ஹோம் /நியூஸ் /வணிகம் /

அதிகாரம் மக்களிடம் இருக்க வேண்டும்..! ஆனால் twitter ப்ளூ டிக்கிற்கு $8 கட்டாயம் - எலான் மஸ்க்!

அதிகாரம் மக்களிடம் இருக்க வேண்டும்..! ஆனால் twitter ப்ளூ டிக்கிற்கு $8 கட்டாயம் - எலான் மஸ்க்!

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

ப்ளூ டிக் கணக்குகள் வைத்திருப்பவர்கள் நீண்ட வீடியோ மற்றும் ஆடியோவை இடுகையிட முடியும் மற்றும் விளம்பரங்களைப் பாதியாக குறைத்துக்கொள்ள முடியும்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • chennai |

  ட்விட்டரில் ப்ளூ டிக் சரிபார்க்கப்பட்ட கணக்கிற்கு $20/மாதம் வசூலிக்க வேண்டும் என்ற முன்மொழிவுக்கு எதிர்ப்புகளை சந்தித்த பிறகு, ட்விட்டர் உரிமையாளரும் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலோன் மஸ்க் கட்டணத்தை திருத்தியுள்ளார்.

  எலான் மஸ்க் செவ்வாயன்று, மைக்ரோ பிளாக்கிங் தளத்தில் சரிபார்க்கப்பட்ட புளூ டிக் மக்கள் மாதம் 8 அமெரிக்க டாலர் கட்டாயம் செலுத்த வேண்டும் என்று அறிவித்தார்.

  நேற்று அவர் வெளியிட்ட ஒரு டீவீட்டில்” “டிவிட்டரின் தற்போதைய நீல நிற சரிபார்ப்பு குறி வைத்திருப்பவர் அல்லது இல்லாதவர் என்பது பிரபுக்கள் மற்றும் அடிமைகள் அமைப்பு போன்று முட்டாள்தனமானது. அதிகாரம் மக்களிடம் இருக்க வேண்டும்! யார் வேண்டுமானாலும் மாதத்திற்கு $8 செலுத்தி ப்ளூ டிக் சரிபார்க்கப்பட்ட கணக்கு அந்தஸ்தை பெற்றுக்கொள்ளலாம் ." என்று கூறினார்.

  மேலும், மக்களின் பொருட்கள் வாங்கும் சக்திக்கு ஏற்பஒவ் வொரு நாட்டிற்கும் விலை மாற்றியமைக்கப்படும் என்றும் மஸ்க் கூறினார். சரிபார்க்கப்பட்ட ட்விட்டர் பயனர்களும் பதில்கள், குறிப்புகள், ட்வீட் மாற்றங்கள் மற்றும் தேடல்களில் முன்னுரிமை பெறுவார்கள் . இது ஸ்பேம்/ஸ்கேமை கழிக்க அவசியம் தேவை என்று குறிப்பிட்டார்.

  மாமன்னன் ராஜராஜ சோழனின் 1,037 வது சதய விழா தொடக்கம்...

  மேலும், ப்ளூ டிக் கணக்குகள் வைத்திருப்பவர்கள் நீண்ட வீடியோ மற்றும் ஆடியோவை இடுகையிட முடியும் மற்றும் விளம்பரங்களைப் பாதியாக குறைத்துக்கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்..

  சலுகைகளை பட்டியலிட்ட மஸ்க், ட்விட்டரில் பணியாற்ற விரும்புபவர்களுக்கு ‘பேவால் பைபாஸ்’ எனும் சலுகையும் இருக்கும்  என்றார். இந்த புதிய நடவடிக்கைகள் உள்ளடக்கத்தை உருவாக்குபவர்களுக்கு வெகுமதி அளிக்கும் வகையில் இருப்பதோடு ட்விட்டருக்கு கூடுதல் வருவாய் அளிக்கும் என்றும் அவர் கூறினார்.

  மாதத்திற்கு $20 என்று கூறியதும் பயனாளர்களிடையே எழுந்த எதிர்ப்பையும் சலசலப்பையும் தற்காலிகமாக நிறுத்தவே இந்த $8 விலை என்பது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் விரைவில் அதன் தொகை உயர்த்தப்படும் என்று வணிக வட்டார தரப்பில் கூறப்படுகிறது.

  Published by:Ilakkiya GP
  First published:

  Tags: Elon Musk, Twitter