ஆன்லைனில் EPFO கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கலாம் - எளிய வழி!

கோப்புப் படம்

ஜூன் மாதம் காலக்கெடு என அறிவித்திருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக செப்டம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அனைத்து ஊழியர்களின் பிஎப் கணக்குடனும் ஆதார் எண்-ஐ இணைப்பதை கட்டாயமாக்கியுள்ளது.

ஊழியர்களின் மாத வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு பணம் அவர்களின் வருங்கால வைப்பு நிதியாக வரவு வைக்கப்படும். மத்திய அரசும் ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை வழங்கும். இதனை ஊழியர்கள் தங்கள் பணியில் இருக்கும் போதோ அல்லது வேலை உள்ளதாக நேரத்திலேயோ வட்டியுடன் பெற்றுக்கொள்ளலாம். இந்த நிலையில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ( EPFO) கடந்த ஜூன் 1ம் தேதி முதல் PF கணக்கின் விதிகளில் சில மாற்றங்களை செய்துள்ளது. அதன்படி, அனைத்து கணக்குகளுடனும் ஆதார் எண் இணைப்பை கட்டாயமாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதற்கு ஜூன் மாதம் காலக்கெடு என அறிவித்திருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக செப்டம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 1ம் தேதிக்குள் PF கணக்கு வைத்திற்கும் அனைவரும் தங்கள் ஆதார் அட்டையை, வருங்கால வைப்பு நிதி (PF) கணக்குகளுடன் இணைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய விதியானது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும் என்று EPFO அறிவித்துள்ளது.

செப்டம்பர் காலக்கெடுவுக்கு முன்பாக ஆதார் இணைப்பை நிறைவு செய்ய எஸ்எம்எஸ், மின்னஞ்சல்கள், தொலைபேசி அழைப்புகள் மூலம் தனது ஊழியர்களுக்கு மீண்டும் மீண்டும் அறிவுறுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. PF கணக்குடன் ஆதார் எண்ணை ஆன்லைன் மற்றும் நேரடியாக EPFO அலுவலகத்திலும் இணைக்கலாம். உங்கள் EPFO கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க தவறும் பட்சத்தில், EPFO-ன் எந்த ஒரு சேவையையும் உங்களால் பயன்படுத்த முடியாது என EPFO உத்தரவு வெளியிட்டுள்ளது.

EPFO ​​கணக்குடன் உங்கள் ஆதார் எண்ணை வீட்டில் இருந்தவாறே இணைப்பது எப்படி என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.,

* முதலில் பிஎப் தளமான Epfindia.gov.in அல்லது நேரடியாக https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்ற பக்கத்திற்கு செல்லவும்.

*உங்கள் UAN எண், பாஸ்வோர்டு மற்றும் கேப்சா ஆகியவற்றைக் கொடுத்து உள் நுழைந்திடுங்கள்.

* மெனுவில் இருக்கும் "Manage" என்பதைக் கிளிக் செய்து, E-KYC போர்ட்டலைக் கிளிக் செய்யவும்.

* KYC கிளிக் செய்த உடன் புதிய பக்கத்திற்குச் செல்லும், இந்தப் பக்கத்தில் நீங்கள் ஏற்கனவே ஆதார் எண்-ஐ இணைத்திருந்தால் எவ்விதமான பிரச்சனையும் இல்லை.

Also read... Gold Rate: தங்கம் வாங்க சரியான நேரம் இதுதான்... இன்று (ஆகஸ்ட் 07-2021) சவரனுக்கு ரூ. 488 குறைவு!

* ஆதார் எண் இல்லாத பட்சத்தில் உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட்டு, OTP உருவாக்கப்படும் வரை காத்திருங்கள்.

*உங்கள் ஆதார் எண்ணை மீண்டும் நிரப்பி OTP-ஐ சரிபார்க்கவும்.

* உங்கள் ஆதார் உங்கள் PF கணக்குடன் இணைக்கப்படும். ஆதார் தரவுகளுக்குக் கீழ் "Verified" என எழுதப்பட்டு இருக்கும்.
Published by:Vinothini Aandisamy
First published: