2018-2019-ஆண்டில் 1.37 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன: ஈபிஎப்ஓ

2019 மார்ச் மாதம் 8.27 லட்சம் புதிய ஊழியர்கள் வைப்பு நிதி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது.

2018-2019-ஆண்டில் 1.37 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன: ஈபிஎப்ஓ
மேலும் தீராத நோய், குழந்தைகளின் படிப்பு அல்லது திருமணச் செலவுகள் என்றால் முழுப் பிஎப் பணத்தையும் திரும்பப் பெற முடியும். இந்த விதிமுறை மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும்.
  • News18
  • Last Updated: May 25, 2019, 6:06 PM IST
  • Share this:
மத்திய புள்ளியியல் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட தரவுகளில் 2018-2019 நிதியாண்டில் 1.37 கோடி அமைப்பு சார்ந்த வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

2019 மார்ச் மாதம் 8.27 லட்சம் புதிய ஊழியர்கள் வைப்பு நிதி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது. சென்ற நிதியாண்டில் அதிகபட்சமாக 14.21 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது என்று வருங்கால வைப்பு நிதி ஆணையம் வெளியிட்ட தரவு மூலம் தெரியவந்துள்ளது.

அமைப்பு சார்ந்த வேலைவாய்ப்புகள் அதிகளவில் உருவாக்கப்பட்டு இருந்தாலும் அமைப்புசாரா வேலைவாய்ப்புகள் மிகப் பெரிய அளவில் குறைந்துள்ளது என்றும் தரவுகள் கூறுகின்றன.


வருங்கால வைப்பு நிதி ஆணையம் 2018-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு மாதமும் சம்பளம் செலுத்தப்படும் பிஎஃப் தொகையினை அடிப்படையாக வைத்துக்கொண்டு இந்த வேலை வாய்ப்பு தரவுகளை வெளியிட்டு வருகிறது.

மறுபக்கம் வருங்கால வைப்பு நிதி ஆணையம் வெளியிடும் வேலைவாய்ப்பு தரவுகளில் உண்மைத்தன்மை குறைவாக உள்ளது. அதில் எவ்வளவு வேலைவாய்ப்புகள் புதியவை என்ற தெளிவில்லை என்றும் வல்லுநர்கள் கூறிவருகின்றனர்.

ஆனால் இந்த தரவுகள் வேலைவாய்ப்புகள் அதிகளவில் உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறிவது மத்திய அரசுக்குச் சாதகமாகவும் உள்ளது.மேலும் பார்க்க:
First published: May 25, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading