தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான (EPFO )வட்டி 8.5 சதவீதத்தில் இருந்து 8.10 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 5 கோடிப்பேருக்கு பாதிப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வட்டி விகிதம் குறைப்பானது கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவானதாகும். கடந்த 1977-78-ம் ஆண்டின்போது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8 சதவீதமாக குறைக்கப்பட்டு இருந்தது. தற்போது வெளியாகியிருக்கும் வட்டி குறைப்பு தொடர்பான அறிவிப்பு தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2015-16-ம் ஆண்டின்போது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.80-ஆக வழங்கப்பட்டு வந்தது. இது இ.பி.எஃப்-க்கு வழங்கப்பட்ட அதிகபட்ச வட்டி விகிதமாகும்.
இதையும் படிங்க - நல்லா ஞாபகத்தில் வச்சிக்கோங்க.. இந்த வங்கியில் இனி புது அக்கவுண்ட் ஓபன் செய்ய முடியாது!
இந்நிலையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மத்திய அறங்காவலர்கள் வாரியக் கூட்டம் இன்று நடைபெற்றது. மத்திய தொழிலாளர் பூபேந்திர யாதவ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தின்போது, வட்டி விகிதத்தை குறைப்பது தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்னர், குறைக்கப்பட்ட வட்டி விகிதம் நடைமுறைக்கு வரவுள்ளது.
இதையும் படிங்க - செகண்ட் ஹேண்ட் கார் வாங்கவும் லோன் கிடைக்கும்... என்னென்ன ஆவணங்கள் தேவை?
கடந்த 2 ஆண்டுகளாக இபிஎஃப்-க்கான வட்டி விகிதம் குறைக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது குறைக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பை கவனத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்காலத்தில் ஏற்படும் பொருளாதார மாற்றங்களை கணக்கிட்டு, வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் உயர்த்தப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.