முகப்பு /செய்தி /வணிகம் / டிசம்பர் மாதத்தில் 14.6 லட்சம் EPFO கணக்குகள் தொடங்கப்பட்டன.. என்ன காரணம் தெரியுமா?

டிசம்பர் மாதத்தில் 14.6 லட்சம் EPFO கணக்குகள் தொடங்கப்பட்டன.. என்ன காரணம் தெரியுமா?

பிஎஃப் - பான்

பிஎஃப் - பான்

EPFO வில் (Employees Provident Fund Organisation) டிசம்பர் 2021 வெளியிட்ட தரவன் படி,  புதிய வேலைகள் 16.4% என்ற அளவில் அதிகரித்துள்ளது

  • Trending Desk
  • 1-MIN READ
  • Last Updated :

நாட்டின் பொருளாதாரம் என்பது வேலைவைப்புகளைச் சார்ந்து இருக்கிறது. மக்கள் தொகையில் எவ்வளவு சதவிகிதம் வேலை இல்லாமல் இருக்கின்றனர் என்பதன் அடிப்படையில் ஒரு நாட்டில் எந்த துறைகளில் வளர்ச்சி இல்லை அல்லது முடங்கி இருக்கிறது என்று கூறிவிடலாம். அதே போல, வேலைவாய்ப்பு பெற்றவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும் போது, பொருளாதாரம் முன்னேற்றம் அடையத் தொடங்கியுள்ளது என்ற அடையாளம் ஆகும். அந்த வகையில், இந்தியாவில், கடந்த டிசம்பர் மாதம் பணியில் இருக்குபவர்களின் எண்ணிக்கை 16% உயர்ந்துள்ளது. புதிதாக வைப்பு நிதி பதிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

EPFO வில் (Employees Provident Fund Organisation) டிசம்பர் 2021 வெளியிட்ட தரவன் படி, புதிய வேலைகள் 16.4% என்ற அளவில் அதிகரித்துள்ளது என்பது நாட்டின் முக்கிய வளர்ச்சியாகக் காணப்படுகிறது. சம்பளத்தில் இருந்து மாதா மாதம் பிடித்தம் செய்யப்படும் தொகை, ஊழியர்கள் பணி ஓய்வு பெறும்போது, PF செட்டில்மென்ட்டாக கணிசமான தொகையாக கிடைக்கும். தற்போதைய தரவின் படி, (பின்னாளில் திருத்தம் செய்யப்படலாம்) டிசம்பர் மாதத்தில் 14.6 லட்சம் புதிய PF கணக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க.. திருமணமானவர்கள் கவனத்திற்கு..புதிய உறுப்பினர் பெயரை ரேஷன் கார்டில் சேர்க்க இதையெல்லாம் செய்ய வேண்டும்!

அது மட்டுமின்றி, EPF & MP Act, 1952 படி, 9.11 லட்சம் புதிய உறுப்பினர்கள் முதல் முறையாக இணைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், 5.49 லட்சம் உறுப்பினர்கள் வெளியேறி, மீண்டும் EPFO கணக்கில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு, PF கணக்கில் சேர்க்கப்பட்ட புதிய உறுப்பினர்களின் எண்ணிக்கை, 3.87 லட்சம். இவர்களின் வயது வரம்பு 22 முதல் 25 வரை காணப்படுகிறது. இதனால், நாட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு சுலபமாகக் கிடைக்கிறது என்பதும், பல்வேறு துறைகள் வளர்ச்சியை நோக்கி செல்கின்றன என்பதும் உறுதியாகின்றன. அது மட்டுமின்றி, 18-21 வயது வரை உள்ளவர்கள் கூட புதிய PF கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் 2021 சேர்க்கப்பட்ட புதிய உறுப்பினர்களில் கிட்டத்தட்ட 47% 25 வயதுக்குள் இருக்கும் இளைஞர்கள். இதில் பெரும்பாலானவர்கள் முதல் முறையாக பணியில் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க.. முழுக்க முழுக்க குழந்தைகளுக்காகவே போஸ்ட் ஆபீஸ் இதை செய்கிறது!

மாநில வாரியாக, 8.97 லட்சம் உறுப்பினர்களுடன், மகாராஷ்டிரா, ஹரியானா, குஜராத், தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் முதல் இடங்களில் உள்ளன.

பாலின ரீதியாக, தோராயமாக 3 லட்சம் பெண் உறுப்பினர்கள், ஒட்டுமொத்த உறுப்பினர்களில் 20.52%, EPFO கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தொழில் துறைகளைப் பொறுத்தவரை, தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள், ரெக்ரூட்மென்ட் நிறுவனங்கள், சிறிய காண்ட்ராக்ட் நிறுவனங்கள் உள்ளிட்ட ‘எக்ஸ்பெர்ட் சர்வீசஸ்’ என்ற பிரிவில் இருக்கும் துறைகளில் 40.24% உறுப்பினர்கள் காணப்படுகின்றனர். அது மட்டுமின்றி, டெக்ஸ்டைல்ஸ், இரும்பு மற்றும் ஸ்டீல், கட்டுமானம் ஆகிய துறைகளில் வேலைவாய்ப்பு பெறும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Epfo, PF AMOUNT