• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • Elon Musk: ஒரே ஒரு ட்விட்: ரூ.3.70 லட்சம் கோடியை இழந்த எலான் மஸ்க்!

Elon Musk: ஒரே ஒரு ட்விட்: ரூ.3.70 லட்சம் கோடியை இழந்த எலான் மஸ்க்!

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

2019 இல் மெக்கென்சி ஸ்காட்டிலிருந்து விவாகரத்து செய்ததைத் தொடர்ந்து ஜெஃப் பெசோஸ் 36 பில்லியன் டாலர் இழப்பை சந்தித்தார். இதுவே மிகப்பெரிய இழப்பாக கருதப்பட்ட நிலையில் தற்போது எலான் மஸ்க் அதனையும் கடந்துள்ளார்

  • Share this:
    உலகின் பெரும்பணக்காரரான எலான் மஸ்க் தனது  ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்த வாக்கெடுப்பு பதிவு மூலம் 2 நாட்களில் சுமார் ரூ.3.70 லட்சம் கோடியை இழந்துள்ளார்.

    அமெரிக்காவைச் சேர்ந்த பெரும்பணக்காரர் எலான் மாஸ்க், ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX), டெஸ்லா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களின் சி.இ.ஓ.வாக எலான் மஸ்க் உள்ளர்.  உலக பணக்காரர் பட்டியலில் முதலிடத்தில் உள்ள எலான் மாஸ்கின் சொத்து மதிப்பு சில தினங்களுக்கு முன்னர் 300 பில்லியன் டாலரை தாண்டியது.  இதன் மூலம் உலக பணக்காரர் தரவரிசையில் 300  பில்லியன் டாலர் சொத்து மதிப்பை கடந்த முதல் நபர் என்ற சிறப்பையும் அவர் படைத்தார்.

    இரண்டாம் இடத்தில் இருந்த அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் (Jeff  Bezos) சொத்து மதிப்பு 193 பில்லியன் டாலராக இருந்தது. இருவருக்கும் இடையிலான வித்தியாசம் மட்டுமே 143 பில்லியன் டாலராக இருந்தது. உலக பணக்காரர்கள் தரவரிசை பட்டியலில் 4ம் இடத்தில் உள்ள பில்கேட்ஸின் சொத்து மதிப்பை விட இந்த வித்தியாசம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

    60 பில்லியன் டாலர் இழப்பு:

    இந்நிலையில், டெஸ்லா நிறுவனத்தில் உள்ள தனது பங்கில் 10 சதவீதத்தை விற்கலாமா என ட்விட்டரில் வாக்கெடுப்பு பதிவு ஒன்றை எலான் மஸ்க் பதிவிட்டார். அமெரிக்காவின்  பெரும்  பணக்காரர்கள் வைத்திருக்கும் பங்குகள் விற்கப்படும்போதுதான், அவற்றின் மீது வரி விதிக்கப்படுகிறது. அதற்கு பதிலாக  முன்னதாகவே அத்தகைய பங்குகளைக் குறிவைத்து அதிகமான வரி விதிக்க வேண்டும் என்று ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் கோரிக்கையை முன்மொழிந்தனர். இதை தொடர்ந்து இத்தகைய ட்விட்டை அவர் பதிவிட்டதாக கூறப்படுகிறது.



    இதை தொடர்ந்து டெஸ்லா பங்குகளின் மதிப்பு சரியத் தொடங்கியது. இதனால்  2 நாட்களில் 50 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.3.70 லட்சம் கோடி) இழப்பை எலான் மஸ்க் சந்தித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.  2019 இல் மெக்கென்சி ஸ்காட்டிலிருந்து விவாகரத்து செய்ததைத் தொடர்ந்து ஜெஃப் பெசோஸ் 36 பில்லியன் டாலர் இழப்பை சந்தித்தார். இதுவே மிகப்பெரிய இழப்பாக கருதப்பட்ட நிலையில் தற்போது எலான் மஸ்க் அதனையும் கடந்துள்ளார்.

    இதையும் படிங்க: எளிமையாக நடைபெற்ற மலாலா யூசப்சாயி திருமணம்.. புகைப்படங்கள் வெளியீடு

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: