உங்கள் சம்பள கணக்கில் பிஎஃப் இருக்கா? அபராதம் கட்டாமல் இருக்க இதை உடனே செய்யுங்கள்!

பிஎஃப் விதிமுறை

இதை செய்யாவிட்டால் ரூ.1000 முதல் 10 ஆயிரம் வரை அபராதம் கட்ட நேரிடும் மறந்துவிடாதீர்கள்.

 • Share this:
  உங்கள் சம்பள கணக்கில் பிஎஃப் இருக்கா? அப்ப இந்த தகவல் உங்களுக்கு தான். அபராதம் கட்டாமல் இருக்க உடனே இதை செய்து முடியுங்கள்.

  தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி என்பது கண்டிப்பாக ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் கைக்கொடுக்கும் அவசியான ஒன்று. இதில் மத்திய அரசு அவ்வப்போது மாற்றங்களை அறிவிக்கும். இதை சற்று உன்னிப்பாக கவனிப்பது ஒவ்வொரு நிறுவனம் மற்றும் ஊழியர்களின் கடமையாகும். அந்த வகையில் பிஎஃப் உறுப்பினர்கள் செப்டம்பர் 1ஆம் தேதிக்குள் தங்களது ஆதார் எண்ணை பிஎஃப் கணக்குடன் இணைக்கவேண்டும். இல்லாவிட்டால் அவர்களது பிஎஃப் கணக்கில் பணம் வருவதில் சிக்கல் ஏற்படும். அதோடு, அவர்களது பிஎஃப் கணக்கும் முடக்கப்பட வாய்ப்புள்ளது.

  மத்திய அரசின் அறிவிருத்தலின்படி பிஎஃப் உறுப்பினர்கள் தங்களது ஆதார் எண்ணை இணைப்பதற்கு ஜூன் 1ஆம் தேதி வரை டைம் வழங்கப்பட்டது. அதன் பின்பு ஊரடங்கு கொரோனா காலத்தை காரணம் காட்டி, மேலும் அவகாசம் வழங்கப்பட்டது. அதாவது செப்டம்பர் 1 ஆம் தேதி வரை கடைசி நாள். ஆதாரை இணைக்காவிட்டால் எந்தவொரு பரிவர்த்தனையும் செய்ய முடியாது ஆதார் எண்ணை பிஎஃப் கணக்குடன் இணைக்காமல் பலரும் இருப்பதால் வருமான வரித்துறையினர் கடைசி எச்சரிக்கை விடுத்துள்ளனர். நீங்கள் பிஎஃப் உறுப்பினராக இருந்தால் உடனே இதை செய்துவிடுங்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதை ஆன்லைனிலும் எளிதில் செய்து முடிக்கலாம். www.epfindia.gov.in தளத்திற்கு சென்று படிகளை பின்பற்றினால் போதும் எளிதில் முடிந்துவிடும். அதே போல் பான் கார்டு வைத்திருப்பவர்களும் தங்களது ஆதார் கார்டை இணைப்பதற்கு செப்டம்பர் மாதம் வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதை செய்யாவிட்டால் ரூ.1000 முதல் 10 ஆயிரம் வரை அபராதம் கட்டவும் நேரிடும் மறந்துவிடாதீர்கள்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published: