• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • PF Withdrawal : பி.எஃப். பணத்தை மூன்றே நாளில் பெறலாம்.. விண்ணப்பிக்கும் வழி இதோ!

PF Withdrawal : பி.எஃப். பணத்தை மூன்றே நாளில் பெறலாம்.. விண்ணப்பிக்கும் வழி இதோ!

ஊழியர் வருங்கால வைப்பு நிதி

ஊழியர் வருங்கால வைப்பு நிதி

உங்கள் பி.எஃப். பணத்தை மூன்றே நாளில் ஆன்லைன் மூலம் ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதன் மூலம் எளிதாகப் பெறலாம்.

  • Share this:
    திடீரென எதிர்பாராமல் பரவி வரும் உருமாறிய கொரோனா மக்களை வீடுகளுக்குள் முடங்க செய்துள்ளது. அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கால் பலரும் தங்களது வேலைகளுக்கு செல்ல முடியாமல் வருமானமின்றி வாடி வருகின்றனர். பலரது குடும்ப பொருளாதாரம் கடந்த ஆண்டை போலவே மீண்டும் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருப்பதால் கோவிட் -19 இரண்டாம் அலை பலருக்கு தூக்கமில்லாத இரவுகளை அளித்துள்ளது.

    கோவிட் -19 காரணமாக நிதி சிக்கல்களில் தவிக்கும் ஒரு நபர் தனது EPF கணக்கிலிருந்து ஒரு தொகையை திரும்ப பெற்று கொள்ளலாம் என்று மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது.

    இந்த இக்கட்டான நேரத்தில் பணத்தை திரும்ப பெற நினைக்கும் ஊழியர்கள் EPFO வழங்கிய தங்களது யுனிவர்சல் கணக்கு எண்ணை (UAN) பயன்படுத்த வேண்டும்.

    ALSO READ |  பி.எஃப் அக்கவுண்டின் UAN எண்ணை கண்டுபிடிப்பது மற்றும் புதிதாக உருவாக்குவது எப்படி?

     

    இந்த செயல்முறையை துவங்குவதற்கு முன்னதாக உங்கள் ஆதார், பான் மற்றும் வங்கிக் கணக்கு உங்களது UAN-உடன் இணைக்கப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    1. முதலில் உங்களது UAN நம்பரை பயன்படுத்தி login செய்து கொள்ளுங்கள்.

    2. பின்னர் EPF வெப்சைட்டில் ஆன்லைன் சர்வீஸ் செக்ஷன் (Online Services section) கீழ் கொடுக்கப்பட்டிருக்கும் Form-31, 19, and 10C என்ற உரிமை கோரலை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

    ALSO READ |  பி.எஃப் குறித்து ஏதாவது சந்தேகமா..? மாநில வாரியாக வாட்ஸ்அப் ஹெல்ப்லைன் எண்கள் அறிவிப்பு

    3. அதன் பின்னர் உங்களது பெயர் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய ஸ்கிரீன் தோன்றும். அதில் உங்கள் வங்கி கணக்கின் கடைசி 4 இலக்கங்கள் கேட்கப்படும். அதை டைப் செய்து க்க்ளிக் செய்த பின் திரையில் ஒரு பாப்-அப் தோன்றும், அதில் இந்த கணக்குதானா என்பதை உறுதி செய்யும்படி ('Certificate of undertaking'.) கேட்கும். அதை ஓகே கொடுத்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    4. சரிபார்த்த பின், உங்கள் ஆன்லைன் க்ளைமை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல Proceed என்பதை க்ளிக் செய்யுங்கள். கீழே நீங்கள் காணும் மெனுவிலிருந்து PF advance படிவம் 31-ஐ தேர்வு செய்ய வேண்டும். என்ன காரணத்திற்காக பணம் எடுக்கிறீர்கள் என்பதற்கான காரணங்கள் பட்டியலில் கொடுக்கப்பட்டிருக்கும் Outbreak of pandemic (COVID-19) என்பதை செலக்ட் செய்து கொள்ளுங்கள்.

    ALSO READ |  உங்கள் ஆதார் அட்டையை தொலைத்து விட்டீர்களா? ஆன்லைனில் எவ்வாறு மீட்டெடுக்கலாம்?

    5. முதலில் நாம் சொன்ன விதிகளின் படி உங்களுக்கு எவ்வளவு தொகை தேவையோ அதை பதிவிட்டு கொள்ளுங்கள். பின் உங்கள் வங்கியின் நிரப்படாத அதே சமயம் உங்கள் வங்கி கணக்கு எண் அடங்கிய செக்கை ஸ்கேன் செய்து கேட்கப்பட்டுள்ள இடத்தில் அப்லோட் செய்து கொள்ளுங்கள்.

    6. உங்கள் முகவரியை உறுதி செய்யுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ALSO READ |  ஜூன் மாதத்தில் இந்த நாட்களில் வங்கிகள் இயங்காது

    7. பின் ஆதார் பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணிற்கு SMS வழியே அனுப்பப்படும் OTP-ஐ அதில் பதிவு செய்ய வேண்டும். OTP சமர்ப்பிக்கப்பட்ட பிறகு உங்களது ஆன்லைன் க்ளைம் குறிப்பிட்ட காலத்திற்குள் ஏற்று கொள்ளப்படும் ஏற்று கொள்ளப்படும்.

    ALSO READ |  ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க சில எளிய வழிகள்!

    பெருந்தொற்றை சமாளிக்க அனைவரும் போராடி வருவதால் மூன்றே நாளில்  உங்கள் PF பணம் உங்களுக்கு கிடைக்குமாறு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

     



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: