முகப்பு /செய்தி /வணிகம் / EPFO : உங்கள் பிஎஃப் கணக்கில் புதிய பேங்க் அக்கவுண்ட்டை சேர்க்க வேண்டுமா? இதை செய்யுங்கள்!

EPFO : உங்கள் பிஎஃப் கணக்கில் புதிய பேங்க் அக்கவுண்ட்டை சேர்க்க வேண்டுமா? இதை செய்யுங்கள்!

பிஎஃப்

பிஎஃப்

EPFO update : PF கணக்கில் நாமினியை சேர்க்க வேண்டும். அப்படி செய்யவில்லை பிஎஃப் கணக்கில் இருந்து பெறப்படும் பென்ஷன் மற்றும் இன்சூரன்ஸ் தொகை எதுவுமே கிடைக்காது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

உங்கள் சம்பள கணக்கில் பிஎஃப் இருந்தால் கண்டிப்பாக இந்த தகவல் உங்களுக்கு பயன்படும். அதாவது பிஃப் கணக்குடன் புதிய வங்கி கணக்கை இணைக்க நினைத்திருப்பவர்கள் இந்த பதிவை படித்து விட்டு ஈஸியாக ஆன்லைனில் இதை செய்து முடிக்கலாம்.

பிஎஃப் என்பது ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஊழியர்களின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும் இது அவர்களுடைய வைப்பு நிதி கணக்கில் மாதமாதம் செலுத்தப்படும். இந்த தொகை ஊழியர் பணி ஓய்வு பெற்ற பிறகு மொத்தமான தொகையாகவும் அல்லது மாதாந்திர பென்ஷன் போலவோ வழங்கப்படும். இந்த எஃப் கணக்கில் சந்தேகங்கள் , சேவைகளை எளிமையாக பெற்ற அல்லது தெரிந்து கொள்ள நீங்கள் உமாங் ஆப்பை டவுன்லோட் செய்தாலே போதும். இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே பிஎஃப் சார்ந்த அனைத்து தகவல்களையும் மொபைலில் பெறலாம். இந்த பிஎஃப் கணக்கில் அவ்வப்போது மாறங்கள் அறிவிக்கப்படும்

இதையும் படிங்க.. இனி வட்டி கொஞ்சம் எக்ஸ்ட்ராவா கிடைக்கும்… சூப்பர் நியூஸ் சொன்ன பேங்க் ஆஃப் பரோடா வங்கி!

அந்த வகையில் பிஎஃப்பில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட அப்டேட் அனைவருக்கும் ஞாபகத்தில் இருக்கும். அதாவது பிஎஃப் கணக்கின் நன்மைகளைத் தொடர்ந்து பெற வேண்டுமானால், ஊழியர்கள் தங்களுடைய PF கணக்கில் நாமினியை சேர்க்க வேண்டும். அப்படி செய்யவில்லை பிஎஃப் கணக்கில் இருந்து பெறப்படும் பென்ஷன் மற்றும் இன்சூரன்ஸ் தொகை எதுவுமே கிடைக்காது. இதுவரை இதை செய்யாதவர்கள் உடனே செய்து முடிப்பது நல்லது. இப்படி பிஎஃப் குறித்த அப்டேட்டுகள் அவ்வப்போது வருவது சகஜமான ஒன்று தான். இருப்பினும் இந்த பதிவில் நாம் பார்க்க போவது, பிஎஃப் கணக்கில் புதிய வங்கி கணக்கை சேர்க்க வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தான்.

அதாவது, பிஎஃப் கணக்குடன் ஊழியர்களின் ஏதாவது ஒரு வங்கிக் கணக்கை இணைத்து இருப்பார்கள். அப்படி இணைத்து இருந்தால் அவர்களால் பிஎஃப் பணத்தை கிளைம் செய்ய முடியும், நில நேரங்களில் அவர்கள் இணைத்து வைத்துள்ள வங்கி கணக்கி சில சமயங்களில் முடங்கிவிடும் சூழ்நிலைகளும் ஏற்படுவது உண்டு. ஒருவேளை அப்படி நடந்தால் கவலை வேண்டாம் உடனடியாக புதிஅ வங்கி கணக்கை பிஎஃப் கணக்கில் இணைத்து விடலாம். அதற்கான வசதியும்ம் ஆன்லைனில் வந்து விட்டது.

அதற்கு செய்ய வேண்டியது இது மட்டுமே

இதையும் படிங்க.. பகலில் சீரியல் இரவில் இப்படியொரு வேலை… பாரதி கண்ணம்மா வினுஷா

1. முதலில் https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ இந்த தளத்திற்கு சென்று யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டை பதிவு செய்து லாகின் செய்ய வேண்டும்.

2. பின்பு 'மேனேஜ்' டேபை கிளிக் செய்ய வேண்டும்.

3. இதில் கீழ்தோன்றும் மெனுவிலிருந்து 'KYC'-ஐத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

4. பின்பு உங்கள் வங்கியைத் தேர்ந்தெடுத்து அதில் வங்கிக் கணக்கு எண், பெயர் மற்றும் ஐ.எஃப்.எஸ்.சி குறியீட்டை உள்ளிட்டு 'சேவ்' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

5. நீங்கள் பதிவு செய்த விவரங்கள் அங்கீகரிக்கப்பட்டதும், அங்கீகரிக்கப்பட்ட KYC பிரிவில் (அப்ரூவ்ட் KYC செக்ஷன்) தோன்றும். அவ்வளவு தான் உங்களுடைய பிஎஃப் கணக்கில் புதிய வங்கி கணக்கு விவரங்கள் அப்டெட் ஆகிவிடும்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Epfo, PF, PF AMOUNT