தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஊழியர்களுக்கு வைப்புநிதி இணைப்பு இன்சூரன்ஸ் திட்டத்திற்கான (Employees' Deposit Linked Insurance (EDLI)) தொகை 7 லட்சம் ரூபாய் ஆகும். இந்த EDLI இன்சூரன்ஸ் திட்டம் ஈபிஎப் கணக்கு வைத்துள்ளவர்கள் அனைவருக்கும் உள்ளது. இதை அவர்களின் குடும்பத்தார் பெற்றுக் கொள்ள முடியும். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது என்ன? என்பது குறித்து தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
ஈபிஎஃப் திட்டத்தில் 60 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். அவர்களுடைய ரூ.15 கோடி நிதியை இந்த அமைப்பு நிர்வகித்து வருகிறது. சுமார் 1.8 லட்சம் கோடி ஆண்டுதோறும் வாடிக்கையாளர்கள் மூலமாக ஈபிஎஃப் திட்டத்தில்
முதலீடு செய்யப்படுகிறது. அதே போல் பணியாளர்கள் ஓய்வுபெறும் சமயத்தில் அவர்களுக்கு பெரிதும் கை கொடுப்பதும் வருங்கால வைப்பு நிதித் திட்டம் தான். இதில் ஊழியர்களின் நலனின் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளும் வகையில் அவர்களுக்காக கொண்டு வரப்பட்ட திட்டம் தான் ஊழியர்களின் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டம்.
இதையும் படிங்க.. அரசு ஊழியர்களுக்கு மட்டும் ரூ.8 லட்சம் வரை தர்றோம்.. அறிவிப்பு வெளியிட்ட பிரபல வங்கி!
பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை வழங்குகிறது. இந்த திட்டத்தின் மூலம், எவ்வித தொகையும் ஊழியர்கள் செலுத்தாமலே இலவசமாக ரூபாய் 7 லட்சம் வரை இன்சூரன்ஸ் தொகை பெறலாம். EPFO ஊழியர்கள் அனைவரும் இத்திட்டத்தில் சேர தகுதியுடையவர்கள் தான். இந்த திட்டம் எப்படி செயல்படும் என்றால் ஊழியர் பணியில் இருக்கும் போது உயிரிழந்தால், EPFO உறுப்பினரின் நியமனதாரர் அல்லது சட்டப்பூர்வ வாரிசுக்கு அதிகபட்சமாக ரூபாய் 7 லட்சம் வரை இன்சூரன்ஸ் தொகை வழங்கப்படும்.
இதையும் படிங்க.. பெண்களுக்கான சேமிப்பு… செல்வமகள் சேமிப்பு திட்டம் மிகச் சிறந்த தேர்வு!
உறுப்பினர் தனது மரணத்திற்கு 12 மாதங்களுக்கு முன்பு வரை தொடர்ச்சியாக பணியில் இருந்தால் குறைந்தபட்சம் 2.5 லட்சம் ரூபாய்க்கான சலுகை கிடைக்கப்பெறும். EDLI பிரீமியத்திற்கான தொகை நீங்கள் வேலை செய்யும்
நிறுவனம் உங்களுக்கு அளிக்கும் பிஎப் பங்களிப்பில் இருந்து எடுத்துக்கொள்ளப்படும். பிஎப் சந்தார்களின் சம்பளத்திலிருந்து இதற்காக எந்தக் கூடுதல் தோகையும் பிடித்தம் செய்யப்பட மட்டாது. உங்கள் குடும்பத்தாருக்கு இந்த இன்சூரன்ஸ் தொகை கிடைக்க நீங்கள் செய்ய வேண்டிய வேலை ஒன்று தான். பிஎஃப் கணக்கில் நாமினேஷன் பெயரை கட்டாயம் சேர்த்து இருக்க வேண்டும். இதுவரை சேர்க்கவில்லை என்பவர்கள் விரைவாக அதை செய்யவும்.
இந்த நாமினியை எப்படி சேர்ப்பது என்ற படிகளை முழுமையாக அறிய இந்த
லிங்கை கிளிக் செய்யவும்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.