சுருங்காது -கே.வி.காம்நாத் நம்பிக்கை

வல்லுநர்கள் கணித்த அளவுக்கு இந்தியப் பொருளாதாரம் சுருங்காது -கே.வி.காம்நாத் நம்பிக்கை
கே.வி.காம்நாத்
  • Share this:
பெரும்பாலான பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ள அளவுக்கு இந்தியப் பொருளாதாரம் சுருங்காது. இதுவரையில் பலர் கணித்ததைவிட வேகமாகத் தான் பொருளாதாரம் மீண்டது என்று புதிய முன்னேற்ற வங்கியின்(New Development Bank) தலைவர் கே.வி.காம்நாத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தில் 4.5 சதவீதம் அளவுக்கு சுருங்கும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. பெரும்பாலான பொருளாதார கணிப்பு நிறுவனங்கள் இந்தியப் பொருளாதாரம் மிகப்பெரிய பின்னடைவைச் சந்திக்கும் என்று கணித்துள்ளனர். இந்தநிலையில், பிரிக்ஸ் நாடுகள் சார்பில் தொடங்கப்பட்ட புதிய முன்னேற்ற வங்கியின்(New Development Bank) தலைவரும், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியை வழிநடத்தியவருமான கே.வி.காம்நாத், நியூஸ்18 குழும ஆசிரியர் ராகுல்ஜோஷிக்கு சிறப்பு நேர்காணல் அளித்துள்ளார்.

அதில் பேசிய அவர், ‘இதுவரையில் பல வல்லுநர்கள் கணித்ததைவிட இந்தியப் பொருளாதாரம் வேகமாக மீண்டுள்ளது. இந்தியப் பொருளாதாரம் ஆழமற்ற U வடிவ மீட்சியைக் காணக்கூடும். பெரும்பாலானவர்கள் அச்சப்படக் கூடிய அளவுக்கு இந்தியப் பொருளாதார மீட்சி கடுமையானதாக இருக்காது. ஒவ்வொரு நிறுவனத்தின் தலைவரும் அவர்களுடைய உற்பத்தி நடவடிக்கைகள் 80-90 சதவீதப் பயன்பாட்டுக்கு திரும்ப வருவது குறித்து பேசுகின்றனர். சப்ளை செயின் மற்றும் லாஜிஸ்ட்டிக் துறை வேகமாக திரும்ப மீண்டு வருகின்றன. உதாரணமாக, இரண்டு சக்கர வாகனங்கள் இதற்கு முன் அவை இருந்த அளவில் 70-80 சதவீத அளவுக்கு மீண்டுள்ளன. டிராக்டர்கள் முன்பு இருந்தஅளவில் 80-90 சதவீத அளவுக்கு வந்துள்ளன.


முதலில் நான் விவசாயத்துறையைப் பார்க்கிறேன். ஏனென்றால், அதுதான் இந்தியாவின் அடிப்படை. கடந்த வருடங்களில் அதனுடைய ஜி.டி.பியின் அளவு சரிவைச் சந்தித்தாலும் இப்போதும் அதிகமான முதலாளிகளைக் கொண்டுள்ள துறை. விவசாயத்துறை விரைவில் மீண்டு எழும் என்று நான் கணித்துள்ளேன். ஏனென்றால், கொரோனாவால் கிராமப் புறப் பகுதிகள் குறைந்த அளவே பாதிப்பைச் சந்தித்துள்ளன மற்றும் சந்தையுடன் இருக்கும் தொடர்பு வியக்கத்தக்க வகையில் உள்ளது. தற்போது, வீட்டில் குடும்பத் தலைவியாக இருப்பவர் நேரடியாக நுகர்வோராக இருக்கிறார்.

அவருக்கு, கூகுள் பக்கங்களைப் எப்படி பயன்படுத்தவேண்டும் என்று தெரிகிறது. ஆன்லைன் பரிவர்த்தனை செய்கிறார். ஆன்லைனில் பொருள் வாங்குகிறார். கடந்த 4 வருடங்களில் இதற்கான வாய்ப்புகளை உருவாக்கியதற்கு நன்றி. நெருக்கடியான கடந்த நான்கு மாதங்களில் இணைய வர்த்தகம் நம்முடைய பொருளாதாரத்துக்கு முதுகெலும்பாக இருந்தது. நம்மால் கிராமப் புற எல்லைகளில் வேலைவாய்ப்பை உருவாக்க முடிந்தால், கட்டாயம் நகர்புறங்களில் வேலைவாய்ப்புகள் உருவாகும். இந்தியா மிகப் பெரிய சந்தையைக் கொண்ட நாடு.

நாம், 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறோம். இந்தியப் பொருளாதாரம் 5 டிரில்லியன் அமெரிக்க டாலரை எட்டும் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். அதனால் உள்நாட்டு சந்தை மிகப் பெரியதாக வளரும். அதன் அர்த்தம், உள்நாட்டு நிறுவனங்கள் செயல்படுவதற்கு மிகப்பெரிய இடம் உருவாகும். தற்போது எப்படி உள்நாட்டு உற்பத்தியையும், உள்நாட்டு வர்த்தகத்தையும் சர்வதேச சந்தைகளுடன் இணைத்து இணக்கமாக பணியாற்றப் போகிறார்கள் என்பது, கவனமாக கையாளப்பட வேண்டிய ஒன்று’ என்று தெரிவித்தார்.
First published: July 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading