Home /News /business /

EPF | வைப்பு நிதி கணக்கில் உங்களுக்கு இந்த சிக்கல் இருந்தால் சட்டப்படி புகார் அளிக்கலாம்

EPF | வைப்பு நிதி கணக்கில் உங்களுக்கு இந்த சிக்கல் இருந்தால் சட்டப்படி புகார் அளிக்கலாம்

EPFO

EPFO

EPF contribution rules | ஒரு நிறுவனம் தனது ஊழியர்களுக்கான வைப்புத் தொகையை செலுத்த தவறினால் ஊழியர்களுக்கான வைப்புத்தொகை அலுவலகத்தில் நிறுவனம் பங்களிப்பு செய்யவில்லை என்பதை புகாராக அளிக்கலாம்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
EPF contribution rules | ஊழியர்கள் வைப்பு நிதி என்பது சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கான எதிர்கால சேமிப்பாகவும், நிதி ரீதியான பாதுகாப்பை அளிப்பதற்காகவும் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியராக அடிப்படை சம்பளம் மற்றும் டியர்னஸ் அலவன்ஸில் இருந்து 12 சதவீத தொகை வைப்பு நிதிக்காக பிடித்தம் செய்யப்பட்டு, அந்தந்த ஊழியரின் வைப்பு நிதி கணக்கில் மாதா மாதம் செலுத்தப்படுகிறது.

இதேபோல ஊழியருக்கு சம்பளம் வழங்கும் நிறுவனம் ஒரு குறிப்பிட்ட தொகையை ஊழியரின் சார்பாக ஒவ்வொரு மாதமும் அந்த ஊழியரின் வைப்பு நிதி கணக்கில் செலுத்த வேண்டும். அதாவது ஒரு ஊழியரின் சம்பளத்தில் ₹1000 PF பங்களிப்பாக பிடித்தம் செய்யப்படுகிறது என்றால், அதற்கு சமமான தொகையை, சம்பளம் வழங்கும் நிறுவனம் ஊழியரின் கணக்கில் வரவு வைக்க வேண்டும்.

சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் ஊழியர்களின் PF பங்களிப்புத் தொகையை செலுத்த வேண்டும். நிறுவனத்தின் பங்களிப்பை, ஊழியர்களின் PF கணக்கில் செலுத்த வேண்டும்.



நிறுவனம் PF கணக்கிற்கு அளிக்கும் 12 சதவிகித தொகையில் 8.33% ஊழியரின் பென்சன் கணக்கில் சேர்க்கப்படும். மீதமுள்ள தொகை பிஎஃப் கணக்கில் சேர்க்கப்படும். இது ஒவ்வொரு நிறுவனமும் கட்டாயமாக செய்ய வேண்டும். EPF சட்டத்தின்படி மாதா மாதம் இந்த தொகையை ஒவ்வொரு நிறுவனமும் ஊழியரின் கணக்கில் செலுத்த வேண்டும். நிறுவனம் அந்தத் தொகையை ஊழியரின் கணக்கில் செலுத்துகிறதா என்பதை ஒவ்வொரு மாதமும் PF கணக்கு போர்ட்டலில் லாகின் செய்து தெரிந்து கொள்ளலாம். ஒருவேளை ஊழியரின் நிறுவனம் PF பங்களிப்பை செய்யவில்லை என்றால் என்ன நடக்கும், ஊழியராக நீங்கள் என்ன செய்யலாம் என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

Also Read : இனி எங்கும் அலைய வேண்டாம்.. வீட்டில் இருந்தே UAN நம்பரை ஆன்லைன் 5 நிமிடத்தில் பெற்றுவிடலாம்.!

சட்டப்படி புகார் அளிக்கலாம் அல்லது வழக்கு பதிவு செய்யலாம்

ஒரு நிறுவனம் தனது ஊழியர்களுக்கான வைப்புத் தொகையை செலுத்த தவறினால் ஊழியர்களுக்கான வைப்புத்தொகை அலுவலகத்தில் நிறுவனம் பங்களிப்பு செய்யவில்லை என்பதை புகாராக அளிக்கலாம் என்று சட்ட நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். இவ்வாறு ஒரு நிறுவனத்தின் மீது புகார் பதிவு செய்யப்பட்டால் ஈபிஎஃப்ஓ அந்த நிறுவனம் பிஎஃப் கணக்கை சரிவர நிர்வகிக்கிறதா என்பதை பற்றிய ஆய்வு மற்றும் விசாரணையை மேற்கொள்ளும். ஒருவேளை நிறுவனங்கள் தங்களுடைய பங்களிப்பை செய்ய தவறினால் அதை கட்ட வேண்டும் என்று அவர்களுக்கு அறிக்கை அனுப்பப்படும். அது மட்டுமல்லாமல் ஊழியர்கள் பங்களிக்கும் தொகையையும் சேர்த்து நிறுவனமே செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்படும்.



அதுமட்டுமில்லாமல் ஊழியர்களுக்கான வைப்புத் தொகை, ஊழியர்களின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்பட்டு, அந்த தொகையை நிறுவனம் செலுத்தாமல் இருந்தால் அது கிரிமினல் குற்றம் என்று கருதப்படும். இந்தியன் பீனல் கோடு சட்டம், பிரிவு 406/409 இன் கீழ், காவல்துறையில் புகார் அளிக்கலாம்.

Also Read : வாடகை வீட்டில் வசிப்பவர்கள் 18 சதவீதம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டுமா - புதிய விதி என்ன.?

ஊழியர்கள் வைப்பு நிதி சட்டத்தின்படி, நிறுவனத்தின் மீது தவறு என்பது நிரூபிக்கப்பட்டால், நிறுவனத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும். இதன் மூலம் ஊழியர்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை நிறுவனத்திடமிருந்து பெறலாம்.



PF கணக்குகளில் பங்களிப்பு செலுத்தப்பட வேண்டிய கால வரம்பு

சம்பளம் வழங்கப்பட்ட தேதியிலிருந்து 15 நாட்களுக்குள், சம்பளம் வழங்கப்பட்ட மாதத்திற்கான ஈபிஎஃப் பங்களிப்பை நிறுவனம் செலுத்த வேண்டும். உதாரணமாக ஜூலை 2022 சம்பளத்தை, ஆகஸ்ட் 1 ஆம் தேதி நிறுவன ஊழியர்களுக்கு வழங்கியிருந்தால், ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் ஊழியரின் பங்களிப்பு மற்றும் நிறுவனத்தின் PF பங்களிப்பு இரண்டையுமே ஊழியரின் PF கணக்கில் நிறுவனம் செலுத்த வேண்டும்.
Published by:Selvi M
First published:

Tags: Epfo, PROVIDENT FUND

அடுத்த செய்தி