• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • உங்கள் சம்பள கணக்கில் பிஎஃப் இருக்கா? இந்த விஷயத்தை உடனே செஞ்சிடுங்க!

உங்கள் சம்பள கணக்கில் பிஎஃப் இருக்கா? இந்த விஷயத்தை உடனே செஞ்சிடுங்க!

பிஎஃப் அக்கவுண்ட்

பிஎஃப் அக்கவுண்ட்

கணக்கு விவரங்களை மெசேஜ் மற்றும் மிஸ்டு கால் மூலம் பெறுவது ஆகிய சேவைகளை ஆக்டிவேட் செய்ய முடியும்.

  • Share this:
    உங்கள் சம்பள கணக்கில் பிஎஃப் இருக்கா? அப்ப நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை உங்கள் செல்போனில் உமாங் ஆப்பை டவுன்லோட் செய்வது.

    உங்கள் சம்பள கணக்கில் பிஎஃப் இருந்தால், அதுக்குறித்த விவரங்கள், சந்தேகங்கள் , சேவைகளை எளிமையாக பெற்ற அல்லது தெரிந்து கொள்ள நீங்கள் உமாங் ஆப்பை டவுன்லோட் செய்தாலே போதும். இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே பிஎஃப் சார்ந்த அனைத்து தகவல்களையும் மொபைலில் பெறலாம். இந்த உமாங் ஆப்பில் கிடைக்கூடிய சேவைகள் என்னென்ன, நீங்கள் அதை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் போன்ற அனைத்து தகவல்களையும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் அதிகாரப்பூர்வமாகவே தெரிவித்துள்ளது.

    சரி இப்போது இதில் கிடைக்கக்கூடிய சேவைகள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாருங்கள். பிஎஃப் பாஸ்புக் பார்ப்பது, கடைசி வரை டெபாசிட் செய்யப்பட்ட தொகை, நாள் போன்ற விவரங்களை இதில் காணலாம். அத்துடன் UAN ஆக்டிவேட் செய்வது, UAN அலோட்மெண்ட், கோவிட்-19 கோரிக்கை எழுப்புவது, 10C படிவத்தை பெறுவது போன்ற சேவைகளையும் நீங்கள் தேவைப்படும் போதெல்லாம் இந்த உமாங் ஆப்பில் பார்க்க முடியும். பொதுவான சேவைகளான உங்களுக்குரிய PF அலுவலகங்களை தேடுவது, PF கணக்கு விவரங்களை மெசேஜ் மற்றும் மிஸ்டு கால் மூலம் பெறுவது ஆகிய சேவைகளை ஆக்டிவேட் செய்ய முடியும்.

    இந்த உமாங் ஆப்பில் நிறுவனம் சார்ந்த சேவைகளான பயனர் ரெமிட்டன்ஸ் தகவலை பெற முடியும். இதில் பென்சன் சேவைகளும் தனியாக கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பயனர், தன்னுடைய பாஸ்புக்கை பார்க்கலாம், ஜீவன் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யலாம், தேவைப்பட்டால் கட்டண ஆர்டரை டவுன்லோடு செய்யலாம்.

    மேலும் படிக்க.. போஸ்ட் ஆஃபீஸில் பலரும் பணத்தை சேமிக்கும் திட்டத்தில் வந்த முக்கிய மாற்றம்!

    ஈ-கேஒய்சி சேவைகளின் கீழ் ஆதார் சீடிங்கை செய்ய முடியும். அதோடு உங்களுக்கு ஏதேனும் புகார்கள் அல்லது சந்தேகங்கள் இருந்தாலும் இதில் கோரிக்கை வைக்க முடியும். பதிவு செய்யவும் முடியும். உங்களின் கோரிக்கைகளை பொறுத்து அதற்கேற்ப பதில் அனுப்பபடும். மொத்தத்தில் இந்த உமாங் ஆப் சேவை பிஎஃப் கணக்கு வைத்திருப்போருக்கு எல்லாவிதத்திலும் உதவிக்கரமாக இருக்கும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: