ஹோம் /நியூஸ் /வணிகம் /

யெஸ் வங்கி ஊழியர்களின் சம்பளம் & வேலைவாய்ப்பின் நிலை என்ன..? நிர்மலா சீதாராமன் விளக்கம்

யெஸ் வங்கி ஊழியர்களின் சம்பளம் & வேலைவாய்ப்பின் நிலை என்ன..? நிர்மலா சீதாராமன் விளக்கம்

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  யெஸ் பேங்கை தனது கட்டுபாட்டில் ரிசர்வ் வங்கி எடுத்துள்ள நிலையில் அந்த வங்கியின் வேலைவாய்ப்பு மற்றும் ஊழியர்களின் நிலை குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார்.

  வாராக்கடன், மோசமான நிர்வாகம் உள்ளிட்ட காரணங்களால் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் யெஸ் வங்கி, கடந்த ஆண்டு 1,500 கோடி ரூபாய் இழப்பை சந்தித்தது. இதனால், அந்த வங்கியை, ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதாக நேற்று அறிவித்தது.

  இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த நிர்மலா சீதாராமன் பேசுகையில், 2017 முதல் யெஸ் வங்கியை ரிசர்வ் வங்கி தொடர்ந்து கண்காணித்து வருகிறது. வங்கியின் மோசமான நிர்வாகம் மற்றும் ரிஸ்கான கடன்களை வழங்கி வந்துள்ளது. நிதி நெருக்கடியில் இருக்கும் யெஸ் வங்கியை புனரமைக்க முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

  Also Read : யெஸ் வங்கி வாடிக்கையாளரா? நீங்கள் உடனடியாக செய்ய வேண்டியது என்ன?

  மேலும் யெஸ் வங்கி ஊழியர்களின் வேலைவாய்ப்பு மற்றும் சம்பளம் அடுத்த ஒரு வருடத்திற்கு உறுதி செய்யப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். நிர்மலா சீதாராமன் கருத்தின்படி யெஸ் வங்கியில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளது.

  Published by:Vijay R
  First published:

  Tags: Minister Nirmala Seetharaman