முகப்பு /செய்தி /வணிகம் / EPFO : உங்கள் குடும்பத்தினருக்கு ரூ.7 லட்சம் கிடைக்க இதை செய்தாலே போதும்!

EPFO : உங்கள் குடும்பத்தினருக்கு ரூ.7 லட்சம் கிடைக்க இதை செய்தாலே போதும்!

பிஎஃப்

பிஎஃப்

EPFO update : வாரிசுதாரர்களின் விவரங்களை ஈபிஎஃப் வாடிக்கையாளர்கள் அப்டேட் செய்தால் மட்டுமே அவர்களுக்கான சமூகப் பாதுகாப்பு கிடைக்கும்.

ஆன்லைன் பிஎஃப் மற்றும் ஓய்வூதிய பேமெண்ட்களுக்கு ஈபிஎஃப் பணியாளர்கள் இ-நாமினேஷன் செய்ய வேண்டும். பணியாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதி அமைப்பு வழங்கியுள்ள யுஏஎன் எண் மூலமாக குடும்ப உறுப்பினர்கள் அல்லது வாரிசுதாரர்களின் விவரங்களை ஈபிஎஃப் வாடிக்கையாளர்கள் அப்டேட் செய்தால் மட்டுமே அவர்களுக்கான சமூகப் பாதுகாப்பு கிடைக்கும்.

பணியாளர்களின் முதலீட்டுடன் இணைக்கப்பட்ட இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் குடும்ப உறுப்பினர்களுக்கு ரூ.7 லட்சம் வரையில் காப்பீடு கிடைப்பதற்கும் இது உதவிகரமாக இருக்கும். ஒவ்வொரு நபரும் தங்கள் தேவைக்கு ஏற்ப வாரிசுதாரரை நியமனம் செய்து கொள்ளலாம். எனினும், திருமணத்திற்குப் பிறகு அது கட்டாயம் ஆகும்.

செம்ம ஹாப்பி நியூஸ்.. பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு இனி அந்த வங்கியில் அதிக வட்டி!

குடும்ப உறுப்பினர்கள் அல்லது வாரிசுதாரரை இணைக்க சுய-சான்று ஒன்றே போதுமானது. வேலை வழங்கும் நிறுவனம் சார்பில், அதற்கு வேற ஆவணம் அல்லது ஒப்புதல் எதுவும் தேவை இல்லை. ஈபிஎஃப் வாடிக்கையாளர்கள் பணி செய்யும் காலத்தில் இறக்க நேர்ந்தால் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் அல்லது வாரிசுதாரர்களுக்கு இந்தத் தொகை கிடைக்கும். வருமானம் ஈட்டும் நபரின் திடீர் மறைவுக்குப் பிறகு, இந்தத் தொகையானது குடும்பத்தினருக்கு பேருதவியாக அமையும்.

ஆன்லைனில் ஈபிஎஃப் நாமினேஷன் செய்வது எப்படி?

முதலில் ஈபிஎஃப்ஓ இணையதளத்திற்கு https://www.epfindia.gov.in/site_en/index.php செல்ல வேண்டும்.

இதில் சர்வீசஸ் என்ற செக்சனுக்கு சென்று ‘ஃபார் எம்பிளாயர்ஸ்’ என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.

இப்போது மற்றொரு பக்கத்திற்கு நீங்கள் ரீ-டாரக்ட் செய்யப்படுவீர்கள்.

இப்போது மெம்பர் யுஏஎன் / ஆன்லைன் சர்வீஸ் என்பதன் மீது கிளிக் செய்யவும்.

இப்போது யுஏஎன் நம்பர் மற்றும் பாஸ்வர்ட் உதவியுடன் லாக் இன் செய்யவும்.

குறைந்த வட்டியில் லோன் வாங்க கிரெடிட் ஸ்கோர் எவ்வளவு இருக்க வேண்டும் தெரியுமா?

இ- நாமினேஷன் (E-nomination) என்ற ஆப்சன் கீழ் உள்ள மேனேஜ் டேப் என்பதை தேர்வு செய்யவும்.

புரொவைட் டீடெய்ல்ஸ் என்ற டேப் இப்போது திறக்கப்பட்டிருக்கும். இதில் சேவ் கொடுக்கவும்.

குடும்ப விவரங்களை அப்டேட் செய்ய எஸ் கொடுக்கவும்.

ஆட் ஃபேமிலி டீடெய்ல்ஸ் (Add family details) என்பதை கிளிக் செய்து ஒன்றுக்கும் மேற்பட்ட வாரிசுதாரரை நீங்கள் நியமனம் செய்து கொள்ளலாம்.

நாமினேஷன் டீடெய்ல்ஸ் என்பதை கிளிக் செய்து ஒவ்வொரு வாரிசுதாரருக்குமான பங்களிப்பு சதவீதத்தை குறிப்பிடவும். பிறகு சேவ் இபிஎஃப் நாமினேஷன் என்பதை கிளிக் செய்யவும்.

ஓடிபி உருவாக்குவதற்காக இ-சைன் என்பதன் மீது கிளிக் செய்யவும். ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி எண் சப்மிட் செய்யவும்.

இப்போது இபிஎஃப்ஓ உடன் இ-நாமினேஷன் ரெஜிஸ்டர் செய்யப்பட்டிருக்கும். இதைச் செய்த பிறகு ஆவணங்களை நேரில் சமர்பிக்க வேண்டிய தேவை இருக்காது. ஆன்லைன் மூலமாக நீங்கள் கிளைம் பெறவும் முடியும்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Epfo, PF, PF AMOUNT