பணியாளர்கள் ஓய்வுபெறும் சமயத்தில் அவர்களுக்கு பெரிதும் கை கொடுப்பது ‘ஈபிஎஃப்ஓ’ எனப்படும் வருங்கால வைப்பு நிதித் திட்டம் ஆகும். இந்த ஈபிஅஃப் அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் அடுத்த மாதத்தில் நடைபெற உள்ளது. அப்போது, பணியாளர்களுடைய பிஎஃப் தொகைக்கான வட்டி தொகையை உயர்த்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.
மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “பணியாளர்களுக்கான பிராவிடண்ட் நிதி அமைப்பின் நிர்வாக ஆலோசனைக் கூட்டம், மார்ச் மாதம் கவுகாத்தியில் நடைபெற உள்ளது. 2021 -22 நிதியாண்டு நிறைவடைய உள்ள சூழலில், பணியாளர்களின்
பிஎஃப் நிதிக்கான வட்டியை அதிகரிப்பது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க .. State bank வாடிக்கையாளர்கள் வங்கிக்கு நேராக செல்ல வேண்டாம்.. காரணம் இருக்கு!
உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று முடிந்த பிறகு, மார்ச் 2ஆவது வாரத்தில் இந்த ஆலோசனைக் கூட்டத்தை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஈபிஎஃப் திட்ட முதலீடுகளை இன்னும் பல புராடக்ட்களுக்கு விரிவாக்கம் செய்வது தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போதைய வட்டி விகிதம்
ஈபிஎஃப் திட்டத்தின் கீழ், பணியாளர்களிடம் இருந்து வரவு வைக்கப்படும் பணத்துக்கு 8.5 சதவீத வட்டி வழங்குவது என்று கடந்த 2020 - 21 நிதியாண்டின் இறுதிக் காலமான மார்ச் மாதத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இது கடந்த 8 ஆண்டுகளில் அந்த அமைப்பு வழங்கிய குறைந்தபட்ச வட்டித் தொகை என்று கூறப்பட்டது.
முன்னதாக, 2021 நிதியாண்டுக்கான
வட்டி விகிதம், ஊழியர்களின் அக்கவுண்டில் வரவு வைக்கப்பட்டது. இதுகுறித்து கடந்த ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி ஈபிஎஃப்ஓ அமைப்பு டிவிட்டரில் வெளியிட்ட தகவலில், “2020 - 21 நிதியாண்டில் 23.59 கோடி அக்கவுண்ட்களில் 8.50 சதவீத வட்டி வரவு வைக்கப்பட்டது’’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 2021 நிதியாண்டில், ஈக்விட்டி பங்குகளில் முதலீடு செய்யவும், அதன் மூலம் கிடைக்கும் வட்டி மற்றும் டெப்ட் இன்வெஸ்ட்மெண்ட் மூலமாக கிடைக்கும் வட்டி ஆகிய இரண்டையும் சேர்த்து வாடிக்கையாளர்களுக்கு வழங்க ஈபிஎஃப் நிறுவனம் முடிவு செய்தது.
இதையும் படிங்க.. செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் சேர என்ன செய்ய வேண்டும்? எதையெல்லாம் செய்ய கூடாது? முழு விபரம்!
தற்போது, ஈபிஎஃப் திட்டத்தில் 60 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். அவர்களுடைய ரூ.15 கோடி நிதியை இந்த அமைப்பு நிர்வகித்து வருகிறது. சுமார் 1.8 லட்சம் கோடி ஆண்டுதோறும் வாடிக்கையாளர்கள் மூலமாக ஈபிஎஃப் திட்டத்தில் முதலீடு செய்யப்படுகிறது. கொரோனா சூழல் காரணமாக பல நிறுவனங்களில் ஆள் குறைப்பு அல்லது ஊதியம் குறைப்பு போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், தங்களுக்கான ஈபிஎஃப் டெபாசிட்களுக்கான வட்டி உயர்த்தப்படுமா என்று பணியாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.