பி.எஃப் அக்கவுண்டின் UAN எண்ணை கண்டுபிடிப்பது மற்றும் புதிதாக உருவாக்குவது எப்படி?

ஊழியர் வருங்கால வைப்பு நிதி

உங்களுக்கு ஏற்கனவே UAN இருந்து அதனை நீங்கள் மறந்திருந்தால், அதனை எப்படி கண்டுபிடிப்பது என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

  • News18
  • Last Updated :
  • Share this:
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு (EPF) பங்களிப்பு செய்யும் பணியாளர்களுக்கு UAN பற்றி கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் UAN (Universal Account Number ) -ஐ உருவாக்கவில்லை என்றால், புதிதாக உருவாக்குவது எப்படி? என்றும், ஏற்கனவே இருக்கும் UAN -ஐ மறந்துவிட்டாலும், அதனை எப்படி மீண்டும் கண்பிடிப்பது என்பது பற்றியும் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

UAN - ஐ கண்டுபிடிப்பது எப்படி?

உங்களுக்கு ஏற்கனவே UAN இருந்து அதனை நீங்கள் மறந்திருந்தால், அதனை எப்படி கண்டுபிடிப்பது என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

1. முதலில் EPFO -வின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்துக்கு செல்ல வேண்டும். (epfindia.gov.in)

2. அந்த இணையதளத்துக்கு சென்றபிறகு Our Services என்ற ஆப்சனை தேர்ந்தெடுத்து For Employees என்ற ஆப்சனுக்குள் நுழைய வேண்டும்.

3. பின்னர் Member UAN/Online Service என்ற ஆப்சனுக்குள் சென்று Know Your UAN என்பதை தேர்தெடுக்க வேண்டும்.

4. தற்போது புதிய பக்கத்துக்கு நீங்கள் அழைத்துச் செல்லப்படுவீர்கள். அந்த பக்கத்தில் உங்களுடைய அடையாள அட்டை தகவல்களை பதிவிட வேண்டும். உதாரணமாக, ஆதார் அட்டை அல்லது பான்கார்டு எண் ஆகியவற்றில் தகவல்களை பதிவு செய்யுங்கள்

5. கீழே கொடுக்கப்பட்டுள்ள காலி பகுதிகளில் உங்களின் தனிநபர் தகவல்களை பதிவு செய்ய வேண்டும். உங்களின் பெயர், பிறந்த தேதி, தொலைபேசி எண் ஆகியவற்றை பதிவிடவும்.

6. தகவல்களை உறுதி செய்வதற்காக கொடுக்கப்பட்டுள்ள Captcha பதிவு செய்தவுடன் ‘Get Authorisation Pin’ பகுதியை கிளிக் செய்ய வேண்டும்.

7. உங்களுடைய அதிகாரப்பூர்வ மொபைல் எண்ணுக்கு UAN அனுப்பி வைக்கப்படும்.

8. இதுவரை நிறுவனம் உங்களுக்கு UAN - ஐ கொடுக்கவில்லை என்றாலும், நீங்களாகவே அதனை உருவாக்கிக்கொள்ளவும் முடியும். எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். மிகவும் ஈஸியான வழிமுறை

Also read... மே மாதத்தில் வங்கி விடுமுறை நாட்கள் - முழு விவரம்!

UAN -ஐ உருவாக்குவது எப்படி?

1) UAN போர்டலுக்கு நீங்கள் செல்ல வேண்டும். https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/

2) அங்கே ‘Know your UAN Status’ என்பதை கிளிக் செய்ய வேண்டும். அப்போது ‘Know Your UAN’ பக்கம் என்ற புதிய பக்கம் உருவாகும்.

3) அந்தப் பக்கத்தில் உங்களின் மாநிலம் மற்றும் வருங்கால வைப்புநிதி அலுவலகம் (EPFO office) ஆகியவற்றை தேர்ந்தெடுக்க வேண்டும்.

4. பின்னர், உங்களின் பி.எஃப் எண் ஆகியவற்றுடன் தனிநபர் தகவல்களை பதிவு செய்ய வேண்டும். பெயர், பிறந்த தேதி, தொலைபேசி எண், ஆதார் எண் ஆகியவற்றை பதிவு செய்து Get Authorization Pin’ -ஐ கிளிக் செய்ய வேண்டும்.

5. உங்கள் மொபைலுக்கு தற்போது ஓ.டி.பி (OTP) பாஸ்வேர்டு வரும். அதனை பதிவு செய்தவுடன் Validate OTP -ஐ கிளிக் செய்யுங்கள்.

6. கடைசியாக உங்களுடைய அதிகாரப்பூர்வ மொபைல் எண்ணுக்கு UAN அனுப்பி வைக்கப்படும்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: