ஊழியர்கள் வைப்பு நிதி நிறுவனம், மாதாந்திர வைப்பு நிதி சேமிப்புகளை மட்டுமல்லாமல், ஓய்வூதியத்துக்கு மாதந்திரம் பிடித்தம் செய்யப்படும் தொகை, PPO வாக சேகரிக்கப்படும். ஒரு ஊழியர் வேலையில் இருந்து ஓய்வு பெறும் போது, EPFO நிறுவனம் ஊழியரின் வைப்பு நிதி மற்றும் பென்ஷன் விவரங்களை பென்ஷன் பேமெண்ட் ஆர்டர் என்ற அறிக்கையில் வழங்கும். ஓய்வுதியம் பற்றிய எந்தவொரு கேள்வி அல்லது சந்தேகம் ஏற்பட்டாலும், மத்திய ஓய்வூதிய கணக்கு அலுவகத்தைத் (சென்ட்ரல் பென்ஷன் அக்கவுண்டிங் அலுவலகம்) தொடர்பு கொள்ள, இந்த PPO எண்ணை வழங்க வேண்டும்.
உங்களுக்கு ஓய்வூதியம் பெறுவதற்கு இந்த PPO எண் உதவும். அது மட்டும் இன்றி, நீங்கள் வருடாந்திர லைஃப் சர்டிஃபிகேட் வழங்கும் போதும், இந்த PPO எண்ணைக் குறிப்பிட வேண்டும். எனவே, பென்ஷன் பற்றிய எந்தத் தகவலைப் பெற வேண்டும் என்றாலும், உங்களுக்கு PPO எண் தேவை.
உங்களுக்கான பிரத்யேக பான் அல்லது ஆதார் போல, உங்கள் பென்ஷன் கணக்குக்கான பிரத்யேகமான 12 இலக்க எண் தான் இந்த PPO எண். இந்தத் திட்டம் ஜனவரி 1, 1990 அன்று அறிமுகம் செய்யப்பட்டது. எனவே, அதற்கு முந்தைய அரசு அலுவலங்களின் ஓய்வூதியங்களைப் பற்றிய விவரங்கள், இந்த டேட்டாபேசில் கிடைக்காது.
இதையும் படியுங்கள் : State bank வாடிக்கையாளர்கள் வங்கிக்கு நேராக செல்ல வேண்டாம்.. காரணம் இருக்கு!
PPO எண்ணை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை :
ஒவ்வொரு PPO எண்ணும் 12 இலக்கங்களைக் கொண்டிருக்கும். அதில் முதல் 5 இலக்கங்கள், உங்கள் PPO வழங்கும் நிறுவனத்தைக் குறிக்கும். அடுத்த இரண்டு இலக்கங்கள், எந்த ஆண்டு வழங்கப்பட்டது என்ற ஆண்டைக் குறிக்கும், அடுத்த நான்கு இலக்கங்கள் PPO வின் வரிசை எண்ணைக் குறிக்கும். இறுதியாக, கடைசி இலக்கம், கணினிக்கானது.
உதாரணமாக, PPO எண் 709650601302 என்றால்,
* அது மத்திய பிரதேசத்தில் வழங்கப்பட்டது
* அது 2006 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது
* குறிப்பிட்ட அதிகாரத்தால் வழங்கப்பட்ட 130 ஆவது PPO எண்
* நியமிக்கப்பட்ட கம்ப்யூட்டர் கோடு – 1
உங்கள் PPO எண்ணை எப்படிக் கண்டுபிடிப்பது – படிப்படியான விளக்கம்
* www.epfindia.gov.in என்ற EPFO வின் அதிகாரபூர்வமான இணையத்தளத்துக்குச் செல்லவும்
* ‘Pensioners Portal’ என்ற ஓய்வூதியம் பெறுபவர்கள் போர்ட்டல் என்பதைக் (ஆன்லைன் சேவைகளின் கீழ் பக்கத்தின் இடது பக்கம் காணப்படும்) கிளிக் செய்யவும்.
* அடுத்த பக்கத்தில், ஓய்வூதியதாரர்களின் போர்ட்டலுக்கு வரவேற்கிறோம் என்ற வரவேற்பு உரைக்கு அடுத்து, ‘Know your PPO No’, உங்கள் PPO எண்ணை அறிந்து கொள்ளுங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
* இந்த இடத்தில், உங்கள் ஓய்வூதியத்துடன் இணைக்கப்பட்ட உங்கள் வங்கிக் கணக்கு எண்ணை சமர்ப்பிக்கலாம். உங்கள் வங்கிக்கணக்கு விவரங்களைச் சமர்ப்பிக்கும் போது, உங்களுடைய பென்ஷன் * கணக்கின் PPO எண், உறுப்பினர் ஐடி மற்றும் ஓய்வூதிய வகையை தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படியுங்கள் : கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை PPF திட்டத்தில் முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா? முழு விவரம்!
அதற்கு மாற்றாக, பின்வரும் இணைப்பின் மூலம் நீங்கள் PPO எண்ணை நேரடியாகப் பெறலாம்: https://mis.epfindia.gov.in/PensionPaymentEnquiry/ என்ற இணையத்தளத்துக்குச் செல்லவும். இது ஊழியர்களுக்கு வழங்கப்படுயம் ஓய்வூதியத்திற்கான தனிப்பட்ட போர்டல் ஆகும். இதன் மூலம் நீங்கள் PPO விவரங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். இந்த தளத்தில், நான்கு வெவ்வேறு சேவைகளைப் பயன்படுத்தலாம்.
* ஜீவன் பிரமான விசாரணை
* உங்கள் PPO எண்ணைத் தெரிந்து கொள்ளலாம்
* PPO விசாரணை/ பேமெண்ட் பற்றிய விசாரணை
* உங்கள் ஓய்வூதிய நிலையை அறிந்து கொள்ளலாம்
மேலே உள்ள இரண்டு வழிகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி, உங்கள் PPO எண்ணைத் தெரிந்து கொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.