முகப்பு /செய்தி /வணிகம் / EFPO : முக்கிய அப்டேட்... மாச சம்பளக்காரர்கள் கட்டாயம் இதை தெரிஞ்சுக்கணும்!

EFPO : முக்கிய அப்டேட்... மாச சம்பளக்காரர்கள் கட்டாயம் இதை தெரிஞ்சுக்கணும்!

பிஎஃப் அப்டேட்

பிஎஃப் அப்டேட்

EPFO Provident Fund : , ஆண்டிற்கு 2.5 லட்சத்திற்கு மேல் வைப்பவர்களுக்கு, கூடுதலாக மற்றொரு PF கணக்கு திறக்கப்படும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்கள் மற்றும் அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு சம்பளத்தில் பிஎஃப் பிடிப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஊழியர்களின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும் இது அவர்களுடைய வைப்பு நிதி கணக்கில் மாதமாதம் செலுத்தப்படும். இந்த தொகை ஊழியர் பணி ஓய்வு பெற்ற பிறகு மொத்தமான தொகையாகவும் அல்லது மாதாந்திர பென்ஷன் போலவோ வழங்கப்படும். தற்போது ஏகப்பட்ட சலுகைகள்  கிடைக்கும் பிஎஃப் கணக்கின் நன்மைகளைத் தொடர்ந்து பெற வேண்டுமானால், ஊழியர்கள் தங்களுடைய PF கணக்கில் நாமினியை சேர்க்க வேண்டும்.

இதை அனைவரும் செய்திருக்க வேண்டும் என அரசு வலியுறுத்தி வருகிறது. இதை செய்தால் இதன் மூலம் கிடைக்கும் அனைத்து பயன்களும் உங்களை தவிர்த்து அடுத்தப்படியாக உங்கள் நாமினிக்கு போய் சேரும். பிஎஃப் பணம் மிகவும் உபயோகமானது.அதை அடிக்கடி எடுத்து வீண் செய்யாதீர்கள். அதே நேரம் உங்களுக்கான பிஎஃப் பணத்தை நீங்கள் பணிபுரியும் நிறுவனம் சரியாக உங்கள் கணக்கில் போடுகிறதா? என்பதை நீங்கள் கட்டாயம் தெரிந்துக் கொள்ள வேண்டும். அதே போல் பிஎஃபில் அரசு தரப்பில் வெளியிடப்படும் அப்டேட்டுகள் குறித்து கட்டாயம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க.. Savings Account : போஸ்ட் ஆபீஸ் பேங்கில் தொடங்க திட்டமா..! இந்த செய்தி உங்களுக்கு தான்

2021 பட்ஜெட் அறிக்கையையின் போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு தகவலை பகிர்ந்து இருந்தார். அனைவருக்கும் ஞாபக் இருக்கிறதா? ஒரு நிதியாண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட PF பங்களிப்புக்கு கிடைக்கும் வட்டிக்கு வரி விதிக்கப்படும் என்றார். இதையடுத்து சென்ட்ரல் நேரடி வரி வாரியம் இதற்கான விதிமுறைகளை வரிசைப்படுத்தியது. இதன்படி, PF கணக்கு இரண்டு கணக்குகளாக பிரிக்கப்படும். 2021-22ஆம் ஆண்டுக்கு தனி கணக்கு மற்றும் அடுத்தடுத்த ஆண்டுகளுக்கு தனி கணக்கும் பராமரிக்கப்படும் என இந்த விதிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இப்படி 2 கணக்குகளாக பிரிப்பதன்  மூலம் வரியை கணக்கிடுவது எளிதாகும் என்பதால் இந்த விதிமுறை செயல்பாட்டுக்கு வரவுள்ளது.

இதையும் படிங்க.. FIXED DEPOSIT: வட்டி அதிகமாக தர போட்டி போடும் எஸ்பிஐ vs போஸ்ட் ஆபீஸ்.. உங்கள் தேர்வு எது?

வரும் ஏப்ரல் 1 2022 ஆம் தேதி முதல் இந்த விதிமுறை அமலுக்கு வருகின்றன. இதன்படி, நிதியாண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் PF பங்களிப்பு உள்ளவர்களுக்கு 2 கணக்குகள் பிரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2.5 லட்சத்திற்கு குறைவாகவே செலுத்துபவர்களுக்கு ஒரு கணக்கு மட்டுமே . அந்த கணக்கின் பங்களிப்பு, வட்டி, திரும்பப் பெறுதல் ஆகியவை வரி விலக்கிற்கு உட்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல், ஆண்டிற்கு 2.5 லட்சத்திற்கு மேல் வைப்பவர்களுக்கு, கூடுதலாக மற்றொரு PF கணக்கு திறக்கப்படும். இது வரிக்குட்பட்ட கணக்காக இருக்கும். இதில் கிடைக்கும் வட்டியானது வரிக்கு உட்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Epfo, PF AMOUNT, Savings