ஹோம் /நியூஸ் /வணிகம் /

ட்விட்டருக்கு கம்பேக் கொடுக்கிறாரா ட்ரம்ப்? எலான் மஸ்க் கொடுத்த அதிரடி பதில்!

ட்விட்டருக்கு கம்பேக் கொடுக்கிறாரா ட்ரம்ப்? எலான் மஸ்க் கொடுத்த அதிரடி பதில்!

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

ஒரு தெளிவு வரும் வரை, கடந்த காலங்களில் தடை செய்யப்பட்ட எவரும் ட்விட்டரில் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • international, IndiaNewyorkNewyorkNewyork

  உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கிய பிறகு அதில் பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய முதல் நாளே ட்விட்டர் சி.இ.ஓ பராக் அகர்வால் உள்பட ஒரு சில முக்கிய நிர்வாகிகளை அவர் வீட்டுக்கு அனுப்பினார்.

  அதன் பின்னர் ட்விட்டர் ப்ளூ டிக் வேண்டுமென்றால் மாதம் 8 டாலர்கள் சந்தா கட்ட வேண்டும் என அறிவித்தார். இதுதொடர்பாக தொடர்ந்து சோசியல் மீடியாக்களில் கண்டனம் வந்து கொண்டிருக்கும் நிலையில்,யார் என்ன சொன்னாலும் மாதம் 8 டாலர்கள் கட்டணம் கட்டாயம் செலுத்த வேண்டும் என எலான் மஸ்க் கறாராக கூறியுள்ளார்.

  இந்தநிலையில் ட்விட்டர் தளத்தில் போலி கணக்குகள் அதிகம் இருப்பதாகவும் அந்த கணக்குகளை நீக்க எலான் மஸ்க் நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. எலான் மஸ்க்கும் ட்விட்டரை வாங்குவதற்கு முன்பாக போலி செய்திகள் மற்றும் வதந்திகள் பரவுவது குறித்து பலமுறை ட்வீட் செய்திருந்தார்.

  மேலும் எலான் மஸ்க் ட்விட்டர் தளத்தை வாங்கியது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நமது நாட்டை உண்மையாகவே வெறுக்கும் பைத்தியக்காரர்களின் கையில் ட்விட்டர் இனி இல்லை என்பது மகிழ்ச்சியாக இருப்பதாகவும், இனி ட்விட்டர் சோசியல் மீடியாவாக மிகப்பெரிய இலக்கை அடைய உள்ளதாகவும் தெரிவித்தார். அதற்கு முன்பு தான் ட்விட்டரை வாங்கினால் ட்ரம்ப் கணக்கு மீண்டும் மீட்கப்படும் என வெளிப்படையாகவே பேசியிருந்தார்.

  இதனிடையே பணம் செலுத்தினால் ப்ளூ டிக் கிடைக்கும் என்றால் சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்ட டெனால்ட் டிரம்ப், கங்கனா ராணவத் போன்றவர்களின் கணக்குகள் மீண்டும் ஆக்டிவேட் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு எலான் மஸ்க் விளக்கம் அளித்துள்ளார்.

  கடந்த புதன்கிழமை எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில், விதிகளை மீறியதற்காக நீக்கப்பட்ட எவரையும், அவ்வாறு செய்தற்கான உரிய விளக்கம் இல்லாமல் மீண்டும் ட்விட்டர் தளத்தில் இணைய அனுமதிக்காது. அதற்கு இன்னும் சில வாரங்கள் ஆகும்” என பதிவிட்டுள்ளார்.

  இதன் மூலம் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் டுவிட்டருக்கு வருவார் என்று தெரியவில்லை. ஒரு தெளிவு வரும் வரை, கடந்த காலங்களில் தடை செய்யப்பட்ட எவரும் ட்விட்டரில் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதும் மட்டும் தற்போது தெளிவாகியுள்ளது.

  நவம்பர் 8ம் தேதி இடைக்காலத் தேர்தலுக்கு அமெரிக்கா தயாராகிக்கொண்டிருக்கும் வேளையில், குடியரசுக் கட்சியினரிடமிருந்து தேர்தல் கையாளுதல் குறித்த அச்சங்கள் உள்ளன. ட்விட்டரில் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டின் தலைவரான யோயல் ரோத், 2022 அமெரிக்க இடைக்காலத் தேர்தல் குறித்த உரையாடல்களைக் கையாளுவதில் விழிப்புடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

  தலைமை மாறிய பின்பு காணாமல் போன 5 நிறுவனங்கள்.. சமாளிக்குமா ட்விட்டர்?

  கடந்த ஆண்டு அக்டோபரில் அவர் நிறுவிய ட்ரூத் சோஷியலில் டிரம்ப் இப்போது நான்கு மில்லியனுக்கும் அதிகமான யூஸர்களைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Trump, Twitter