வருங்கால வைப்பு நிதியில் (EPFO) பெயர் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை ஆதாரில் இருக்குமாறு மாற்றம் செய்ய வேண்டும் என விரும்பினால், நீங்களே ஆன்லைனில் எளிதாக செய்து கொள்ளலாம்.
அதற்கான எளிமையான வழிமுறைகளை EPFO அண்மையில் வெளியிட்டுள்ளது. நீங்களே இந்த மாற்றங்களை செய்ய வேண்டும் என விரும்பினால், அதற்கு என்ன ஆவணங்கள் வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
பெயர் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை EPFO அக்கவுண்டில் மாற்றுவதற்கு வேண்டிய ஆவணங்கள் :
1. பிறப்புச் சான்றிதழ்
2. ஏதேனும் பள்ளி / கல்வி தொடர்பான சான்றிதழ்.
3. மத்திய / மாநில அரசு அமைப்பின் சேவை பதிவுகளின் அடிப்படையில் சான்றிதழ்.
4. பாஸ்போர்ட்.
5. அரசாங்கத் துறையால் வழங்கப்பட்ட வேறு நம்பகமான ஆவணம்.
6. மேலே குறிப்பிட்ட பிறந்த தேதிக்கான ஆவணங்கள் இல்லாதவர்கள், நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து பெறப்பட்ட மருத்துவச் சான்றிதழ்
இந்த ஆவணங்களை நீங்கள் வைத்திருந்தீர்கள் என்றால், ஆன்லைன் மூலம் பெயர் மற்றும் பிறந்த தேதியை மாற்றுவதற்கான வழிமுறைகள் என்ன என்பதை பார்க்கலாம்.
1. வருங்கால வைப்பு நிதியின் www.epfo என்ற ஆன்லைன் போர்ட்டலுக்கு செல்ல வேண்டும்
2. உங்களிடம் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள UAN மற்றும் CAPTCHA -ஐ கேட்கப்பட்ட இடத்தில் பதிவிடவும்
3. பின்னர் ENTER பட்டனை கிளிக் செய்யவும்.
4. இப்போது Manage என்ற ஆப்சனை கிளிக் செய்து, Modify Basic Details என்ற ஆப்சனுக்குள் செல்லுங்கள்.
5. Aadhaar ஆப்சனை தேர்ந்தெடுத்து, அதில் பெயர் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை ஆதாரில் இருப்பதுபோல் பதிவிடுங்கள்.
6. கொடுத்துள்ள தகவல் சரியாக இருக்கிறதா என்பதை சரிபார்த்து Save/Submit என்ற ஆப்சனை கிளிக் செய்து பின்னர் Yes -ஐ கிளிக் செய்யுங்கள்.
7. நீங்கள் செய்துள்ள மாற்றம் குறித்து அலுவலகத்தில் தெரியப்படுத்த வேண்டும். அவர்கள் அதற்கு ஒகே கொடுத்தால், நீங்கள் செய்த மாற்றங்கள் வருங்கால வைப்பு நிதி அக்கவுண்டில் மாறிவிடும்.
1 வருட நிலையான வைப்புநிதிகளுக்கு 6.50% வரை வட்டி வழங்கும் தனியார் வங்கிகளின் பட்டியல்!
வருங்கால வைப்பு நிதியத்தை பொறுத்தவரை நாளுக்கு நாள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, அதன் சேவைகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. ஊழியர்களின் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றும் வகையிலும், வீட்டில் இருந்தபடியே அனைத்து மாற்றங்களையும் செய்து கொள்ளும் வகையிலும் புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
இந்த மாதிரியான டிஜிட்டல் மேம்பாடு, அவசரகால தேவையில் இருப்பவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கிறது.
கொரோனா காலத்தில் மருத்துவ தேவை உள்ளிட்ட பிற செலவுகளுக்கு, வருங்கால வைப்பு நிதியே பெரும்பாலனவர்களுக்கு கைகொடுத்தது. அப்போது, பெயர் மாற்றம் மற்றும் ஆதார் எண் சேர்ப்பு உள்ளிட்ட விஷயங்களை வீட்டில் இருந்தபடியே ஊழியர்கள் செய்து கொள்ள முடிந்தது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.