Home /News /business /

EPFO : அவசர தேவைக்கு PF கணக்கில் ரூ.1 லட்சம் எடுக்கலாம் எப்படி தெரியுமா?

EPFO : அவசர தேவைக்கு PF கணக்கில் ரூ.1 லட்சம் எடுக்கலாம் எப்படி தெரியுமா?

பிஎஃப்

பிஎஃப்

pf account : பிஎஃப் கணக்கில் இருந்து அவசர தேவைக்கு ரூ.1 லட்சத்தை எடுக்கலாம். ஆனால் அதற்கு சில நிபந்தனைகள் உள்ளன.

    உங்கள் வருங்கால வைப்பு நிதியில் இருந்து பணத்தை முன்கூட்டியே எடுப்பது இனி ஒரு சிக்கலான செயலாக இருக்காது. EPFO-வின் புதிய விதியின்படி, முன்கூட்டிய மருத்துவ கோரிக்கையின் கீழ், வருங்கால வைப்பு நிதியிலிருந்து ரூ.1 லட்சத்தை சந்தாதாரர்கள் எடுக்கலாம். இதற்கு ஒருவர் எந்த ஆவணமும் சமர்ப்பிக்க தேவையில்லை.

    மருத்துவ அவசரநிலையின் போது, ​​EPFO ​​இன் கீழ் மில்லியன் கணக்கான கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இந்த புதிய விதி பயனுள்ளதாக இருக்கும். சமீபத்திய அறிக்கையின்படி, உயிருக்கு ஆபத்தான நோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர் தங்களது பிஎஃப் கணக்கில் இருந்து அவசர தேவைக்கு ரூ.1 லட்சத்தை எடுக்கலாம். ஆனால் அதற்கு சில நிபந்தனைகள் உள்ளன.

    PF இலிருந்து பணத்தை எடுப்பதற்கான நிபந்தனைகள் என்ன?

    * அந்த நபர் கண்டிப்பாக அரசு மருத்துவமனையில் அல்லது CGHS குழு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும்.

    * ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர், பணத்தை வித்ட்ரா செய்ய அனுமதிக்கும் முன் விசாரணை நடத்தப்படும்.

    * ஒரு நாளில் விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டால், அடுத்த நாளே பணம் மாற்றப்படும்.

    இதையும் படிங்க.. கொரோனா அச்சம் அடிக்கடி போஸ்ட் ஆபீஸ் போக முடியலையா? அதுக்கும் ஒரு வழி இருக்கு!

    * பணத்தை பணியாளரின் தனிப்பட்ட கணக்கு அல்லது மருத்துவமனையின் வங்கிக் கணக்கிற்கு மாற்றலாம்.

    PF கணக்கிலிருந்து ரூ. 1 லட்சத்தைஎடுப்பதற்கு செய்வதற்கான செயல்முறை:

    * www.epfindia.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்

    * அதில் 'ஆன்லைன் சேவைகள்' (Online Services) என்பதைக் கிளிக் செய்யவும்

    * 31, 19, 10C மற்றும் 10D படிவங்களை நிரப்பவும் என்ற விருப்பத்திற்கு செல்லவும்.

    * இப்போது, ​​சரிபார்க்க உங்கள் வங்கிக் கணக்கின் கடைசி நான்கு இலக்கங்களை உள்ளிடவும்

    * ஆன்லைன் உரிமைகோரலுக்குச் செல்லவும்’ (Proceed For Online Claim) என்பதைக் கிளிக் செய்யவும்

    * கீழ்தோன்றும் மெனுவிலிருந்து படிவம் 31ஐத் தேர்ந்தெடுக்கவும்

    * பணம் எடுப்பதற்கான காரணத்தை உள்ளிடவும்

    இதையும் படிங்க.. ரூ. 10,000 அபராதத்தில் இருந்து தப்பிக்க பான் கார்டு வைத்திருப்பவர்கள் இதை உடனே செய்யுங்கள்!

    * பின்னர் தேவையான தொகையை உள்ளிட்டு மருத்துவமனை பில் நகலை பதிவேற்றவும்

    * இறுதியாக உங்கள் முகவரி விவரங்களை டைப் செய்து, 'Submit' என்பதைக் கிளிக் செய்யவும்.

    கொரோனா பேரிடர் காரணமாக ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) விதிகளில் செய்யப்பட்ட சில மாற்றங்களால், பணியாளர் வருங்கால வைப்பு நிதியிலிருந்து (EPF) முழு பணத்தையும் திரும்ப பெறுவது மற்றும் பகுதியளவு பணத்தை திரும்ப பெறுவது (partial withdrawal) உள்ளிட்ட சில நடைமுறைகள் எளிதாகவும் அதே சமயம் விரைவானதாகவும் மாறி இருக்கிறது. அக்கவுண்ட் வைத்திருப்போர் இப்போது தங்கள் EPF கணக்கிலிருந்து பகுதியளவு பணத்தை திரும்பப் பெறுவதற்கான கோரிக்கைகளை ஆன்லைன் மூலமே மேற்கொள்ளும் ஆப்ஷன் செயலில் உள்ளது.

    கடந்த 2018 டிசம்பர் மாதத்தில் சந்தாதாரர்கள் வேலையை விட்டு வெளியேறிய பிறகு 1 மாதத்திற்குள் , ஒட்டுமொத்த EPF நிதியில் சுமார் 75% வரை திரும்பப் பெற அனுமதிக்கும் வகையில் விதிகள் மாற்றியமைக்கப்பட்டது. அதே போல ஒரு ஊழியர் 2 மாதங்களுக்கும் மேலாக வேலையில்லாமல் இருந்தால், அவர் தனது EPF கணக்கில் இருக்கும் 100% பணத்தையும் திரும்ப பெறலாம். இந்த நிலையில் தற்போது ரூ.1 லட்சம் பணத்தை எந்த ஆவணத்தையும் சமர்ப்பிக்கலாம் வித்ட்ரா செய்யும் வசதியை EPFO கொண்டுவந்துள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Epfo, Pension Plan

    அடுத்த செய்தி