முகப்பு /செய்தி /வணிகம் / EPFO அதிக ஓய்வூதியத் திட்டம்... விண்ணப்பிக்கும் காலவரம்பு நீட்டிப்பு.. முழு விவரம்..!

EPFO அதிக ஓய்வூதியத் திட்டம்... விண்ணப்பிக்கும் காலவரம்பு நீட்டிப்பு.. முழு விவரம்..!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

அதிக ஓய்வூதியத் திட்டத்தில் இணைவதற்கான கடைசி தேதி மார்ச் 3  ஆக இருக்கும் என அனைவரும் எண்ணிக் கொண்டிருந்தார்கள். 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இபிஎஃப்ஓ- வின் அதிக ஓய்வூதிய திட்டத்தில் இணைவதற்கு பணியாளர்கள் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவானது மே 3, 2023 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னர் கிடைத்த தகவலின் படி மார்ச் 3, 2023 தான் பணியாளர்கள் விண்ணப்பிப்பதற்கு கடைசி தேதியாக இருக்கும் எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், இந்த அறிவிப்பானது பணியாளர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி இபிஎப்ஃஓ  (EPFO) பணியாளர்களுக்கு அதிக ஓய்வூதிய திட்டத்தில் இணைவதற்கு நான்கு மாத காலம் அவகாசம் வழங்க வேண்டும் என தீர்ப்பு வெளியிட்டது. அதன்படி மார்ச் 3, 2023 ஆம் தேதி அந்தக் காலத்தெடுவானது முடிவடைகிறது.  இதன்மூலம் அதிக ஓய்வூதியத் திட்டத்தில் இணைவதற்கான கடைசி தேதி மார்ச் 3  ஆக இருக்கும் என அனைவரும் எண்ணிக் கொண்டிருந்தார்கள்.

அதிக ஓய்வூதியத்தில் இணைவதற்கான கடைசி தேதி என்ன..?

தற்போது கிடைத்துள்ள அறிவிப்பின் படி இபிஎஃப்ஓவின் அதிகாரப்பூர்வ இணையத்தில் அதிக ஓய்வூதியத் திட்டத்தில் இணைவதற்கான கடைசி தேதி மே 3, 2023 என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More : ரூ.10000 சேமித்தால் ரூ.16லட்சம் வருமானம்.. போஸ்ட் ஆபிஸ் சேமிப்பில் சூப்பர் திட்டம்

யாரெல்லாம் இந்தத் திட்டத்தில் இணைய முடியும்

ஊதிய உச்சவரம்பு ரூபாய் 5,000 அல்லது 6,500 விட அதிகமாக தனது சம்பளத்திலிருந்து பங்களிப்பு செய்த ஊழியர்கள் மற்றும் முதலாளிகள் இந்த திட்டத்தில் இணையலாம். ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தில் உறுப்பினர்களாக இருக்கும்போது (நிறுவனம் மற்றும் பணியாளர் மூலம்) கூட்டு விருப்பத்தைப் பயன்படுத்தாதவர்களாக இருக்க வேண்டும். செப்டம்பர் 1, 2014க்கு முன்னரே உறுப்பினராக இருந்தவர்களும், அதன் பிறகும் உறுப்பினர்களாக தொடர்பவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

எவ்வாறு விண்ணப்பிப்பது ?:

தகுதியுடைய உறுப்பினர்கள் தங்களுடைய முதலாளிகளுடன் சேர்ந்து ஓய்வூதிய ஆணையரால் அறிவிக்கப்பட்ட அனைத்து வித ஆவணங்களுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் இபிஎஃப்ஓ ஆனது “ஜாயின்ட் ஆப்ஷன் பார்ம்” என்ற தேர்வை அளித்துள்ளது.
விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டவுடன் சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி விண்ணப்பங்கள் கையாளப்படும் என தெரிகிறது.
அதன் பிறகு உங்களுக்கான யுஆர்எல் அளிக்கப்படும். உங்களுக்கு அது கிடைத்ததும், பிராந்திய ஓய்வூதிய ஆணையரின் இந்த அறிவிப்பை வெளிப்படையாக அனைவருக்கும் தெரிவிக்கும் வகையில் அறிவிப்பு பலகையில் வெளியிடுவார்.
அனைத்து விண்ணப்பங்களும் பதிவு செய்யப்பட்டு டிஜிட்டல் முறையில் அவர்களுக்கான ரசீது வழங்கப்படும்.
அதிக ஓய்வு ஊதிய திட்டத்தில் இணைந்தவர்கள் அனைவருக்கும் வட்டியானது, அதில் குறிப்பிட்டுள்ளபடி குறிப்பிட்ட கால வரம்பிற்குள் அவரவர் கணக்கில் செலுத்தப்படும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
First published:

Tags: Epfo, Pension Plan