Home /News /business /

ட்விட்டர் பயன்படுத்த கட்டணம்: எலான் மஸ்க் ட்விட்டால் பயனர்கள் அதிர்ச்சி

ட்விட்டர் பயன்படுத்த கட்டணம்: எலான் மஸ்க் ட்விட்டால் பயனர்கள் அதிர்ச்சி

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

Twitter: ட்விட்டரில் கருத்து சுதந்திரம் தேவை என கூறி  தனது விருப்பதை முதன்முதலில் வெளியிட்ட எலான் மஸ்க் (Elon Musk) தற்போது அதனை கையகப்பட்டுத்திவிட்ட நிலையில், ட்விட்டர் சமூக ஊடகத்தில் எடிட் வசதி கொண்டுவருவது உட்பட பல்வேறு மாற்றங்கள் அவரது லிஸ்டில் உள்ளன.

மேலும் படிக்கவும் ...
    ட்விட்டர் சமூக ஊடகத்தை சாதாரண நபர்கள் இலவசமாக பயன்படுத்தலாம் என்றும் அரசு சார்ந்தவர்கள், வர்த்தக ரீதியாக பயன்படுத்துபவர்களுக்கு சிறிது கட்டணம் வசூலிக்கபடலாம் என்றும்  எலான் மஸ்க் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

    ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓவான எலான் மஸ்க் உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரராக திகழ்கிறார். ட்விட்டர் நிறுவனத்தை வாங்க வேண்டும் என்ற நீண்ட நாட்களாக கனவு கண்டுவந்த எலான் மஸ்க் ஒருவழியாக ட்விட்டர் நிறுவனத்தை 3.2 லட்சம் கோடிக்கு முழுமையாக வாங்க  முடிவு செய்து தனது கனவை நிஜமாக்கி விட்டார்.

    ட்விட்டரில் கருத்து சுதந்திரம் தேவை என கூறி  தனது விருப்பதை முதன்முதலில் வெளியிட்ட மஸ்க் தற்போது அதனை கையகப்பட்டுத்திவிட்ட நிலையில், ட்விட்டர் சமூக ஊடகத்தில் எடிட் வசதி கொண்டுவருவது உட்பட பல்வேறு மாற்றங்கள் அவரது லிஸ்டில் உள்ளன. இந்நிலையில், கட்டணம் தொடர்பாக புதிய தகவலை அவர் அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டில், சாதாரண பயனாளர்களுக்கு ட்விட்டர் எப்போதுமே இலவசம்தான், எனினும், அரசு சார்ந்து மற்றும் வணிக ரீதியாக பயன்படுத்துபவர்களிடம் இருந்து சிறிது கட்டணம் வசூலிக்கப்படலாம்’ என குறிப்பிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: ரெப்போ ரேட் விகிதத்தை உயர்த்திய ரிசர்வ் வங்கி.. கடன்களுக்கான வட்டி உயரும்


    இதன் மூலம் வர்த்தகம் சார்ந்து ட்விட்டரை பயன்படுத்துபவர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது உறுதியாகியுள்ளது. இது தொடர்பான முழுமையாக விவரங்களை விரைவில் எலான் மஸ்க் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Elon Musk, Social media, Twitter

    அடுத்த செய்தி