ஊழியர் வைப்பு நிதி ஆணையம் கடந்த சில மாதங்களாக வைப்பு நிதி கணக்கில் பல்வேறு மாற்றங்களையும், அப்டேட்களையும் கொண்டு வந்துள்ளது. இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட மாற்றங்கள் எல்லாம் அடுத்த ஆண்டு முதல் PF கணக்கு வைத்திருக்கும் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று அறிக்கை வெளியாகி உள்ளது.
சமீபத்தில் பிஎஃப் ஆணையம் அறிவித்த புதிய மாற்றங்கள் மற்றும் விதிமுறைகள் இங்கே.
PF கணக்கை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் :
நவம்பர் 30, 2021 முதல் பிஎஃப் கணக்கில் உங்கள் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உங்கள் பிஎஃப் கணக்கில் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால் உங்களுக்கு பிஎஃப் கணக்கில் இருந்து கிடைக்கும் நன்மைகள் பெற முடியாது. அது மட்டுமின்றி உங்கள் நிறுவனம் வழங்கும் PF பங்களிப்பும் உங்கள் கணக்கிற்குக் கிடைக்காது.
மேலும் நீங்கள் PF கணக்கிலிருந்து பணம் எடுக்க முயற்சி செய்திருந்தால் அதுவும் கிடைப்பதற்கு தாமதமாகும். சில நேரங்களில் கணக்கில் இருந்து பணம் எடுக்க முடியா சூழ்நிலையும் ஏற்படும். எனவே உங்கள் PF கணக்கை ஆதார் எண்ணை இணைப்பது அவசியம்.
நாமினியை நியமிக்க வேண்டும் :
ஒரு ஊழியராக, நீங்கள் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு உங்கள் PF சேமிப்பு மொத்தமான தொகையாகவும் அல்லது மாதாந்திர பென்ஷன் போலவோ வழங்கப்படும். பிஎஃப் கணக்கின் நன்மைகளைத் தொடர்ந்து பெற, உங்கள் PF கணக்கில் நாமினியை சேமிக்க வேண்டும். டிசம்பர் 31, 2021, அதாவது இந்த ஆண்டின் இறுதிக்குள் நாமினி நியமிக்கப்பட வில்லை என்றால் பிஎஃப் கணக்கில் இருந்து பெறப்படும் பென்ஷன் மற்றும் இன்சூரன்ஸ் தொகை கிடைக்காது.
PF கணக்குடன் இணைக்கப்பட்ட இலவச காப்பீடு :
EDLI என்ற ஊழியர்கள் டெபாசிட் இணைப்பு காப்பீட்டுத் திட்டத்தில் இருக்கும் பயன்களை பற்றி, சமீபத்தில் EPFO நிறுவனம் தனது ட்விட்டர் கணக்கில் சில நாட்களுக்கு முன் பகிர்ந்தது. PF கணக்கு வைத்திருப்பவர்கள் பணி ஓய்வு பெறுவதற்கு முன்பே இறந்து போனால், அவருடைய நாமினி அல்லது வாரிசுக்கு ஏழு லட்ச ரூபாய் இழப்புத் தொகையாக வழங்கப்படும். இந்த காப்பீடு திட்டம் இலவசமாக அனைத்து PF கணக்குகளுக்கும் கிடைக்கிறது. நீங்கள் பிரீமியம் தொகை எதுவும் செலுத்த வேண்டாம்.
இரண்டு PF கணக்குகள் :
சென்ட்ரல் போர்டு ஆஃப் டைரக்ட் டாக்சஸ் (CBDT) இந்த ஆண்டு இரண்டு பிஎஃப் கணக்குகளை பற்றிய ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஒரு ஊழியர் தனது பிஎஃப் கணக்குக்கு ஒதுக்கும் தொகை ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாய் அதிகம் ரூபாய்க்கும் அதிகமாக இருந்தால், அவர்கள் இரண்டு பிஎஃப் கணக்குகளை தனித் தனியாகப் பராமரிக்க வேண்டும் என்று CBDT தெரிவித்தது.
கிரெடிட் கார்டு வாங்க ஆசையா..? எஸ்பிஐ தரும் இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க!
சம்பளம் வாங்கும் எல்லாம் ஊழியர்களின் பாதுகாப்பான சேமிப்பாகவும், அவர்கள் வருமானத்தில் ஒரு அங்கமாகவும் EPF கணக்கு இருந்து வருகிறது. வைப்பு நிதி தொகையை பெறுவதற்கு EPF ஆணையம் அறிவிக்கும் அனைத்து வழி முறைகளையும் பின்பற்ற வேண்டியது அவசியமாகும்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.