வாட்ஸ் அப்பில் சந்தேகங்களை தீர்க்கும் நடவடிக்கை தொடங்கிய பிறகு, பேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக ஊடக தளங்களில் குறைகளை பதிவு செய்வது 30 சதவீதம் குறைந்துள்ளதை ஓய்வூதிய நிதி அமைப்பு கண்டறிந்துள்ளது.
மேலும், புதிய சேவையை அறிமுகப்படுத்தில் இருந்து ஈ.பி.எஃப்.ஓ ஆன்லைன் குறை தீர்க்கும் போர்ட்டலான EPFiGMS-ல் சந்தேகம் கேட்போரின் கேள்விகள் 16 சதவீதம் குறைந்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக ஈ.பி.எஃப்.ஓ அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், " அனைத்து 138 பிராந்திய ஈ.பி.எஃப்.ஓ அலுவலகங்களிலும் வாட்ஸ்அப் ஹெல்ப்லைன் சேவை செயல்படுகிறது.
இந்த குறை தீர்க்கும் புதிய வழிமுறை சந்தாதாரர்களை தன்னம்பிக்கையுடன் இருக்க செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம், ஓய்வூதிய நிதி அமைப்பு தனது டிஜிட்டல் முன்முயற்சியை கடைசி மைலுக்கு கொண்டு செல்ல விரும்புகிறது. மேலும் இந்த நடவடிக்கையால் இடைத்தரகர்களைச் பிஎஃப் பயனாளர்கள் சார்ந்திருப்பதைக் குறைக்க உதவும்" என்று குறிப்பிட்டுள்ளது.
EPFO WhatsApp சேவையை எவ்வாறு பயன்படுத்துவது?
1. உங்களிடம் வாட்ஸ்அப் செயலி இல்லை என்றால், ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப்பை இன்ஸ்டால் செய்து, சரியான மொபைல் எண்ணைப் பயன்படுத்தி உங்களுக்கான கணக்கை உருவாக்க வேண்டும்.
2. அதன்பிறகு, https://www.epfindia.gov.in/site_docs/PDFs/Downloads_PDFs/WhatsApp_Helpline.pdf
என்ற லிங்கை க்ளிக் செய்து உங்கள் சம்பந்தப்பட்ட பிராந்திய அலுவலகத்தின் பிரத்யேக வாட்ஸ்அப் ஹெல்ப்லைன் எண்ணைத் தேடி எடுக்க வேண்டும்.
4. பின்னர், உங்கள் ஸ்மார்ட்போனில் அந்த எண்ணைச் சேமிக்க வேண்டும்.
5. எண்ணைச் சேமித்த பிறகு, வாட்ஸ்அப்பைத் திறந்து அந்த எண்ணைக் க்ளிக் செய்ய வேண்டும்.
6. அதில், உங்கள் சந்தேகம் அல்லது குறைகளை எழுதி send ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
7. இறுதியில் உங்கள் சந்தேகம் அல்லது குறைகளுக்கான பதில்களை
EPFO-விடம் இருந்து பெறுவீர்கள்.
இந்த வசதி சந்தாதாரர்களை தங்கள் வீட்டில் இருந்தபடியே கேள்விகளைக் கேட்க மிக எளிதான முறையை ஈபிஎஃப்ஒ வழங்கியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.